முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Cloud 11 A OnePlus Launch Event - Preview

Cloud 11 A #OnePlus Launch Event - Preview  ரொம்ப வருஷம் கழிச்சு #OnePlus இந்தியால அவர்களின் புதிய Products களை அறிமுகப்படுத்தப் போகிறது.  இந்த நிகழ்ச்சி Feb 7 ஆம் தேதி 7.30 PM மணிக்கு டெல்லியில் நடக்க போகுது.  இதுல 5 பொருட்களை அறிமுகப்படுத்தப் போகிறது அது என்னனு பார்க்கலாம்.  1. One Plus 11 5G Price: 55K around (Rumours) Screen : 6.7" 1440x3216 pixels Camera: 50MP 4320 P Memory: 12/16GB RAM Processor: Snapdragon 8 Gen 2 Battery: 5000mAh #oneplus115g  2. One Plus 11R - 5G  Price: Around 45K (Rumours)  Screen: 6.7" 1080x2412 pixels Camera: 50MP 2160p Memory: 8-16GB RAM Processor: Snapdragon 8+ Gen 1 Battery:5000mAh #OnePlus11R  3. OnePlus Pad Price: 40K (Rumours)  OS: Android 12 Processor: Qualcomm Snapdragon 865 RAM : 6 GB Rear Camera: Dual (13MP + 5MP) Screen: 12.4 inches (31.5 cms) Battery: 10090 mAh 4. OnePlus Buds Pro 2  Price: Around 10K (Rumours) TWS Earbuds In the Ear Wireless Headphones Bluetooth 5.3 Active Noise Cancellation Microphone 10 m Range 10 Hz (Min) -

Kill List - 2001

Kill List  movie review  ⭐⭐⭐.5/5 Tamil ❌ OTT ❌ சமீபத்தில் பார்த்த Most disturbing and violent film . Strictly 18+ 🚫 "Mini" Midsommer காசுக்காக கொலை செய்யும் நண்பர்களான இரண்டு அடியாட்களின் கதை கேங்ஸ்டர் படம்‌ மாதிரி தெரியும் ஆனா படம் எதிர்பார்க்காத பாதையில் போகும் Climax 😱😷

Narvik: Hitler's First Defeat - 2022

 Narvik: Hitler's First Defeat Tamil Review  War, Drama, History @NetflixIndia #Norwegian ⭐⭐⭐/5 Tamil ❌ 2 ஆம் உலகப்போரில் ஜெர்மனி மற்றும் நார்வேயின் நட்பு நாடுகளுக்கு இடையே ஒரு சின்ன ஊரை கைப்பற்ற நடக்கும் போராட்டம் இதில் சிக்கிக் கொள்ளும் குடும்பத்தை பற்றிய படம் Ok watch 👍

Nothing 1 Phone Review

Nothing 1 Phone Tamil Review  Mobile #Review - @nothing 1  Rs. 27.5K @amazonIN +Ve - Unique Design 💥 - Premium Built - Display &Speed 👌 - Camera 👍 - Stock Android   -Ve - Battery Ok - No memory slot - No charger Verdict: Falls between midrange & Premium I liked it ❤️ #nothingphone1 Detailed Review 👇 முதலில் இந்த பிராண்ட் ஹிஸ்டரியை பார்ப்போம்.  Nothing கம்பெனியை உருவாக்கியவர் Carl Pei.  இவரும் Pete Lau என்பவரும் சேர்ந்து தான் 2013 ல் One Plus கம்பெனியை உருவாக்கியவர்கள்.  October, 2020 ல One Plus ல இருந்து வெளிய வந்து இந்த மொபைல் கம்பெனியை ஆரம்பித்து இருக்கிறார்.  இந்த மொபைல் 2022 July மாதம் வெளியானது. ஆரம்பத்தில் பல Bug ல் இருந்தது‌ அதன் பிறகு கிட்டத்தட்ட 10+ update களை கொடுத்து ஒரு வழியாக Stable பண்ணி இருக்காங்க.  இவங்க 3 வருஷம் ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ் மட்டும் 4 வருஷம் செக்யூரிட்டி அப்டேட்ஸ் கொடுப்பதாக உறுதி கொடுத்து உள்ளார்கள். Packaging simple'a ஒரு பாக்ஸ்ல வந்ததது. பாக்க நல்லா இருந்தது .  அமேசான் அந்த பேக் மேல அவனோட அட்டையை சுத்தி விட்டு இருந்தான்.  Box ல மொபைல், C T

m3gan - 2022

m3gan Tamil Review  ⭐⭐⭐.5/5  #scifi #horror #Tamil ❌ - வில்லன் சிட்டி ரோபோட்டின் குட்டி வெர்சன் - மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் படி குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ரோபோ‌ பொம்மை உருவாக்கியவர்களை கொல்ல முயற்சி செய்கிறது - எளிமையான கதை, நல்ல ரைட்டிங்,  🤏 ஹாரர், Engaging 👍

Jung_E - 2023

Jung_E Movie Review  #Korean @netflix Sci-fi/ Action Tamil ❌ - Train To Busan டைரக்டரின் படம் - Post Apocalyptic setup - படம் முழுவதும் ரோபாட்கள்&AI Tech  தான் ஆனா படத்தை நகர்த்துவது அம்மா - மகள் சென்ட்டிமென்ட் - ஆரம்பம் & முடிவு சூப்பர். நடுல இழுவை. - Action 🔥 - Decent Watch 👍 உலகம் பெரும்பாலும் அழிந்து விடுகிறது. மனிதர்கள் விண்வெளிக்கு குடியேறுகிறார்கள். அங்கு ஒரு குரூப் புரட்சியில் இறங்குகிறது. இந்த குரூப்புக்கும் , மத்த மனிதர்களுக்கும் நடுவே கிட்டத்தட்ட 40 வருடங்களாக போர் நடக்கின்றது. இந்த போரை எதிர்கொள்ள ஒரு கம்பெனி 35 வருஷத்துக்கு முன்னாடி இறந்து போன  வீராங்கனையின்  மூளையில் உள்ள போர் தந்திரங்களை காப்பி பண்ணி AI based ரோபோவை உருவாக்க முயற்சி செய்கிறது.  இந்த புராஜெக்ட்டுக்கு தலைமை இறந்து போன வீராங்கனையின் மகள். சில காரணங்களால் இந்த புராஜெக்ட் நிறுத்தப்படுகிறது. இதனால் மகள் எடுக்கும் முடிவுகள் எப்படியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை படத்தில் பாருங்கள்.  படம் செமயான ஆக்சன் சீக்குவென்ஸ் உடன் ஆரம்பிக்கிறது. அதுக்கு அப்புறம் ஒன்னுமே இல்லாமல் மெதுவாக நகர்கிறது. கடைசி

Deadstream - 2022

Deadstream movie review  #horror #comedy @Shudder  Tamil ❌ ⭐⭐⭐/5 - ஒரு YouTuber views தேத்துறதுக்கு பாழடைந்த பங்களாக்கு போய் லைவ் ஸ்ட்ரீமிங் பண்றான் - ஏதாச்சயா அங்க உள்ள பேயை கிளப்பி விட அங்க இருந்து தப்பித்தானா?  - Few Jump Scares 👍, Found Footage Style 👌 Go for it 🤟

