முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Oppo Enco M32 - Bluetooth Neckband Review

Oppo Enco M32 - Bluetooth Neckband Review  எனக்கு தெரிஞ்சு 1 Plus Bulletz 1500 ரூபாய் ரேன்ஜில் தரமான ஒரு neckband. அதை உபயோகித்தால் எதை வாங்குவது என ஒரே குழப்பம். Boat Rockerz 330 ANC வாங்கி பிடிக்காமல் திரும்ப கொடுத்து விட்டேன்.  ட்விட்டரில் கேட்டதில் நிறைய பேர் Oppo Enco M32 நன்றாக இருக்கும் என்று சொன்னதால் வாங்கினேன்.  Packing, Look & Feel :  Packing நல்லா இருந்தது. நான் வித்தியாசமா இருக்கட்டும் என்று Green Color வாங்கி இருந்தேன். ஒகே ரகம். இன்னொரு கலர் கருப்பு.   Features:  USB Type-C port  charging Fast Charging Water Resistance 10 mm Drivers 20 hours of listening with 10 minutes of charging (Not tested) 28 hours per charge (Not tested) Fit:  Ear piece design நல்லா இருந்தது. ஒரு சின்ன வளையம் மாதிரி அதுல  அட்டாச் ஆகிருக்கு. அது காதில் கரெக்டா ஃபிட் ஆக உதவுகிறது.  இரண்டு ear piece களை இணைத்தால் headset off ஆகி விடும். மறுபடியும் Piece களை பிரித்தால் உடனடியாக ON ஆகிவிடும்.  Pairing, connecting, disconnecting என எல்லாமே ஃபாஸ்ட்டாக இருந்தது.  Music & Call Quality:  பாடல்களில் இ

Dead calm - 1989

Dead calm tamil review  ஒரு துயர சம்பவத்தை மறக்க சொகுசு Boat ல் தனியாக பயணம் செய்யும் ஒரு ஜோடி. நடுக்கடலில் படகு மூழ்க போகிறது என தஞ்சம் அடையும் ஒருவன்‌. அதன் பிறகு நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் தான் படம். Tamil ❌ OTT ❌ ஹீரோ கப்பல் படையில் இருந்துவிட்டு வீடு திரும்புகிறான். அங்கு அவளது மனைவிக்கு நடக்கும் ஒரு துயர சம்பவம் காரணமாக இருவரும் மனமுடைந்து போகிறார்கள்.  நடந்ததை மறக்க சொகுசு படகில் இருவரும் பயணம் செல்கிறார்கள். நடுக்கடலில் ஒரு படகு நிற்க அதில் இருந்து ஒருத்தன் தப்பி ஒருவன் இவர்களது படகில் தஞ்சம் அடைகிறான்.  கூட இருந்த அனைவரும் இறந்து விட்டதாகவும் தான் மட்டும் தப்பித்ததாகவும் சொல்கிறான். ஹீரோ இதனை என்னவென்று பார்க்க அந்த சிதிலம் அடைந்த படகிற்கு செல்கிறான்.  இதற்கு அப்புறம் பல பரபரப்பான சம்பவங்கள் நடக்கிறது. அது என்னவென்று படத்தில் பாருங்கள்.  படம் நல்ல ஒரு சைக்காலஜிகல் திரில்லர். Sam Neil , Nicole Kidman நல்ல நடிப்பு.வில்லனும் கலக்கி இருக்கிறான்.  படம் ஸ்லோ தான் ஆனா நல்லா இருந்தது. 

The Last of Us - What Is This Series About ?

