Khakee The Bihar Chapter Tamil Review
புதுசா வேலைக்கு சேர்ந்த போலீஸ் அதை டைம்ல ரௌடியா வாழ்க்கையை ஆரம்பிக்கும் வில்லன். ஹீரோ வில்லனை பிடிக்க நடத்தும் வேட்டையை ஜாதி, அரசியல் கலந்து 7 எபிசோட்களில் பரபரவென போகிறது.
7 Episodes @Netflix
Tamil Dub ✅
படத்தின் இரு முக்கிய கேரக்டர்களும் அவர்களுடைய கேரியரில் மள மளவென வளர்கிறார்கள்.
உண்மையில் நடந்த சம்பவத்தை வைத்து எழுதப்பட்ட புத்தகத்தை தழுவி தேவையான அளவு மசாலா சேர்த்து எடுக்கப்பட்ட தொடர்.
அதனால வழக்கமான போலீஸ் & வில்லன் காட்சிகள் நிறைய உண்டு. ஆனால் இதோட பெரிய ப்ளஸ் பாயிண்ட் பரபரவென நகரும் திரைக்கதை.
அதனால லாஜிக் எல்லாம் பாக்காம என்ஜாய் பண்ணலாம். நல்ல டைம் பாஸ் மெட்டீரியல்.
வில்லன் மிரட்டி இருக்கிறார். ஹீரோக்கு டிபிகல் போலீஸ் ரோல்.
பீகார் என்றால் காஞ்சு பஞ்சத்துல இருக்கும் ஊர் என்று நினைத்து இருந்தேன். இதுல பசுமையான இடமா பார்த்து எடுத்து இருப்பாங்க போல.
ரொம்ப கொடூரமான காட்சிகள் இல்ல. ஆபாச காட்சிகளும் இல்ல.
கண்டிப்பாக பார்க்கலாம் 👍
கருத்துகள்
கருத்துரையிடுக