WiFi Password - விழிப்புணர்வு

#WiFi கடைசி 2 தடவ ஊருக்கு வந்தப்பவும் ரொம்ப ரொம்ப ஸ்லோவா இருந்தது. நானும் கம்ப்ளெய்ன்ட் பண்ணா அவங்க பக்கம் நல்லா தான் இருக்குனு சொல்லிட்டாங்க.  எப்ப பார்த்தாலும் நம்ம வீட்ட சுத்தி 20 பசங்க உக்காந்துகிட்டே இருக்காங்க. எதையாவது மொபைல்ல பாக்குறானுக இல்ல கேம் விளையாடுறானுகனு அம்மா கம்ப்ளெய்ன்ட்.  நானும் அங்குட்டு போங்கடா னு சொன்னா மறுபடியும் கொஞ்ச நேரத்துல வந்து உக்காந்துக்குறானுக. நானும் எரிச்சல்ல போங்கடானு விட்டுட்டேன்.   நேத்து நைட்டு திடீர்னு ஒரு டவுட் ஒரு வேளை நம்ம Wifi ஐயை யூஸ் பண்றாங்களா என்று..  அதுலாம் இருக்காதுன்னு நானே சொல்லிகிட்டேன். காலைல ரொம்ப ஸலோ. சரினு Router ல Login பண்ணி எத்தனை Device கனெக்ட் ஆகிருக்குனு பார்த்தா கிட்டத்தட்ட 15+ devices கனெக்ட் ஆகிருக்கு.  எங்கப்பா பேர்ல இருக்கதால.. அவர் மொபைல் வாங்கி டேட்டா எவ்வளவு யூஸ் ஆகிருக்குனு பார்த்தா கடைசி 3 மாசமும் 400+ GB.  SMS அவருக்கு அப்ப அப்ப வந்துட்டே இருந்து இருக்கு. இவருக்கு அத பத்தி தெரியாததால ஒன்னும் கண்டுக்கல.  எங்க அம்மா அப்பா வீடியோ கால்‌ பேசுவதோடு சரி.  400 GB உபயோகிக்க வாய்ப்பே இல்லை.  அதுனால இந்த பசங்க தான் யூஸ்

Sick - 2022

Sick Tamil Review  Genre: #slasher #horror thriller Tamil ❌ ⭐⭐⭐.5 / 5  - கோவிட் டைம்மில் Quarantine பண்ண தனியாக உள்ள பங்களாவுக்கு செல்லும் தோழிகள். இவங்களை கொல்ல வரும் கில்லர் - வழக்கமான Slasher படம் & நல்லா இருக்கு 👍 - 30 நிமிஷம் ஸ்லோ, அடுத்த 1 Hour 🔥🔥 ஏப்ரல் 2020 ல் கோவிட் டைம்மில் இருந்த சூழ்நிலையை வைத்து எடுக்கப்பட்ட ஒரு Slasher படம் இது.  இந்த படதோட ரைட்டர் Scream படங்களுக்கு பணிபுரிந்து உள்ளார். கோவிட் காரணமாக ஊருக்கு வெளியே பக்கத்துல யாருமே வசிக்காத ஒரு பங்களாவுக்கு ஹீரோயின் மற்றும் அவளது ப்ரண்ட் இருவரும் செல்கிறார்கள்.  நன்றாக போய் கொண்டு இருக்கையில் முகமூடி போட்ட ஒருவன் இவரகளை கொல்ல வருகிறான். இவனிடம் இருந்து இருவரும் தப்பித்தார்களா என்பதை படத்தில் பாருங்கள்.  Slasher படத்துக்கே உரிய செட்டிங்குகள்.. புதுமை என்று பார்த்தால் கோவிட்யை உபயோகித்தது.  முகமூடி போட்டவன் கொல்ல வருவதற்கான காரணம் நம்ப முடியாமல் இருந்தாலும் கோவிட் சமயத்தில் மக்கள் இருந்த மனநிலையில் எதுவும் நடக்கலாம். நல்ல Slasher படம் கண்டிப்பாக பார்க்கலாம் 👍

The Glory - Korean - Season 1

The Glory Series Review  #TheGlory - #Korean S1,8 Ep - Review #Netflix ⭐⭐⭐⭐/5 "Revenge Is A Dish Best Served Cold"  ஸ்கூல்ல கொடூரமான டார்ச்சருக்கு உள்ளான பெண் அதுக்கு காரணமானவர்களை பழி வாங்கும் கதை Plot, நடிப்பு &Engaging 👌 Revenge Genre - கொரியன்களை அடிச்சுக்க முடியாது 🔥 Highly Recommended 👍 ஸ்கூல்ல ஒரு அப்பாவி பொண்ணை 5 பேர் கொண்ட ஒரு குரூப் படு பயங்கரமா கொடுமை படுத்துறாங்க.  பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் என‌ யாரும் உதவாத நிலையில் உயிரை காப்பாற்றிக்கொள்ள பள்ளியில் இருந்து விலகுகிறாள்.  பிறகு ஒரு ஃபேக்டரியில் வேலை பார்த்து தனியாக படிச்சு காலேஜ் போய் டீச்சர் வேலையில் சேர்கிறார்.  கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆன நிலையில் மெதுவாக தன்னுடைய பழிவாங்கும் படலத்தை ஆரம்பிக்கிறார். எதுக்கு ஸ்கூல் டீச்சர் ஆனாள், எப்படி பழி வாங்க போகிறாள் என்பதை சுவாரஸ்யமாக சொல்கிறது தொடர்.  தொடர் செம டார்க்கா இருக்குது.  அதுக்காக கொடூரமான காட்சிகள் இருக்குதா என்றால் இல்லை. பயங்கர வயலண்ட்டாக இருக்குதா என்றால் அதுவும் இல்லை.  ஆனால் ஹீரோயினுக்கு நடக்கும் கொடுமைகளை பார்த்து அவளுக்காக ஃபீல் பண்

The Pale Blue Eye - 2023

The Pale Blue Eye Tamil Review  #Netflix #tamil ❌ மிலிட்டரி அகாடமியில் ஒருவன் கொல்லப்பட்டு இதயம் கிழித்து எடுக்கப்பட்டுள்ளது.  இதனை துப்பறிய வரும் ஹீரோ. - Good Start, நடுல ஸ்லோ, கடைசில ✅ - Christian Bale & Melling acting 👌 - 1830 Setup & Snowy locations ✅ Slow but Worth Watching 👍 1830 களில் அமெரிக்காவில் உள்ள ஒரு மிலிட்டரி அகாடமியில் கொலை நடக்கிறது. அந்த கொலையானவனின் இதயம் கிழித்து எடுக்கப்பட்டு உள்ளது.  இதனால் அகாடமிக்கு கெட்ட பெயர் வந்து விடும் என எண்ணி ரிட்டயர்டான டிடெக்டிவ்வான ஹீரோவை கூப்பிடுகிறார் அகாடமி தலைவர்.  நம்ம ஹீரோ தனிக்கட்டை சமீபத்தில் மகள் காணாமல் போய்விட்ட காரணத்தால் சோகமே உருவாக உள்ளார்.  அங்கு உள்ள ஒரு மாணவனின் உதவியுடன் கொலைகாரனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.  எந்த பக்கம் சென்றாலும் விசாரணை முன்னேற்றம் இல்லாமல் நிற்கிறது.  கடைசியில் யார் கொலையாளி என்பதை கண்டுபிடிப்பது க்ளைமாக்ஸ் என்று நினைப்பீர்கள் ஆனால் அதற்கு அப்புறம் தான் ட்விஸ்ட் இருக்கு.  Christian Bale வழக்கம் போல கலக்கி இருக்கிறார். மற்ற நடிகர்கள் அனைவரும் சிறப்பு.  நல்ல படம் தான் ஆனால்

Forest Based Movies Recommendation

Forest Based Movies Recommendation  பெரும்பாலான படத்தின் காட்சிகள் காட்டுக்குள் நடப்பது போன்று எடுக்கப்பட்ட சில படங்களை பார்க்கலாம்.  #movies #forest #forests 1. Predator - 1987  அடர்ந்த காட்டுக்குள் ஏலியனிடம் மாட்டும் ஒரு மிலிட்டரி குரூப்பின் சர்வைவல் படம். அர்னால்ட்🔥  2. Calibre -2018 @NetflixIndia காட்டுக்குள் வேட்டைக்கு போகும் இரண்டு நண்பர்கள். அங்கு நடக்கும் ஒரு விபத்தும் அதன் விளைவுகளும்.  Full Review :  3. War of the arrows - 2011 Tamil Dub ✅ @YouTubeIndia எதிரி நாட்டு படைகளிடம் இருந்து தங்கச்சியை காப்பாற்ற போராடும் வில் வித்தை வீரன்.  Full Review:   4. Annihilation - 2018 @NetflixIndia ஒரு மர்மமான காட்டுப் பகுதிக்குள் ஆராய்ச்சி செய்ய போகும் குழு எதிர்கொள்ளும் பிரச்சினைகள்.  Full Review :  5. The Lost City - 2022 @PrimeVideo அழிந்து போன ஒரு பழைய நகரத்தை கண்டுபிடிக்க நாவல் எழுதும் பெண்ணை கடத்துகிறது வில்லன் குரூப் . அவர் தப்பிய பின் காட்டில் செய்யும் சாகசங்கள்.  Full Review:  

Alienoid - 2022 - Korean

Alienoid Korean Movie Review In Tamil வேற்றுகிரக ஏலியன்கள் மனிதர்களுக்கே தெரியாமல் அவங்க கைதிகளை மனிதர்களின் மனதில் சிறை வைக்கிறார்கள்.  ஏலியன்கள் மனிதர்களின் மனதில் இருந்து தப்பித்தால் என்ன ஆகும்.  Sci Fi, Multiverse, Time Jump, Fantasy, Magic, Action, Aliens, Robots, comedy என எல்லாமே இருக்கு 🙌 நல்ல படம் ஆனால் டைம் லைன் மாறி மாறி வருவதால் கொஞ்சம் புரிய கஷ்டம் .  கண்டிப்பாக பார்க்கலாம் 👍 படம் 1380 களில் ஆரம்பித்து 2012 க்கு வந்து அங்க இருந்து 2022 க்கு ஜம்ப் ஆகுது. அதுக்கு அப்புறம் 1300 களில் நடக்கும் சம்பவங்களும் 2022 ல் நடக்கும் சம்பவங்களை மாறி மாறி வருகிறது.  இந்த படத்தை பத்தி என்ன எழுத எதை விட என்று தெரியவில்லை. உங்களுக்கு Sci Fi, Adventure படங்கள் பிடிக்கும் என்றால் தாரளமாக பார்க்கலாம்.  கடைசியில் நல்ல ட்விஸ்ட் உடன் அடுத்த பார்ட் லீட் கொடுத்து முடித்து இருக்கிறார்கள். 

The Menu - 2022

The Menu Tamil Review  ஒரு வேளை சாப்பாட்டுக்கு $1250 (₹1L +) காசு கொடுத்து ஒரு தீவுக்கு போற எலைட் குரூப் சந்திக்கும் பிரச்சினைகள் தான் படம்.  அதுல ஹீரோயின் எதிர்பாராதவிதமாக மாட்டுகிறாள். யாராவது இங்கிருந்து தப்பித்தார்களா என்பதை படத்தில் பாருங்கள். தீவுக்கு போகும் இந்த குரூப்பை வரவேற்கிறார் ஒரு ஸ்டிரிக்ட் ஆபீசரான தலைமை சமையல்காரர். சாப்பாடு அதை சாப்பிடும் முறை பற்றி பல ஸ்பீச்சுகளை கொடுக்கிறார்.  ஒவ்வொரு சாப்பாடு ஐட்டங்களாக வர ஆரம்பிக்கிறது. நேரம் போக போக பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கிறது.  இந்த குரூப்பில் ஹீரோயின் மட்டும் எலைட் குரூப்பிற்கு சம்பந்தமே இல்லாமல் இருப்பதால் Chef க்கு அவள் மீது ஒரு சின்ன Soft Corner.  கடைசில என்ன ஆனது என்று படத்தில் பாருங்கள்.  படம் முதல் பாதி நல்ல சஸ்பென்ஸ் கடைசில லைட்டா இழுக்குற மாதிரி தெரிந்தது.  ஒவ்வொரு உணவும் , அதுக்கு கொடுக்கப்படும் விளக்கம் மற்றும் அதுனுடைய குளோஸ் அப் ஷாட் என அனைத்தும் சிறப்பு. ஒரு விதமான டார்க் காமெடி மற்றும் இப்ப உள்ள Foodie கலாச்சாரத்தை குத்தி காட்டுகிறது.  Chef ஆக  வரும் Ralph Fiennes  மிரட்டி இருக்கிறார். ஹீரோயின் Anya Tayl

