The Glory Series Review
#TheGlory - #Korean S1,8 Ep - Review #Netflix
⭐⭐⭐⭐/5
"Revenge Is A Dish Best Served Cold"
ஸ்கூல்ல கொடூரமான டார்ச்சருக்கு உள்ளான பெண் அதுக்கு காரணமானவர்களை பழி வாங்கும் கதை
Plot, நடிப்பு &Engaging 👌
Revenge Genre - கொரியன்களை அடிச்சுக்க முடியாது 🔥
Highly Recommended 👍
ஸ்கூல்ல ஒரு அப்பாவி பொண்ணை 5 பேர் கொண்ட ஒரு குரூப் படு பயங்கரமா கொடுமை படுத்துறாங்க.
பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் என யாரும் உதவாத நிலையில் உயிரை காப்பாற்றிக்கொள்ள பள்ளியில் இருந்து விலகுகிறாள்.
பிறகு ஒரு ஃபேக்டரியில் வேலை பார்த்து தனியாக படிச்சு காலேஜ் போய் டீச்சர் வேலையில் சேர்கிறார்.
கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆன நிலையில் மெதுவாக தன்னுடைய பழிவாங்கும் படலத்தை ஆரம்பிக்கிறார்.
எதுக்கு ஸ்கூல் டீச்சர் ஆனாள், எப்படி பழி வாங்க போகிறாள் என்பதை சுவாரஸ்யமாக சொல்கிறது தொடர்.
தொடர் செம டார்க்கா இருக்குது.
அதுக்காக கொடூரமான காட்சிகள் இருக்குதா என்றால் இல்லை. பயங்கர வயலண்ட்டாக இருக்குதா என்றால் அதுவும் இல்லை.
ஆனால் ஹீரோயினுக்கு நடக்கும் கொடுமைகளை பார்த்து அவளுக்காக ஃபீல் பண்ண வைத்து விடுகிறார் இயக்குனர்.
இந்த மாதிரியான உணர்வுகளை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் கொரியன் இயக்குநர்கள் வல்லவர்கள்.
இதற்கு நடுவில் ஒரு இன்ட்ரெஸ்டிங்கான லவ் ஸ்டோரி இருக்குது.
ஆரம்பத்தில் மெதுவாக போனாலும் அவள் போட்ட திட்டங்களை செயல்படுத்த ஆரம்பிக்கும் போது நமக்கு தானாகவே ஆர்வம் வந்து விடுகிறது.
சமீபத்தில் பார்த்த தொடர்களில் மிகவும் சிறப்பான ஒரு தொடர் .
கண்டிப்பாக பாருங்கள் .
கருத்துகள்
கருத்துரையிடுக