Avatar The Way Of Water - Avatar 2 Review
முதல் பாகம் தந்த பிரம்மாண்டத்தின் காரணமாக எதிர்பார்ப்பு எகிறி இருந்தது இந்த படத்திற்கு. இதை படம் பூர்த்தி செய்ததா?
என்னுடைய பதில் YES.
முடிந்த வரை ஸ்பாய்லர் இல்லாமல் எழுத முயற்சி செய்கிறேன்.
முதலில் படத்தில் கதை என்று பார்த்தால் ரொம்பவே சாதாரணமான ஒன்று.
ஹீரோவால் அடித்து விரட்டப்பட்ட வில்லன். குடும்பம் முக்கியம் என்று வாழும் ஹீரோ. பழிவாங்கும் வெறி அடங்காமல் பெரும் பலத்துடன் திரும்ப வரும் வில்லன். எதிர்த்தால் தன்னை சார்ந்து இருக்கும் மக்களுக்கு பிரச்சினை என்பதை தெரிந்து கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருந்த வாழும் இடத்தை விட்டு விட்டு அகதியாக வெளியேறுகிறான். ஆனா வில்லன் விரட்டி வருகிறான். யார் இதில் வெற்றி பெற்றார்கள் என்பது தான் படம்.
இந்த கதையை எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம் .
ஆனால் கேமரூன் தேர்ந்தெடுத்த வழி Visuals & பிரம்மாண்டம் . இந்த மாதிரி திருப்பங்கள் எதுவும் இல்லாத கதைக்கு Visual மிகப்பெரிய ப்ளஸ் என்று சொல்லலாம்.
முதல் பாகத்தில் பண்டோராவை ஓரளவு காட்டியாச்சு . மறுபடியும் அதையே காட்டுனா மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்று தெரியும் அதுனால இந்த முறை அவர் தேர்ந்து எடுத்து இருக்கும் இடம் கடல். ஒவ்வொரு சீனையும் செதுக்கி இருக்காரு மனுஷன்.
இன்னொரு பிரச்சினை எல்லாரும் சொல்றது 3 மணி நேரம் ரொம்ப அதிகம் என்று. படம் 2 மணிநேரம் ஓடுனாலே இந்த படத்தை பார்ப்போமா இல்ல விட்டுவோமானு யோசிப்பேன்.ஆனா இதுல அடுத்த சீனை எப்படி எங்க என்ன மாதிரி புதுசா வச்சு இருப்பாங்க என்ற ஒரு எதிர்பார்ப்பில் இருந்ததால் நேரம் போனது தெரியவில்லை என நினைக்கிறேன்.
இன்னொரு பெரிய ஆச்சரியம் குழந்தைகள்.. தியேட்டர்ல அவ்வளவு குழந்தைகள் இருந்தாங்க என் பையன் உட்பட. யாரும் நடுவில் எந்திரிக்க கூட இல்ல.
புதசா நிறைய அவதார் பாத்திரங்கள் வந்து உள்ளது இந்த பாகத்தில். எனக்கு முதலில் ரொம்பவே பிடித்தது Tuk ஆக வரும் அந்த சிறுமி அவதார். கொள்ளை அழகு.. அடுத்து Kiri . எனக்கு Sigourney Weaver ரொம்ப பிடித்த நடிகை அவரை இளமையான அவதார பார்ப்பது ரொம்பவே நல்லா இருந்தது. அப்புறம் பாகுபலி மாதிரி குழந்தைய காட்டும் போது வரும் அந்த அவதார் குட்டி .. அது போக சில குட்டி அவதார்கள் அவ்வளவு க்யூட்.
முதன் முதலில் கடலுக்குள் செல்லும் போது வரும் விஷுவல்கள் தரம்.
ஆக்சன் காட்சிகள் எல்லாம் பிரம்மாண்டத்தின் உச்சம். அதுவும் கடைசியில் அந்த பெரிய மீன் அடிக்கும் டைவ்கள் எல்லாம் செமயா இருந்தது.
குடும்பம் தான் எல்லாம் என்பதை நிரூபிக்கும் இன்னொரு படம்.
3D - எனக்கு என்னமோ ஆரம்பத்தில் கொஞ்சம் நேரம் 3D effect இருந்தது . அதுக்கு அப்புறம் ரொம்ப தெரியவில்லை.
மொத்தத்தில் கொடுத்த காசுக்கு நல்ல ஒரு படம் பார்த்த திருப்தி. கண்டிப்பா குடும்பத்துடன் பாக்கலாம். குறிப்பா குழந்தைகளை கூட்டிட்டு போங்க.
Kiri, Spider போன்ற பாத்திரங்கள் ஒரு தெளிவு இல்லாமையே போகுது அடுத்தடுத்த பாகங்கள் வந்தால் தெளிவாகும் என நினைக்கிறேன்.
Highly Recommended 👍
கருத்துகள்
கருத்துரையிடுக