அசுரன் - 1995 @ YouTube
Genre: SciFi, Drama, Thriller
Arnold நடிச்ச Predator படத்துல வர்ற ஏலியன் கான்செப்டை உருவி சந்தன கடத்தல் வீரப்பன் கதையை கொஞ்சம் கலந்து சென்டிமென்ட் மசாலா சேர்த்து தயாரானது தான் இந்த படம்.
தமிழ் சினிமாவில் Sci Fi , Alien Genre ல் நல்ல முயற்சி.
ஆனா படம் ஃப்ளாப்.
கதை , திரைக்கதை மற்றும் தயாரிப்பு - R.K . செல்வமணி
டைரக்சன் & ஒளிப்பதிவு - வேலு பிரபாகரன்
இசை: ஆதித்யன்.
அருண்பாண்டியன், நெப்போலியன், மன்சூர் அலிகான், ரோஜா, விசித்திரா , விஜயகுமார், செந்தில் போன்ற நட்சத்திரங்கள் நடித்து இருப்பார்கள்.
சக்கு சக்கு பாட்டை இங்க இருந்து எடுத்து தான் விக்ரம் படத்துல போட்டு விட்டு ஃபேமஸ் ஆக்கி விட்டாங்க.
போலீஸ் இடம் இருந்து தப்பிய வீரப்பன் மற்றும் அவனது தம்பி இருவரும் காட்டுக்குள் வசித்து வருகிறார்கள். பங்காளி சண்டை காரணமாக ஊருக்குள்ள வந்தா போலீஸிடம் போட்டுக் கொடுக்க சொந்தக்காரர்கள் ரெடியாக இருக்கிறார்கள்.
போலீஸ் இவர்களை தீவிரமாக தேடும் சூழலில் அருண்பாண்டியன் விவசாய அதிகாரியாக ஊருக்குள் வருகிறார். விசித்திரா & ரோஜா கூட சுத்துறார்.
இந்த பிரச்சினைகளை வைத்தே படம் ரொம்ப நேரம் ஓடுது. கடைசியாக ஒரு வழியா அருண்பாண்டியன் போலீஸ் என்று தெரிய வந்ததும்.
அவரோட சேர்ந்து 5 பேர் வீரப்பனை பிடிக்க Predator Style டிரெஸ் & துப்பாக்கிகளுடன் காட்டுக்குள்
அங்க போனதுக்கு அப்புறம் தான் ட்விஸ்ட்டு.. அது என்னனு படத்துல பாருங்கள்.
அசுரன் கேரக்டர் கடைசி 10 நிமிஷமே வருது. மற்ற டிராக் கதைகளும் ரொம்ப மொக்கையா தான் போகுது. செந்தில் காமெடி சுத்தமா ஒர்க் அவுட் ஆகல.
படத்துல ஒர்க் ஆனது என்னனு பார்த்தா லொக்கேஷன்கள் . காடுகள், மலைகள், அருவிகள் என சுத்தி சுத்தி எடுத்து இருக்காங்க.
கடைசி அரைமணி நேரம் பாக்கலாம்.
ஆனா படத்துல வீரர்கள் அவ்வளவு சீரியஸா அசுரனையும் வீரப்பனையும் தேடிட்டு இருக்கப்ப அருண் பாண்டியன்+ விசித்திராக்கு ஒரு மிட்நைட் மசாலா பாட்டும், ரோஜாவுக்கு காட்டுக்குள்ள ஒரு ஐட்டம் சாங்கும் வச்சீங்க பாருங்க..
மறக்க மாட்டேன் ப்ரோ.jpg
கருத்துகள்
கருத்துரையிடுக