பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே 9 Episode களை கொண்ட 1 Season January 15 ல் HBO MAX ல் வெளியாகிறது.
அப்படி என்ன இருக்கிறது இந்த தொடரில் என்று பார்க்கலாம்.
2013 ஆம் ஆண்டு வெளிவந்த இதே பெயர் கொண்ட வீடியோ கேமை வைத்து எடுக்கப்படும் சீரிஸ் இது அதனால் ஸ்பாய்லர் போன்றவைகளுக்கு வாய்ப்பு இல்லை. கதை மற்றும் காட்சியமைப்புகள் பெரும்பாலும் தெரிந்த ஒன்று.
இந்த சீரிஸ் Post Apocalyptic உலகத்தில் நடப்பது போன்று எடுக்கப்பட்ட Survival, Horror Thriller.
2033 ல் நடக்கும் கதை. ஒரு நோய் தொற்று காரணமாக பெரும்பாலான மக்கள் இறந்து விட மிச்சம் உள்ளவர்கள் கொடூரமான ஜந்துக்களாக மாறி விடுகின்றனர். இதில் இருந்து தப்பி பிழைத்த நிலையில் சொற்பமான மக்களே உள்ளனர்.
இந்த நோய் தொற்று மனிதர்களின் மூளையை தாக்கி பயங்கர வயலண்ட்டாக மாற்றி விடுகிறது. பின்னர் உள்ளிருந்து கண்களை அழித்து விடுகிறது. இவர்கள் வவ்வால் மாதிரி ஓசையை வைத்து உயிர்களை அடையாளம் கண்டு பிடித்து குரவலையோட சேர்த்து ஓரே அடி (கடி) தான் போல.
கதைச்சுருக்கம் :
சர்வைவர் ஆன Joel Miller டம் Ellie என்ற பெண்ணை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பத்திரமாக கூட்டி செல்லும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.
இவர்கள் போகும் வழியில் வழக்கமாக உலகம் அழிந்த கதைகளில் வரும் நோயால் தாக்க பட்டவர்கள், Hannibal கூட்டம் என அனைவரையும் தாண்டி செல்ல வேண்டியதாக உள்ளது.
Ellie கதாபாத்திரத்தில் BellaRamsey -
Game of thrones ல Lyanna Mormont என்கிற ஒரு சூப்பரான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.
Joel Miller கதாபாத்திரத்தில் Pedro Pascal - Game of Thrones ல் Oberyn Martell என்ற கதாபாத்திரத்தில் வருவார்.
2018 ஆம் ஆண்டு வெளிவந்த The Last of us - 2 வீடியோ கேமில் இருந்தும் நிறைய கான்செப்ட்டுகளை எடுத்து உள்ளார்கள்.
Post Apocalyptic, Monsters, Adventure என எனக்கு மிகவும் பிடித்த கதைக்களம். கதை பெரிதாக இல்லாவிட்டாலும் திரைக்கதை மட்டும் மேக்கிங் கண்டிப்பாக சிறப்பாக இருக்கும். இந்த சீரிஸ் டீம்ல Chernobyl Creator, Ali Abbasi, நிறைய வீடியோ கேம்ல வேலை பார்த்தவர்கள் என திறமையான நிறையா பேர் இருக்கிறார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக