Bosch Season 1 Review
10 வருஷத்துக்கு முன்னாடி புதைக்கப்பட்ட எலும்புகள் கிடைக்கிறது
காரில் பிணத்துடன் மாட்டும் சீரியல் கில்லர்
இந்த இரண்டுக்கும் உள்ள தொடர்பை கண்டுபிடிக்க வரும் டிடெக்டிவ் Bosch
Gripping Thriller 🔥 Binge Watch 👍
IMDb 8.5 🟢 | RT 84% 🟢
ஹீரோ Bosch ஒரு நேர்மையான ஆன கொஞ்சம் கோபப்பட்டா துப்பாக்கி எடுத்து சுடுற ஆளு. சீரிஸ் ஆரம்பமே அவர் மீது வைக்கும் விசாரணை கமிஷன்ல இருந்து தான் ஆரம்பிக்குது.
இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்னாடி புதைக்கப்பட்ட சிறுவனின் எலும்புகள் கிடைக்கிறது இந்த கேஸ் Bosch இடம் வருகிறது. இவரின் சிறுவயது வாழ்க்கை பல பிரச்சினைகள் நிறைந்தததாக இருக்கிறது.
இந்த சிறுவனின் கொலையை மிகவும் விசாரித்து தண்டனை வாங்கி கொடுக்க தீவிரமாக உள்ளார்.
இந்த நிலையில் வேனில் பிணத்துடன் ஒருவன் சிக்குகிறான். அவன் ஒரு கட்டத்தில் நான் தான் அந்த சிறுவனை அங்கு கொன்று புதைத்தேன் என்கிறான்.
இந்த இரண்டு கேஸுக்கும் என்ன சம்பந்தம், குற்றவாளியை ஹீரோ எப்படி கண்டுபிடித்தார் என்பதை சொல்கிறது தொடர்.
இந்த விசாரணையின் நடுவில் கூட வேலை பார்க்கும் போலீஸுடன் ரிலேஷன் ஷிப், மகள் மற்றும் முன்னாள் மனைவியுடனான நிகழ்வுகள் என நகர்கிறது.
போலீஸ் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையே நடக்கும் விஷயங்கள் இன்னொரு டிராக்கில் போகிறது.
ஹீரோ & வில்லன் ரெண்டு பேருமே கலக்கி இருக்கிறார்கள்.
கண்டிப்பா பாருங்க 👍
கருத்துகள்
கருத்துரையிடுக