65 movie review in Tamil
Tamil ✅ @Amazon (Not in India)
⭐⭐.75/5
65 மில்லியன் வருடங்களுக்கு முன்பு விண்கற்கள் பூமியில் மோதியதில் டைனோசர்கள் இனமே அழிந்து விட்டது என படிச்சு இருப்போம்.
அந்த நிகழ்வை வைத்து வந்துள்ள படம் இது.
வேறு கிரகத்தில் இருந்து வரும் ஒரு விண்வெளி வீரன் விண்கற்கள் மோதியதால் வழி தவறி பூமியில் லேண்ட் ஆகிறான்.
அந்த விண்கலத்தில் இருந்து தப்பிய இன்னொரு நபர் ஒரு சிறுமி.
தப்பிக்க உதவும் கலம் 15 கிமீ தாண்டி மலை மீது இருக்கிறது. இந்த பயணம் தான் படம்.
நல்ல கான்செப்ட் ஆனா புதுசா எதுவும் இல்ல. படத்துல வர்றது ரெண்டு பேரு இதுல ஒருத்தவங்க பேசுறது இன்னொருத்தருக்கு புரியாது. பாதி நேரம் சப்டைட்டில் "Talking foreign language" nu போடுறானுக.
டைனோசர்கள் போர்ஷன் எல்லாம் நல்லா இருந்தது சென்டிமென்ட் காட்சிகள் அவ்வளவா எடுபடல.
அட்வென்ட்சர்கள், டைனோசர்கள் படம் பிடிக்கும் என்பவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.
Jurassic Park franchise க்கு வெளியே ஒரு டைனோசர் படம் வந்திருப்பது நல்ல விஷயம்.
கருத்துகள்
கருத்துரையிடுக