The Fabelmans - 2022

The Fabelmans Tamil Review  வருஷத்துல பாக்குற முதல் படம் நல்லா இருக்கனும் என்று பெரிய தலை Spielberg படத்தை பார்த்தேன்.  சிறுவயதில் இருந்து சினிமா மேல் இருக்கும் தன்னுடைய காதலை (கதையை) படமாக எடுத்து இருக்கிறார்.  Slow but worth watching.  இது Spielberg வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம். 1950 களில் நடக்கும் கதை.  கம்யூட்டர் இன்ஜினியரான அப்பா மற்றும் பியானிஸ்ட் ஆன அம்மாவின் மகன்‌ Sammy.  அவனை முதல் முறையாக படத்திற்கு கூட்டி போகிறார்கள். படத்தில் வரும் ரயில் விபத்துக்கு காட்சியால் உந்தப்பட்டு தனது பொம்மை ரயிலை வைத்து விபத்து ஏற்படுத்தி அதை தனது தந்தையின் கேமராவில் படம் பிடிக்கிறான் . இதுதான் அவன் எடுத்த முதல் படம்.  இதன் பிறகு பல குட்டி படங்களை எடுக்கிறான். இதற்கு நடுவே தந்தையின் வேலை காரணமாக பல ஊர்களுக்கு பயணப்பட வேண்டி இருக்கிறது.  அதன் பின் குடும்பத்தில் வரும் சிக்கல்கள் .  இவை அனைத்தையும் தாண்டி எவ்வாறு தன்னுடைய சினிமா மீதான காதலை தொடர்கிறான் என்பதை சொல்லும் படம்.  படம் மெதுவாக செல்கிறது. குறும் படங்கள் மற்றும் அதை எடுத்த விதங்கள் அவ்வளவு அருமை.  என்ன மாதிரியான Casting 👏 மற்றும் கதை

Talented John Williams - Music Composer

Music Composer: John Williams - Age 90 இவர் Dir. Spielberg ன் ஆஸ்தான இசையமைப்பாளர் ஆவார். இதுவரை 52 முறை Oscar award க்கு Nominate செய்யப்பட்டு 5 முறை வென்று உள்ளார்.  1. Fiddler on the Roof (1971) - Original Song Original Score : 2. Jaws (1975) 3. Star Wars(1977) 4. E.T. The Extra-Terrestrial (1982)  5. Schindler’s List” (1993) இந்த முறை The Fabelmans படத்திற்காக Short list ஆகி உள்ளார்.  அதிக வயதில் ஆஸ்கார் வென்றவர்களில் Anthony Hopkins (83) — 'The Father' (2020) உள்ளார்.  இந்த முறை John Williams இவரது சாதனையை முறியடிப்பாரா? 🤞

Loving Adults - 2022

Loving Adults Tamil Review  #Danish #netflix  மகனுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த பெற்றோர்கள்.   கணவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடிககிறாள். இதனை எப்படி டீல் பண்ணிணா என்பதை பல ட்விஸ்ட்டுகளுடன் சொல்கிறது படம். Decent #Crime #thriller . கண்டிப்பாக பார்க்கலாம் 👍 #Tamil ❌ உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் மகனுக்காக தனது கேரியரை இழக்கும் அம்மா. அப்பா அந்த பையனுக்காக உழைக்கிறார். ஒரு கட்டத்தில் மகனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுகிறது.  அந்த சமயத்தில் கணவனின் தகாத உறவை கண்டுபிடிக்கிறார் மனைவி.  இந்த நிலையில் விவாகரத்து ஆகி பிரிந்து விட்டால் இவ்வளவு நாள் செய்த தியாகம் வேஸ்ட்டாக போய்விடும் என்ற நிலையில் கணவன் மற்றும் மனைவி இருவரும் எடுக்கும் சில முடிவுகள் படத்தை நகர்த்தி செல்கிறது.  படம் கொஞ்சம் ஸ்லோ ஆனால் சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட்கள் உடன் நன்றாக போகிறது.  குடும்பம் பிரியாமல் இருக்க எந்த அளவுக்கு அந்த அம்மா போகுது என்பது தான் படம்.  கண்டிப்பாக பார்க்கலாம் 👍