Will Smith நடிப்பில் 1865 களில் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை எதிர்த்து தப்பி வந்த Peter என்பவரின் வாழ்க்கையில் நடநத உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம்.
சூப்பரான படம் 🔥 கண்டிப்பா பாக்கலாம்
Tamil dub ❌ Subs ✅
Shot in B/W
Available @Appletv
Will Smith ஒரு பேட்டியில் எனக்கு அடிமைத்தனத்தை பற்றி நிறைய படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் அந்த மாதிரி எங்களை காட்டுவதில் எனக்கு விருப்பம் இல்லை அதனால் மறுத்துவிட்டேன் என்றார்.
குறிப்பாக ஒரு புகைப்படம் என்னுடைய மனதை மாற்றியது. இது அடிமைத்தனத்தை பற்றிய படம் அல்ல மாறாக இது நம்பிக்கை, சுதந்திரம் போராட்டத்தை பற்றிய படம் என்று கூறி இருந்தார்.
Peter மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒரு பண்ணையில் அடிமையாக உள்ளான். அங்கிருந்து இன்னொரு ஓனருக்கு விற்கப்படுகிறான்.
அவனை ஒரு சதுப்பு நிலம் தாண்டி உள்ள கொடூரமான கட்டுப்பாடுகள் உள்ள இடத்தில் ரயில்வே டிராக் போடும் வேலை கொடுக்கப்படுகிறது.
ஒரு கட்டத்தில் அங்கு இருந்து தப்பித்து ஆபத்தான சதுப்பு நிலங்களை தாண்டி குடும்பத்துடன் இணைந்தானா என்பதை சொல்கிறது படம் .
படம் 12 Years a slave படம் போல் ஆரம்பித்து, சர்வைவல் வகையில் போய் கொஞ்சம் மிலிட்டரி கலந்து முடிகிறது.
படம் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டு உள்ளது. அந்த காலகட்டத்திற்கு பக்காவாக செட் ஆகி உள்ளது.
Will Smith செம நடிப்பு . அவர்தான் படம் முழுவதும் வருகிறார். சூப்பர் ரோல் .. Ben Foster வில்லன் ரோலில் நன்றாக பண்ணி இருக்கார்.
நல்ல படம் மக்களே கண்டிப்பாக பாருங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக