Glass Onion : A Knives Out Mystery Review
ஒரு பணக்காரன் அவனது நண்பர்களை எல்லாம் ஒரு கொலை கேஸ் சால்வ் பண்ற கேம் விளையாட தீவுக்கு கூப்பிடுறான். ஆனா அங்க நடக்குறதே வேற.அந்த மர்மத்தை கண்டுபிடிக்கும் டிடெக்டிவ்
Initially Slow 🟡
திரைக்கதை 👍
Engaging ✅
காமெடி & Mystery ✅
IMDb 7.7 🟢 | RT 94 🟢🟢
Knives Out படம் நல்ல ஒரு மர்டர் மிஸ்டரி படம். நம்ம ஜேம்ஸ் பாண்ட் Daniel Craig டிடெக்டிவ்வா கலக்கி இருப்பாரு. அந்த படத்தின் இரண்டாவது பாகமா வந்துள்ள படம்.
முதல் பாகத்தை பார்க்காமல் இந்த படத்தை பார்க்கலாமா ? கண்டிப்பாக பார்க்கலாம் 👍. இரண்டு படங்களுக்கும் Daniel Craig தவிர வேறு எந்த சம்பந்தமும் இல்லை.
படத்தின் ஆரம்பத்தில் ஒரு Puzzle பாக்ஸ் உடன் சேர்ந்து ஒரு அழைப்பு வருகிறது. அதை Miles என்ற பணக்காரர் தன் நண்பர்களுக்கு அனுப்பிய பார்ட்டி அழைப்பு. அதில் தன்னுடைய கொலை கேஸை கண்டுபிடிக்க ஒரு விளையாட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
எல்லாரும் கெளம்பி போக நம்ம டிடெக்டிவ்வுக்கும் அழைப்பு வருகிறது. இவரும் அங்கு செல்கிறார். ஆனா அங்க எதிர்பாராத பல சம்பவங்கள் நடக்கிறது. நம்ம ஹீரோ இதை எப்படி சமாளித்தார் என்பதை படத்தில் பாருங்கள்.
படம் ஆரம்பத்தில் கொஞ்சம் ஸ்லோ ஆனா பின்னாடி வேகம் எடுக்கிறது. எல்லா கேரக்டர்களுக்கும் ஸ்பேஸ் கொடுக்கப் பட்டுள்ளது. லைட்டா கொஞ்சம் காமெடியுடன் போகிறது படம்.
எனக்கு என்னமோ முதல் பாகம் ரொம்ப இயற்கையாக இருந்தது. இதில் கொஞ்சம் செயற்கையாக தெரிந்தது.
மொத்தத்தில் நல்லா எங்கேஜிங்கா இருந்தது படம். கண்டிப்பாக பார்க்கலாம் 👍
கருத்துகள்
கருத்துரையிடுக