Nothing 1 Phone Tamil Review
Mobile #Review - @nothing 1
Rs. 27.5K @amazonIN
+Ve
- Unique Design 💥
- Premium Built
- Display &Speed 👌
- Camera 👍
- Stock Android
-Ve
- Battery Ok
- No memory slot
- No charger
Verdict:
Falls between midrange & Premium
I liked it ❤️
#nothingphone1
Detailed Review 👇
முதலில் இந்த பிராண்ட் ஹிஸ்டரியை பார்ப்போம்.
Nothing கம்பெனியை உருவாக்கியவர் Carl Pei.
இவரும் Pete Lau என்பவரும் சேர்ந்து தான் 2013 ல் One Plus கம்பெனியை உருவாக்கியவர்கள்.
October, 2020 ல One Plus ல இருந்து வெளிய வந்து இந்த மொபைல் கம்பெனியை ஆரம்பித்து இருக்கிறார்.
இந்த மொபைல் 2022 July மாதம் வெளியானது. ஆரம்பத்தில் பல Bug ல் இருந்தது அதன் பிறகு கிட்டத்தட்ட 10+ update களை கொடுத்து ஒரு வழியாக Stable பண்ணி இருக்காங்க.
இவங்க 3 வருஷம் ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ் மட்டும் 4 வருஷம் செக்யூரிட்டி அப்டேட்ஸ் கொடுப்பதாக உறுதி கொடுத்து உள்ளார்கள்.
Packaging simple'a ஒரு பாக்ஸ்ல வந்ததது. பாக்க நல்லா இருந்தது .
அமேசான் அந்த பேக் மேல அவனோட அட்டையை சுத்தி விட்டு இருந்தான்.
Box ல மொபைல், C Type Cable Without Charger, Sim Ejector Pin இருந்தது.
மொபைல் பாக்க அவ்வளவு சூப்பரா இருந்தது. Panel பெரும்பாலும் அலுமினியம்ல போட்டு இருக்காங்க. நல்ல ஒரு Premium look and feel கொடுக்குது.
பின்பக்கம் முழுவதும் Transperant'a விட்டு இருக்காங்க. அதாவது பின்பக்கம் ஒரு கண்ணாடி வைச்சு இருக்கானுக. அதுல நிறைய LED Lights இருக்கு . அது எதுக்குன்னு அப்புறமா பாக்கலாம்.
இந்த மாதிரி டிசைன்ல எந்த மொபைலும் இப்போதைக்கு மார்க்கெட்ல கெடையாது.
இதுல Android OS யை வைச்சு அவங்க உருவாக்கி இருக்கும் Nothing OS . ரொம்பவே சிம்பிளான அழகான UI. Bloatware எதுவும் இல்லை மற்றும் தேவையான கூகுள் ஆப்கள் மட்டுமே இருந்தது.
இந்த போன்ல முக்கியமா Highlight பண்ற விஷயம் Glyphs Interface. அதாவது பின்னாடி இருக்கும் LED lights.
இந்த Glyph ல ரிங்டோன் & லைட் ரெண்டையும் Sync பண்ணி விட்டு இருக்காங்க. அதனால கால் வர்றப்ப நீங்க தேர்ந்தெடுத்த ரிங்டோன் உடன் பின்னாடி லைட் எரியுறது வித்தியாசமா இருக்கும். சார்ஜ் இன்டிகேட்டர் கூட இந்த லைட் வைச்சு பாக்கலாம்.
ஒவ்வொரு Contact நம்பருக்கும் தனித்தனியாக இந்த Glyphs செட் பண்ணிக்கலாம். அதுனால நீங்க போன் எடுக்காமல் யார் கால் பண்ணுனா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வயர்லெஸ் சார்ஜிங் பண்ணும் வசதி இருக்குனு படிச்சேன் . மற்றபடி வேற ஏதாவது Wireless Charging சப்போர்ட் பண்ற device ஐ இந்த மொபைல் மூலமாக சார்ஜ் பண்ணிக்கலாம்.
கேமரா நல்லா இருக்கு. Low Light ல நைட் மோட் போட்டோஸ் நல்லா வந்து இருந்தது.
நான் முக்கியமான மொபைல் யூஸ் பண்றது படம் பார்க்க & போட்டோ எடுக்க. ரெண்டுமே நல்லா தான் இருக்கு.
இது 45W சார்ஜிங். அதுனால சாதாரண சார்ஜர்ல போட்டா ரொம்ப நேரம் ஆகுது. இவ்வளவுக்கும் நான் யூஜ் பண்ண Samsung Charger 25W னு நினைக்கிறேன். அதுல மெதுவாக தான் சார்ஜ் ஏறுச்சு.ட்விட்டர்ல நண்பர் ஒருவர் MI 33W சார்ஜர் ரெக்கமண்ட் பண்ணாருனு வாங்கி இருக்கேன் . அதுல நல்லா ஸ்பீடா சார்ஜ் ஏறுது.
நார்மல் ஆண்ட்ராய்டு போன் போர் அடுச்சுருச்சு .. iPhone மாதிரி ப்ரீமியம் லுக் அண்டு ஃபீல் வேணும் ஆனா எனக்கு 60K கொடுத்து வாங்க விருப்பம் இல்லை என்பவர்கள் தாராளமாக இந்த மொபைல் வாங்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக