Let Him Go - 2020 movie review
@Netflix
Tamil ❌
⭐⭐⭐.5/5
நல்ல கதையுடன் கூடிய சூப்பரான ஸ்லோ டிராமா த்ரில்லர்.
மகன், மருமகள், பேரன் என அழகான வசிக்கும் வயதான தம்பதி. மகன் இறந்து விட மருமகள் இன்னொருவனை மணந்து பேரனுடன் போய் விடுகிறாள்.
அவ வாக்கப்பட்ட குடும்பம் சரியில்ல என தெரிய வர பேரனை மீட்க கெளம்புகிறார்கள் இருவரும்.
1960 களில் Western Setup ல் நடக்கும் கதை.
படத்தின் முதல் பாதி ரோடு ட்ரிப் மாதிரி போகுது.
இரண்டாவது பாதியில் கொஞ்சம் வேகம் எடுக்குது.
வயதான தம்பதிகளாக Kevin Costner & Diane Lane சிறப்பான தேர்வு.
இரண்டாவது பாதியில் வரும் வில்லன் குரூப்பும் நல்ல நடிப்பு.
படம் மெதுவா தான் போகுது. ஆனா என்ன தான் ஆக போகுது என்ற ஒரு சஸ்பென்ஸ் உடன் நகர்வதால் ரொம்ப போர் அடிக்கவில்லை.
கண்டிப்பாக பார்க்கலாம் 👍
கருத்துகள்
கருத்துரையிடுக