Dead calm tamil review
நடுக்கடலில் படகு மூழ்க போகிறது என தஞ்சம் அடையும் ஒருவன். அதன் பிறகு நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் தான் படம்.
Tamil ❌
OTT ❌
ஹீரோ கப்பல் படையில் இருந்துவிட்டு வீடு திரும்புகிறான். அங்கு அவளது மனைவிக்கு நடக்கும் ஒரு துயர சம்பவம் காரணமாக இருவரும் மனமுடைந்து போகிறார்கள்.
நடந்ததை மறக்க சொகுசு படகில் இருவரும் பயணம் செல்கிறார்கள். நடுக்கடலில் ஒரு படகு நிற்க அதில் இருந்து ஒருத்தன் தப்பி ஒருவன் இவர்களது படகில் தஞ்சம் அடைகிறான்.
கூட இருந்த அனைவரும் இறந்து விட்டதாகவும் தான் மட்டும் தப்பித்ததாகவும் சொல்கிறான். ஹீரோ இதனை என்னவென்று பார்க்க அந்த சிதிலம் அடைந்த படகிற்கு செல்கிறான்.
இதற்கு அப்புறம் பல பரபரப்பான சம்பவங்கள் நடக்கிறது. அது என்னவென்று படத்தில் பாருங்கள்.
படம் நல்ல ஒரு சைக்காலஜிகல் திரில்லர். Sam Neil , Nicole Kidman நல்ல நடிப்பு.வில்லனும் கலக்கி இருக்கிறான்.
படம் ஸ்லோ தான் ஆனா நல்லா இருந்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக