Oldboy பட டைரக்டரின் படம் இது.
ஒரு மலையின் கீழ இறந்த உடல் கெடைக்குது. அதை விசாரிக்கும் ஹீரோவான போலீஸ் ஆ இளம் மனைவியின் செயல்பாடுகளில் சந்தேகப்பட்டு விசாரிக்க ஆரம்பித்து அவளின் மேல் பைத்தியம் ஆகிறான்.இதனால் வரும் பிரச்சினைகள் தான் படம்.
IMDb 7.3 🟢 | RT
Korean , Tamil dub ❌
Available @mubi
படம் ரொம்ப ரொம்ப ஸ்லோ.. மொத்தம் 2.20 மணி நேரம் படம் ஓடுது. நடிப்பு , கேமரா, எடிட்டிங் எல்லாம் தரம்.
முதல் 1.30 மணி நேரத்தை தாண்டிட்டா பின்னாடி படம் பரவாயில்லை.
சினிமா ரசிகர்களுக்கு பிடிக்க வாய்ப்பு இருக்கு. எனக்கு அவ்வளவு பிடிக்கல.
Mystery + Investigation Thriller னு நெனச்சு தான் படத்த பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் எனக்கு என்னமோ லவ் ஸ்டோரி மாதிரி தான் தெரிஞ்சது.
கடைசில கடல் பக்கத்துல வர்ற க்ளைமாக்ஸ். எப்படி எல்லாம் சாகலாம்/சாகடிக்கலாம்னு இந்த கொரியன்காரனுக ரூம் போட்டு யோசிப்பானுக போல.
ஒரு டைம் டிரை பண்ணி பாக்கலாம் 👍
கருத்துகள்
கருத்துரையிடுக