பொன்னியின் செல்வன் - 2
⭐⭐⭐.75/5
படம் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது.
நாவலில் இருந்து நிறையவே மாற்றங்கள் செய்து கிடைத்த 3 மணி நேரத்தில் பெரும்பாலான முக்கிய கதாபாத்திரங்களுக்கு closure கொடுத்து அவர்களின் பிண்ணனி கதை சொல்லி முடித்து இருக்காங்க .
கண்டிப்பாக பார்க்கலாம் 👍
நாவலை அப்படியே எதிர்பார்த்து போனால் ஏமாற்றம் தான்.
இந்த நாவலின் மொத்த பிரச்சினைக்கும் காரணம் கரிகாலன் - நந்தினி காதல் தான்.
இந்த பாகத்தில் இவர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது.
விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் செம கலக்கல்
முதல் பாகம் அளவிற்கு வந்தியதேவன் பாத்திரத்திற்கு வெயிட் இல்ல. ஆனாலும் படம் நெடுக வருகிறார்.
இளவரசராக ஜெயம் ரவி அசத்தல்.
மற்றபடி பூங்குழலி, சேத்தன் அமுதன் கேரக்டர்களை எல்லாம் விட்டுவிட்டார்கள்.
முதல் பாதி படம் செம ஸ்பீடாக போனது .
ஆனால் ரெண்டாவது பாதி அந்தளவுக்கு இல்ல.
அதுவும் அந்த போர் காட்சிகள் ரொம்ப ஒட்டவில்லை
நிறைய பேர் சொல்லும் அளவிற்கு மோசம் எல்லாம் இல்ல.
இப்ப இருக்குற நிலைமையில் குடும்பத்தோட குறிப்பாக பெற்றவர்களுடன் பார்க்கும் வகையில் பெரிய அளவில் படங்கள் வருவதில்லை.
இந்த படத்த தாரளமாக பெற்றோர்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் போய் பார்க்கலாம்
கருத்துகள்
கருத்துரையிடுக