Jung_E Movie Review
#Korean @netflix Sci-fi/ Action
Tamil ❌
- Train To Busan டைரக்டரின் படம்
- Post Apocalyptic setup
- படம் முழுவதும் ரோபாட்கள்&AI Tech தான் ஆனா படத்தை நகர்த்துவது அம்மா - மகள் சென்ட்டிமென்ட்
- ஆரம்பம் & முடிவு சூப்பர். நடுல இழுவை.
- Action 🔥
- Decent Watch 👍
உலகம் பெரும்பாலும் அழிந்து விடுகிறது. மனிதர்கள் விண்வெளிக்கு குடியேறுகிறார்கள். அங்கு ஒரு குரூப் புரட்சியில் இறங்குகிறது. இந்த குரூப்புக்கும் , மத்த மனிதர்களுக்கும் நடுவே கிட்டத்தட்ட 40 வருடங்களாக போர் நடக்கின்றது.
இந்த போரை எதிர்கொள்ள ஒரு கம்பெனி 35 வருஷத்துக்கு முன்னாடி இறந்து போன வீராங்கனையின் மூளையில் உள்ள போர் தந்திரங்களை காப்பி பண்ணி AI based ரோபோவை உருவாக்க முயற்சி செய்கிறது.
இந்த புராஜெக்ட்டுக்கு தலைமை இறந்து போன வீராங்கனையின் மகள். சில காரணங்களால் இந்த புராஜெக்ட் நிறுத்தப்படுகிறது. இதனால் மகள் எடுக்கும் முடிவுகள் எப்படியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை படத்தில் பாருங்கள்.
படம் செமயான ஆக்சன் சீக்குவென்ஸ் உடன் ஆரம்பிக்கிறது. அதுக்கு அப்புறம் ஒன்னுமே இல்லாமல் மெதுவாக நகர்கிறது. கடைசியில் மறுபடியும் ஒரு ஆக்சன் சீக்குவென்ஸ் உடன் முடிகிறது.
உருவாக்கிய உலகம், காட்டப்படும் டெக்னாலஜி எடுத்த விதம் எல்லாம் செமயாக உள்ளது. ஆக்சன் காட்சிகள் சூப்பர்.
கண்டிப்பாக ஒரு டைம் பாக்கலாம் 👍
கருத்துகள்
கருத்துரையிடுக