The Menu Tamil Review
ஒரு வேளை சாப்பாட்டுக்கு $1250 (₹1L +) காசு கொடுத்து ஒரு தீவுக்கு போற எலைட் குரூப் சந்திக்கும் பிரச்சினைகள் தான் படம்.
அதுல ஹீரோயின் எதிர்பாராதவிதமாக மாட்டுகிறாள். யாராவது இங்கிருந்து தப்பித்தார்களா என்பதை படத்தில் பாருங்கள்.
தீவுக்கு போகும் இந்த குரூப்பை வரவேற்கிறார் ஒரு ஸ்டிரிக்ட் ஆபீசரான தலைமை சமையல்காரர்.
சாப்பாடு அதை சாப்பிடும் முறை பற்றி பல ஸ்பீச்சுகளை கொடுக்கிறார்.
ஒவ்வொரு சாப்பாடு ஐட்டங்களாக வர ஆரம்பிக்கிறது. நேரம் போக போக பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கிறது.
இந்த குரூப்பில் ஹீரோயின் மட்டும் எலைட் குரூப்பிற்கு சம்பந்தமே இல்லாமல் இருப்பதால் Chef க்கு அவள் மீது ஒரு சின்ன Soft Corner.
கடைசில என்ன ஆனது என்று படத்தில் பாருங்கள்.
படம் முதல் பாதி நல்ல சஸ்பென்ஸ் கடைசில லைட்டா இழுக்குற மாதிரி தெரிந்தது.
ஒவ்வொரு உணவும் , அதுக்கு கொடுக்கப்படும் விளக்கம் மற்றும் அதுனுடைய குளோஸ் அப் ஷாட் என அனைத்தும் சிறப்பு.
ஒரு விதமான டார்க் காமெடி மற்றும் இப்ப உள்ள Foodie கலாச்சாரத்தை குத்தி காட்டுகிறது.
Chef ஆக வரும் Ralph Fiennes மிரட்டி இருக்கிறார். ஹீரோயின் Anya Taylor-Joy எப்பவும் போல நல்ல நடிப்பு.
இந்த Chef மற்றும் அவருடன் வேலை பார்க்கும் நபர்கள் யார் என்பது புரியவில்லை.
கண்டிப்பாக பார்க்கலாம் 👍
கருத்துகள்
கருத்துரையிடுக