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே 9 Episode களை கொண்ட 1 Season January 15 ல் HBO MAX ல் வெளியாகிறது.  அப்படி என்ன இருக்கிறது இந்த தொடரில் என்று பார்க்கலாம்.  2013 ஆம் ஆண்டு வெளிவந்த இதே பெயர் கொண்ட வீடியோ கேமை வைத்து எடுக்கப்படும் சீரிஸ் இது‌ அதனால் ஸ்பாய்லர் போன்றவைகளுக்கு வாய்ப்பு இல்லை. கதை மற்றும் காட்சியமைப்புகள் பெரும்பாலும் தெரிந்த ஒன்று. இந்த சீரிஸ் Post Apocalyptic உலகத்தில் நடப்பது போன்று எடுக்கப்பட்ட Survival, Horror Thriller. 2033 ல் நடக்கும் கதை. ஒரு நோய் தொற்று காரணமாக பெரும்பாலான மக்கள் இறந்து விட மிச்சம் உள்ளவர்கள் கொடூரமான ஜந்துக்களாக மாறி விடுகின்றனர். இதில் இருந்து தப்பி பிழைத்த நிலையில் சொற்பமான மக்களே உள்ளனர்.  இந்த நோய் தொற்று மனிதர்களின் மூளையை தாக்கி பயங்கர வயலண்ட்டாக மாற்றி விடுகிறது. பின்னர் உள்ளிருந்து கண்களை அழித்து விடுகிறது.  இவர்கள் வவ்வால் மாதிரி ஓசையை வைத்து  உயிர்களை அடையாளம் கண்டு பிடித்து குரவலையோட சேர்த்து ஓரே அடி (கடி) தான் போல.  கதைச்சுருக்கம் :  சர்வைவர் ஆன Joel Miller டம் Ellie என்ற பெண்ணை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பத்திரமாக கூட்டி

Glass Onion : A Knives Out Mystery

Glass Onion : A Knives Out Mystery Review  #KnivesOutGlassOnion  ஒரு பணக்காரன் அவனது நண்பர்களை எல்லாம் ஒரு கொலை கேஸ் சால்வ் பண்ற கேம் விளையாட தீவுக்கு கூப்பிடுறான். ஆனா அங்க நடக்குறதே வேற.அந்த மர்மத்தை கண்டுபிடிக்கும் டிடெக்டிவ் Initially Slow 🟡 திரைக்கதை 👍 Engaging ✅ காமெடி & Mystery ✅ IMDb 7.7 🟢 | RT 94 🟢🟢  Knives Out படம் நல்ல ஒரு மர்டர் மிஸ்டரி படம். நம்ம ஜேம்ஸ் பாண்ட் Daniel Craig டிடெக்டிவ்வா கலக்கி இருப்பாரு. அந்த படத்தின் இரண்டாவது பாகமா வந்துள்ள படம்.  முதல் பாகத்தை பார்க்காமல் இந்த படத்தை பார்க்கலாமா ? கண்டிப்பாக பார்க்கலாம் 👍.  இரண்டு படங்களுக்கும் Daniel Craig தவிர வேறு எந்த சம்பந்தமும் இல்லை.  படத்தின் ஆரம்பத்தில் ஒரு Puzzle பாக்ஸ் உடன் சேர்ந்து ஒரு அழைப்பு வருகிறது. அதை Miles என்ற பணக்காரர் தன் நண்பர்களுக்கு அனுப்பிய பார்ட்டி அழைப்பு. அதில் தன்னுடைய கொலை கேஸை கண்டுபிடிக்க ஒரு விளையாட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  எல்லாரும் கெளம்பி போக நம்ம டிடெக்டிவ்வுக்கும் அழைப்பு வருகிறது. இவரும் அங்கு செல்கிறார். ஆனா அங்க எதிர்பாராத பல சம்பவங்கள் நடக்கிறது. நம்ம ஹீரோ இதை எப்

Read My Lips - 2001 (French)

Read My Lips - 2001 (French)  காது கேட்காத ஆனா உதடுகள் அசைவது  மூலமா சொல்வதை புரிந்து கொள்ளும் பெண்ணும் பெயிலில் உள்ள கைதியும் மாறி மாறி திருட்டுத்தனம் பண்ண உதவி செய்து கொள்கிறார்கள்‌.நல்ல ஒரு ரொமான்டிக் திரில்லர்  நடிப்பு 👌 கதை & திரைக்கதை 👍 Slow 🟡 IMDb 7.6 🟢 | RT 97 🟢🟢

Avatar The Way Of Water - Avatar 2 Review

Avatar The Way Of Water - Avatar 2 Review முதல் பாகம் வந்து கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பின் இரண்டாவது பாகம் வந்துள்ளது.  முதல் பாகம் தந்த பிரம்மாண்டத்தின் காரணமாக எதிர்பார்ப்பு எகிறி இருந்தது இந்த படத்திற்கு. இதை படம் பூர்த்தி செய்ததா?  என்னுடைய பதில் YES. முடிந்த வரை ஸ்பாய்லர் இல்லாமல் எழுத முயற்சி செய்கிறேன்.‌ முதலில் படத்தில் கதை என்று பார்த்தால் ரொம்பவே சாதாரணமான ஒன்று.  ஹீரோவால் அடித்து விரட்டப்பட்ட வில்லன். குடும்பம் முக்கியம் என்று வாழும் ஹீரோ. பழிவாங்கும் வெறி அடங்காமல் பெரும் பலத்துடன் திரும்ப வரும் வில்லன்.  எதிர்த்தால் தன்னை சார்ந்து இருக்கும் மக்களுக்கு பிரச்சினை என்பதை தெரிந்து கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருந்த வாழும் இடத்தை விட்டு விட்டு அகதியாக வெளியேறுகிறான். ஆனா வில்லன் விரட்டி வருகிறான். யார் இதில் வெற்றி பெற்றார்கள் என்பது தான் படம்.  இந்த கதையை எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம் . ஆனால் கேமரூன் தேர்ந்தெடுத்த வழி Visuals & பிரம்மாண்டம் .  இந்த மாதிரி திருப்பங்கள் எதுவும் இல்லாத கதைக்கு Visual மிகப்பெரிய ப்ளஸ் என்று சொல்லலாம்.   முதல் பாகத்தில் பண்டோராவை ஓ

Violent Night - 2022

Violent Night Review - ஒரு பணக்கார குடும்ப கிறிஸ்துமஸ் பார்ட்டியில் கொள்ளையடிக்க வரும் குரூப் - Gift கொடுக்க வரும் real Santa Claus குடும்பத்தை காப்பாற்றுவதை பற்றிய படம் - David Harbour 👌 - Dark Comedy,Slasher, Engagin & Bloody 🩸 - Time Pass ✅ OTT & #Tamil ❌ Must Watch👍 ஒரு பணக்கார பவுர்புல் லேடி வீட்டுல பல மில்லியன் டாலர்கள் வச்சு இருக்கு.  இதனை மோப்பம் பிடித்த ஒரு சைக்கோ திருட்டு  குரூப் அதை கொள்ளை அடிக்க வருது.  அந்த லேடியின் மகன், மகள் , பேத்தி , பேரன் என அனைவரும் கிறிஸ்துமஸ் பார்ட்டி கொண்டாடும் அன்று தாக்குதல் நடக்கிறது.  பேத்தியின் நல்ல நடத்தையை பார்த்து உண்மையான Santa Claus பரிசு கொடுக்க வந்து இந்த கலவரத்துல மாட்டிக்கிறார்.  அந்த குழந்தையை காப்பாற்ற களத்தில் இறங்கும் Santa மொத்த குடும்பத்தையும் எப்படி வில்லன்களிடம் இருந்து காப்பாற்றினார் என்பதை ரத்தம் தெரிக்க பிளாக் காமெடியுடன் சொல்கிறது படம்.  இது மாதிரி பல படங்கள் வந்து இருக்குது..Home invasion+ Home alone படங்களின் கலவை தான் இது. என்ன இதில் கிறிஸ்துமஸ் தாத்தாவை உள்ளே நுழைத்து இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் தாத்தா எப்

Creed - 2015

Creed Review  Creed & Rocky Balboa - Boxing Legends & Friends இறந்து போன Creed'ன் மகனுக்கு coach ஆகிறார் Rocky இவனை விட திறமையானவனுடன் மோத நேரிடுகிறது.Who wins ? - Sylvester Stallone best performance - Michael Jordan 🔥 - Sentiments 👌 IMDb 7.6 🟢 | RT 95 🟢🟢 Adonis நல்ல படித்து வேலையில் இருக்கும் இளைஞன்.ஆனால் அவனது ஆர்வம் பாக்ஸிங் தான்.  Adonis பிரபல குத்துச்சண்டை பிரபலத்திற்கு illegal'a பிறந்த மகன். தனது அப்பாவின் பெயரை உபயோகிக்காமல் பாக்ஸிங்கில் பெரிய ஆளாக வேண்டும் என முயற்சிக்கிறான்.  முறையான பயிற்சி எடுக்க தனது அப்பாவின் நண்பன் மற்றும் போட்டியாளாரான Rocky Balboa ன் உதவியை நாடுகிறான். முதலில் மறுக்கும் Rocky பின்பு சரி என்று சொல்லி பயிற்சி கொடுக்கிறார்.  தன்னை விட திறமை மற்றும் பலம் வாய்ந்த ஒருவனுடன் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கிறது. இதில் ஹீரோ வென்றானா என்பதை படத்தில் பாருங்கள்.  Rocky Balboa கதாபாத்திரத்தில் Sylvester Stallone ஜொலிக்கிறார். செம நடிப்பு.. Michael B Jordan ம் கட்டுமஸ்தான உடலுடன் மெனக்கெட்டு இருக்கிறார்.  சின்ன ரொமான்ஸ் போர்ஷன், குடும்ப சென்டிமென்

Bosch - Season 1

Bosch Season 1 Review  Bosch - S1 - 10Ep #AmazonPrimeVideo 10 வருஷத்துக்கு முன்னாடி புதைக்கப்பட்ட எலும்புகள் கிடைக்கிறது காரில் பிணத்துடன் மாட்டும் சீரியல் கில்லர் இந்த இரண்டுக்கும் உள்ள தொடர்பை கண்டுபிடிக்க வரும் டிடெக்டிவ் Bosch Gripping Thriller 🔥 Binge Watch 👍 IMDb 8.5 🟢 | RT 84% 🟢 ஹீரோ Bosch ஒரு நேர்மையான ஆன கொஞ்சம் கோபப்பட்டா துப்பாக்கி எடுத்து சுடுற ஆளு. சீரிஸ் ஆரம்பமே அவர் மீது வைக்கும் விசாரணை கமிஷன்ல இருந்து தான் ஆரம்பிக்குது.  இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்னாடி புதைக்கப்பட்ட சிறுவனின் எலும்புகள் கிடைக்கிறது ‌‌இந்த கேஸ் Bosch  இடம் வருகிறது. இவரின் சிறுவயது வாழ்க்கை பல பிரச்சினைகள் நிறைந்தததாக இருக்கிறது.  இந்த சிறுவனின் கொலையை மிகவும் விசாரித்து தண்டனை வாங்கி கொடுக்க தீவிரமாக உள்ளார்.  இந்த நிலையில் வேனில் பிணத்துடன் ஒருவன் சிக்குகிறான். அவன் ஒரு கட்டத்தில் நான் தான் அந்த சிறுவனை அங்கு கொன்று புதைத்தேன் என்கிறான்.  இந்த இரண்டு கேஸுக்கும் என்ன சம்பந்தம், குற்றவாளியை  ஹீரோ எப்படி கண்டுபிடித்தார் என்பதை சொல்கிறது தொடர்.  இந்த விசாரணையின் நடுவில் கூட வேலை பார்க்கும் போல

Troll- 2022 - Norway

Troll Review  பெரிய மலை மனிதன் திடீர்னு எந்திரிச்சு எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கிட்டு சிட்டிய நோக்கி வர்றான். ஹீரோயின் & Co தடுத்து நிறுத்தினார்களா ? Graphics ✅ Kids ✅✅ Monster Movie lovers ✅ Tamil dub ❌ Available in #Netflix புதுசா எதுவும் இல்லை. கொஞ்சம் போர்.

The Big 4 - 2022-Indonesian-Netflix

 The Big 4 - 2022 #Indonesian #Netflix  Night Comes for us , Headshot, Macabre - போன்ற படங்களை எடுத்த டைரக்டரின் காமெடி கலந்த ஆக்சன் படம்  Action 🔥🔥🔥 Gun, Hand to Hand , Knife fights 🔥🔥🔥 Comedy - OK  Film length -Ve (2.20)  லாஜிக் பாக்காம என்ஜாய் பண்ணலாம் 👍 Time Pass ✅

The English - 2022 - Mini Series

1980 களில் வெஸ்டர்ன் செட்டப்பில் நடக்கும் ஒரு பழிவாங்கும் படலம் தான் இந்த சீரிஸ்.  பழிவாங்க வர்ற இங்கிலாந்து லேடி மற்றும் அவளுக்கு உதவும் உள்ளூர் பழங்குடி இளைஞனை சுற்றி நகரும் கதை.  IMDb 8.0 Episodes 6 OTT & Tamil dub ❌ Locke(Emily Blunt) லண்டனில் இருந்து தன் குழந்தையை கொன்றவனை பழி வாங்க அமெரிக்கா வருகிறார்.  ஒரு அசாதாரண சூழ்நிலையில் பழங்குடி இளைஞனை சந்திக்கிறார். இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள்.  பழிவாங்க இளைஞன் உதவ இருவரும் அந்த ரத்த பூமியில் செய்யும் பயணம் தான் இந்த தொடர்.  யார் அந்த பெண் ? எதுக்கு பழிவாங்க வருகிறாள் ? இந்த இளைஞன் யார் போன்ற கேள்விகளுக்கு ஒவ்வொரு எபிசோடாக தெளிவாகிறது.  தொடர் சிறப்பாக ஆரம்பித்தாலும் நடுவில் மெதுவாக சென்று பின்பு வேகம் எடுக்கிறது.  எனக்கு இந்த தொடரில் ரொம்ப ரொம்ப பிடித்த விஷயங்கள் குதிரைகள் வரும் காட்சிகள். அதுவும் மலை , சூரியன், புல்வெளி பகுதிகளில் லாங் ஷாட்டுகள் அருமை.  மொத்தமாகவே கேமரா ஒர்க் செமயா இருக்கிறது.  நடிப்பை பொறுத்தவரை Emily Blunt செமயாக நடித்து இருக்கிறார். நண்பராக மற்றும் ஹீரோவாக வருபவரும் ரோலுக்கு நல்ல பொருத்தம். அடுத்த முக்கியமான வி

Who is Oppenheimer ?

 "Oppenheimer" இந்த படம் நேற்று வந்த சில போஸ்டர்களால் சினிமா ரசிகர்கள் இடையே பரபரப்பாக பேசப்படுகிறது.  Oppenheimer - என்றால் என்ன?  J. Robert Oppenheimer என்பவரின் பெயரோட சுருக்கம் தான் "Oppenheimer"  யாரு இந்த  J. Robert Oppenheimer ?  இவர் அமெரிக்காவை சேர்ந்த ஒரு Nuclear Physics Scientist .  இவருக்கு  ஒரு அடைமொழி இருக்கு   "Father of the atomic bomb".(அணுகுண்டுகளின் தந்தை) இவருடைய வாழ்க்கை வரலாற்றை தழுவி Christopher Nolan படமாக எடுக்கிறார்.  இரண்டாவது உலகப் போர் சமயத்தில் அணு ஆயுதங்கள் உருவாக்கம் மற்றும் அதை பயன்படுத்த முக்கியமான காரணம் இவர் தான்.  இரண்டாம் உலகப் போர் சமயத்தில் முக்கிய அணுகுண்டு ஆராய்ச்சியான "Manhattan Project (1942 to 1946) " மற்றும் முதல் அணுஆயுத சோதனையான "Trinity Test, July 16, 1945" இரண்டிலும் முக்கிய பங்கு வகித்தவர் இவர்.  இந்த  அணுஆயுத சோதனைக்கு பிறகு இவர் பகவத்கீதையில் இருந்து ஒரு வரியை கூறியுள்ளார்  Explosion brought to mind words from the Bhagavad Gita: "Now I am become Death, the destroyer of worlds.&qu

Wednesday - 2022 - Series

Special Powers இருக்குறவங்களுக்காக உள்ள ஸ்கூலுக்கு வரும் ஹீரோயின். அங்கு நடக்கும் தொடர் கொலைகளுக்கு காரணம் யார் என்பதை கண்டுபிடிப்பதை பற்றிய தொடர்.  Fantasy படங்கள்/தொடர்கள் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பார்க்கலாம் 👍 நல்ல டைம் பாஸ்.  8 Episodes  #Netflix IMDb 8.4 | RT 72%  ஹீரோயின் யாரை பத்தியும் கவலைப்படாத ஒரு வித்தியாசமான கேரக்டர். இவர் ஸ்கூலுக்கு வந்த பிறகு தொடர்ச்சியான பல கொலைகள் நடக்கிறது.  இதனை விசாரிக்க ஆரம்பிக்க இவளது குடும்பமும் அதில் சம்பந்தப்பட்டு இருக்கிறது.  பல சவால்களை கடந்து இதன் மர்மத்தை என்ன வென்று எப்படி கண்டுபிடித்தார் என்பது தான்.  இந்த ஃபேன்டசி , மேஜிக் எல்லாம் விட்டு விட்டு பார்த்தால் கடைசியில் கதை என்னமோ ஒடுக்கப்பட்ட Vs ஒடுக்கிய மக்கள் கதை தான் 🚶 அந்த "Thing" ரோலில் வரும் அந்த கை நல்ல ஒரு கிரியேட்டிவிட்டி.. நன்றாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.  இந்த தொடரின் பெரிய ப்ள்ஸ் ஹீரோயினான Jenna Ortega வின் நடிப்பு.  கண்டிப்பாக பார்க்கலாம் 👍

