Shadow And Bone - Season 1 and 2 Review
Tamil ❌ @netflix
S1 - 8 Episodes - ⭐⭐⭐⭐/5
S2 - 8 Episodes - ⭐⭐⭐⭐.5/5
ஒரு சாதாரண மேப் உருவாக்கும் பெண் எப்படி நாட்டையே அழிக்கும் மந்திர சக்தியிடம் இருந்து மக்களை காப்பாற்றுகிறாள்.
Action, Adventure, Fantasy, Magic, Romance எல்லாமே இருக்கு ☺️
Go for it 👍
இந்த தொடர் முழுவதும் கற்பனை உலகத்தில் நடக்கும் தொடர். ஒரு பக்கம் சாதாரண மனிதர்கள், இன்னொரு பக்கம் மந்திர சக்தி படைத்த மக்கள் என பல வகையான மக்கள் கலந்து வாழும் உலகம்.
இந்த உலகத்துல என்ன பிரச்சினை என்றால் ஒரு ஏரியால "Fold" என்கிற ஒரு கருப்பு மேகம் சூழ்ந்து இருக்குது . அது நாளுக்கு நாள் வளர்ந்துட்டே வருது. அந்த மேகம் இருக்கும் ஏரியாக்குள்ள போனவங்க திரும்ப வர்றது இல்ல.
இப்ப நம்ம ஹீரோயின் & ஹீரோ ரெண்டு பேரும் சின்ன வயதில் இருந்து அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து வர்றாங்க.
ஒரு கட்டத்தில் ஹீரோயின்க்கு இந்த Fold ஐ அழிக்க சக்தி இருக்கு என தெரிய வருகிறது.
முதல் சீசன் இந்த Fold ஐ அழிக்க போராடுவதை பற்றியது.
இன்னொரு டிராக்கில் ஒரு குழு சின்ன சின்ன திருட்டு வேலைகள் பண்ணிட்டு இருப்பாங்க.
இதுமாதிரி நிறைய கிளை கதைகள் இருக்கு.
இரண்டாவது சீசன் வில்லனை அழிக்க போராடுவது பற்றியது.
முதல் சீசனில் வந்த கிளை கதைகள் மற்றும் நிறைய கதாபாத்திரங்கள் எல்லாரும் ஹீரோயினுக்கு உதவி பண்ண வருவார்கள்.
மொத்தமா பாத்தா இரண்டாவது சீசன் முதல் சீசனை விட நல்லா இருந்தது.
அதுலயும் அந்த சின்ன சின்ன திருட்டு பண்ற அந்த கூட்டத்துக்கு முக்கியமான ரோல் இதுல. Inej கதாபாத்திரத்துக்கு மாஸ் சீன்ஸ் இருக்கு.
நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட தொடர் இது. புது உலகத்தை உருவாக்கி அதில் உள்ள கேரக்டர்களை உலாவ விடுவது சவாலானது. GOT மாதிரி அதிக பட்ஜெட் இல்லை என்றாலும் நன்றாகவே பண்ணி இருக்கிறார்கள்.
லொக்கேஷன்கள், உடைகள், கேமரா என எல்லாமே நன்றாக இருக்கிறது.
சில எபிசோட்கள் கொஞ்சம் மெதுவாக இருந்தாலும் மற்ற எபிசோட்களில் ஈடுகட்டி விடுகிறார்கள்.
Fantasy Genre ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக