Space Related Movies
விண்வெளி சம்மந்தப்பட்ட படங்கள் எப்பவுமே ஆர்வத்தை தூண்டக்கூடியது. விண்கலத்தின் டிசைன் , விண்வெளியின் தோற்றம் என கலக்கி இருப்பார்கள். Interstellar, Martian, Gravity போன்ற பிரபல படங்களை வேண்டும் என்றே தான் இதில் சேர்க்கவில்லை.
Life - 2017
Space Station ல சின்னதா ஒரு உயிரினத்தை கண்டுபிடிப்பார்கள் விஞ்ஞானிகள் . ஆரம்பத்தில் அமைதியாக இருக்கும் அந்த உயிர் பின்னாடி இவர்களை வச்சு செய்யும். அதிலிருந்து தப்பினார்களா என்பதே படம்.
Space Cowboys - 2000
திறமையான Clint Eastwood (Richard Jewell, Unforgiven) - ன் நடிப்பு & இயக்கfத்தில் வெளிவந்த சூப்பரான Adventure படம் இது.
பழுதாகி போன சாட்டிலைடை பூமிக்குள் வராமல் தடுக்கும் மிஷன்னுக்காக விண்வெளிக்கு போகும் 4 சீனியர் சிட்டிசன்களின் அட்வென்சர் தான் படம்.
Ad Astra - 2019
Brad Pitt & Tommy Lee Jones நடிப்பில் வெளிவந்த ஒரு Space Adventure படம் இது. The Lost City Of Z எடுத்த டைரக்டரின் இன்னொரு படம்.
காணாமல் போன விண்கலத்தில் இருந்து 30 வருடங்களுக்கு பின் சிக்னல் வருகிறது. அதை ஆராய்ச்சி செய்ய போகும் இன்னொரு விண்கலத்தில் பயணம் செய்பவர்கள் சந்திக்கும் சவால்கள் தான் படம்.
Event Horizon - 1997
7 வருடங்களுக்கு முன்னாள் காணாமல் போன
ஒரு Spaceship ல் இருந்து திடீர் என சிக்னல் வர , என்ன ஆனது என்று கண்டுபிடிக்க செல்லும் குழுவை பற்றிய படம்.
2001: A Space Odyssey - 1968
பிரபல இயக்குநர் Stanley Kubrick இயக்கத்தில் 1968 ல் வெளிவந்த ஒரு Sci Fi , Adventure படம் இது.
படத்தோட தரமான மேக்கிங்காகவே படத்தை பார்க்கலாம்.
கதை கொஞ்சம் சிக்கலானது. படம் பார்க்க பொறுமை வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக