Traffic Movie Tamil Review
⭐⭐⭐.5/5 @primevideo ( Subtitles not good)
Tamil ❌
4 ஆஸ்கர் விருதுகளை வென்ற படம்.
போதைப்பொருளை தடுக்க முயலும் அமெரிக்கா & மெக்ஸிக்கோ அரசுகள், போதை பொருள் மாஃபியா செய்யும் வேலைகள் , இதை தடுக்க போராடும் போலீஸ் என நிறைய கதைகள் இருக்கு.
நடைமுறையில் போதை பொருள்களை தடை செய்வது எவ்வளவு கஷ்டம் என்பதை சொல்லிட்டு கடைசியாக ஒரு Powerful message சொல்லி படத்தை முடிக்கிறார்கள்.
படம் 2.30 மணி நேரம் ஓடுகிறது . ஆஸ்கார் படத்துக்கே உரிய அந்த Slowness இருக்கு.
டெக்னிக்கல்லா நல்லா இருக்கும். எடிட்டிங் , கேமரா , நடிப்பு என எல்லாமே சிறப்பு.. எடிட்டிங்கு ஆஸ்கர் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
போதை பொருட்களை தடுக்க US அதிபர் ஒரு சிறப்பு அமைப்பை உருவாக்குகிறார். அதுக்கு ஒரு அதிகாரியை நியமிக்கிறார்.
ஆனால் அந்த அதிகாரி பொண்ணு போதைக்கு அடிமையாகி வீட்டை விட்டு ஓடிறுது.
அந்த பொண்ணு கண்டுபிடிக்கிறது ஒரு டிராக், 2 போலீஸ் ஆபிசர்கள் ஒரு சாட்சியை பாதுகாக்க செய்யும் முயற்சிகள், கடத்தல் குரூப்பின் முக்கிய தலை போலீஸில் மாட்டிக்கொள்ள அவருடைய மனைவி தன்னுடைய சர்வைவலுக்காக போராடுவது, Mexico சைடு இரண்டு போலீஸ்காரர்கள் என பல ட்ராக்குகள் செல்கிறது.
க்ளைமாக்ஸ் 🙌
Good movie with powerful message. Go for it 👍
கருத்துகள்
கருத்துரையிடுக