#WiFi கடைசி 2 தடவ ஊருக்கு வந்தப்பவும் ரொம்ப ரொம்ப ஸ்லோவா இருந்தது. நானும் கம்ப்ளெய்ன்ட் பண்ணா அவங்க பக்கம் நல்லா தான் இருக்குனு சொல்லிட்டாங்க.
எப்ப பார்த்தாலும் நம்ம வீட்ட சுத்தி 20 பசங்க உக்காந்துகிட்டே இருக்காங்க. எதையாவது மொபைல்ல பாக்குறானுக இல்ல கேம் விளையாடுறானுகனு அம்மா கம்ப்ளெய்ன்ட்.
நானும் அங்குட்டு போங்கடா னு சொன்னா மறுபடியும் கொஞ்ச நேரத்துல வந்து உக்காந்துக்குறானுக.
நானும் எரிச்சல்ல போங்கடானு விட்டுட்டேன்.
நேத்து நைட்டு திடீர்னு ஒரு டவுட் ஒரு வேளை நம்ம Wifi ஐயை யூஸ் பண்றாங்களா என்று..
அதுலாம் இருக்காதுன்னு நானே சொல்லிகிட்டேன். காலைல ரொம்ப ஸலோ. சரினு Router ல Login பண்ணி எத்தனை Device கனெக்ட் ஆகிருக்குனு பார்த்தா கிட்டத்தட்ட 15+ devices கனெக்ட் ஆகிருக்கு.
எங்கப்பா பேர்ல இருக்கதால.. அவர் மொபைல் வாங்கி டேட்டா எவ்வளவு யூஸ் ஆகிருக்குனு பார்த்தா கடைசி 3 மாசமும் 400+ GB. SMS அவருக்கு அப்ப அப்ப வந்துட்டே இருந்து இருக்கு. இவருக்கு அத பத்தி தெரியாததால ஒன்னும் கண்டுக்கல.
எங்க அம்மா அப்பா வீடியோ கால் பேசுவதோடு சரி. 400 GB உபயோகிக்க வாய்ப்பே இல்லை.
அதுனால இந்த பசங்க தான் யூஸ் பண்ணி இருக்காங்கனு கன்பார்ம் ஆகிடுச்சு.
இன்னிக்கு சத்தம் இல்லாமல் பாஸ்வேர்டு மாத்தி விட்டு இருக்கேன். எல்லாம நெட் இல்லாமல் கிறுக்கு பிடிச்ச மாதிரி திரியுறானுக.
இப்ப அடுத்த டவுட் எப்படி கேம் விளையாடும் இந்த பசங்களுக்கு இம்புட்டு அறிவு ? எப்படி பாஸ்வேர்டு கண்டுபிடிச்சாங்கனு..
அப்புறம் தான் ஞாபகம் வந்தது கொஞ்சம் மாசம் முன்னாடி நெட் வரலனு கம்ப்ளெய்ண்ட் பண்ணிருக்காங்க. Net provider தெரு பையன் ஒருத்தனை அஸிஸ்ட்டென்ட்டா வைச்சு இருக்காங்க.
அந்த பையன் எங்கப்பா கிட்டா பாஸ்வேர்டு மாத்திக்கோங்க ஒரு சேஃப்டிக்குனு சொல்லி இருக்கான்.
இவரும் எனக்கு போன் பண்ணாரு நான் ஏதோ மீட்டிங்ல இருந்ததால் அந்த பையன் சொல்றத கேட்டு மாத்திக்கோங்க என்று சொல்லிட்டேன்.
இந்த பையனும் எங்கப்பா கிட்ட 8 டிஜிட் நம்பர் ஒன்னு வாங்கி அத பாஸ்வேர்டா செட் பண்ணிட்டு போய் இருக்கான்.
இப்ப எனக்கு அந்த பையன் மேல தான் டவுட்.
இதுனால பெரிய சேதாரம் ஒன்னும் இல்லை. ஆனால் இது ரொம்பவே ஆபத்தான ஒன்னு. அதுனால சோம்பேறித்தனம் படமா அப்ப அப்ப WiFi password மாத்திடுங்க.
பாஸ்வேர்டு செட் பண்ணும் போது கஷ்டமான பாஸ்வேர்டாக வைக்கவும். அதை நீங்களே மாற்றுவதற்கு கற்றுக்கொள்ளவும்.
தெரிஞ்ச பசங்க தானனு அசால்ட்டாக இருக்காதீர்கள்
👌
பதிலளிநீக்கு