The Drop Movie review
Crime, Drama, Thriller
⭐- Ing : Tom Hardy, Naomi Repace
⭐⭐⭐.5/5
Tamil & OTT ❌
பாரில் வேலை பார்க்கும் ஹீரோ அந்த ஏரியா கேங் நடுவுல மாட்டிக்கிட்டு சந்திக்கும் பிரச்சினைகள்.
Slow but engaging 👍
Not for everyone
ஹீரோ அதிகம் போசாத யாரு வம்புக்கும் போகாமல் பாரில் வேலை பார்க்கிறார். அந்த ஏரியாவில் உள்ள பெரிய கேங் குறிப்பிட்ட பார்களை ஒரே நாள் மட்டும் பேங்க் மாதிரி மாற்றுகிறார்கள்.
இந்த மாதிரி ஒரு நாளில் கேங் பணம் கொள்ளையடிக்க படுகிறது. இதனால் ஹீரோவுக்கு சிக்கல் ஆரம்பிக்கிறது.
இன்னொரு ட்ராக்கில் குப்பை தொட்டியில் கிடக்கும் நாயை காப்பாற்ற போய் ஹீரோயின் அறிமுகம் கிடைக்கிறது. ஹீரோயினின் பழைய நண்பணின் மூலமாக பிரச்சினை வருகிறது.
அப்பாவியான ஹீரோ எப்படி இந்த பிரச்சினைகளை சமாளித்து வெளியே வந்தாரா என்பதை சொல்கிறது படம்.
படம் மெதுவாக நகர்கிறது. ஆனால் படம் எதனை நோக்கி செல்கிறது என்பதை வைத்தே படத்தை நகர்த்துகிறார் இயக்குனர்.
வலிந்து திணிக்கப்பட்ட ட்விஸ்ட் எல்லாம் இல்லை.
Tom Hardy - செம நடிப்பு மனுஷன். ஆக்சன், சென்டிமென்ட்னு எல்லாத்துக்கும் மேட்ச் ஆகுறான் இவன் .
Naomi Repace - வழக்கம் போல நல்லா நடிச்சு இருக்கார்.
நல்ல ரைட்டிங்.
க்ளைமேக்ஸ் வொர்த்து 💥
கண்டிப்பாக பார்க்கலாம் ஆனால் கொஞ்சம் பொறுமை வேணும்.
கருத்துகள்
கருத்துரையிடுக