God's Crooked Lines - 2022 - Spanish

God's Crooked Lines (AKA) Los renglones torcidos de Dios review  பிரபல ஸ்பானிஷ் இயக்குனர் Oriol Paulo இயக்கத்தில் The Body , The Invisible Guest வரிசையில் இன்னொரு தரமான 🔥🔥 சம்பவம். அவரோட தனித்துவம் திரைக்கதை..அத பக்காவா பண்ணிருக்கார்.  Engaging + Twists 👌👌 Tamil dub ❌ Available in #Netflix  ஒரு மிகப்பெரிய மனநலக் காப்பகத்தில் ஒரு பெண் டிடெக்டிவ் நோயாளி போல நடித்து அட்மிட் ஆகிறார். எதுக்கு இங்க வர்றார் என்றால் அங்க நடந்த ஒரு கொலையை கண்டுபிடிக்குமாறு இறந்த பேஷண்ட்டின் அப்பா கேட்டுக் கொண்டதால்.  வெளில இருந்து கண்டுபிடிக்க முடியாது என்பதால் இப்படி நோயாளியாக உள்ளே போகிறார்.  இப்ப இதுல வர்ற முதல் ட்விஸ்ட் என்னனா இந்த லேடி உண்மையிலேயே மனநிலை பாதித்தவர் என அந்த ஆஸ்பத்திரி இயக்குனர் முடிவு பண்ணி வைத்தியம் பாக்க ஆரம்பிக்கிறது தான்.  இதுக்கு அப்புறம் கதையில் பல ட்விஸ்ட்டுகள் வச்சு அங்க வேலை பார்க்கும் டாக்டர்கள் மட்டும் இல்லாம நம்மையும் உண்மையிலேயே  அந்த லேடி டிடெக்டிவா இல்ல பேஷண்ட்டானு யோசிக்க வைக்கிறார்கள்.  படத்தோட பெரிய அட்வான்ட்டேஜ் இந்த சஸ்பென்ஸ்ஸை கடைசி வரைக்கும் தக்க வைச்சது.  படம

Emancipation - 2022

Will Smith நடிப்பில் 1865 களில் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை எதிர்த்து தப்பி வந்த Peter என்பவரின் வாழ்க்கையில் நடநத  உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம்.  சூப்பரான படம் 🔥 கண்டிப்பா பாக்கலாம்  Tamil dub ❌ Subs ✅ Shot in B/W Available @Appletv Will Smith ஒரு பேட்டியில் எனக்கு அடிமைத்தனத்தை பற்றி நிறைய படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் அந்த மாதிரி எங்களை காட்டுவதில் எனக்கு விருப்பம் இல்லை அதனால் மறுத்துவிட்டேன் என்றார்.  குறிப்பாக ஒரு புகைப்படம் என்னுடைய மனதை மாற்றியது. இது அடிமைத்தனத்தை பற்றிய படம் அல்ல மாறாக இது நம்பிக்கை, சுதந்திரம் போராட்டத்தை பற்றிய படம் என்று கூறி இருந்தார். Peter மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒரு பண்ணையில் அடிமையாக உள்ளான். அங்கிருந்து இன்னொரு ஓனருக்கு விற்கப்படுகிறான்.  அவனை ஒரு சதுப்பு நிலம் தாண்டி உள்ள கொடூரமான கட்டுப்பாடுகள் உள்ள இடத்தில் ரயில்வே டிராக் போடும் வேலை கொடுக்கப்படுகிறது.  ஒரு கட்டத்தில் அங்கு இருந்து தப்பித்து ஆபத்தான சதுப்பு நிலங்களை தாண்டி குடும்பத்துடன் இணைந்தானா என்பதை சொல்கிறது படம்‌ . படம் 12 Years a slave படம் போல் ஆரம்பித்து, சர்வைவ

Decision To Leave - 2022

Oldboy பட டைரக்டரின் படம் இது.  ஒரு மலையின் கீழ இறந்த உடல் கெடைக்குது. அதை விசாரிக்கும் ஹீரோவான போலீஸ் ஆ இளம்  மனைவியின் செயல்பாடுகளில் சந்தேகப்பட்டு விசாரிக்க ஆரம்பித்து அவளின் மேல் பைத்தியம் ஆகிறான்.இதனால் வரும் பிரச்சினைகள் தான் படம். IMDb 7.3 🟢 | RT  Korean , Tamil dub ❌  Available @mubi படம் ரொம்ப ரொம்ப ஸ்லோ.. மொத்தம் 2.20 மணி நேரம் படம் ஓடுது.  நடிப்பு , கேமரா, எடிட்டிங் எல்லாம் தரம்.  முதல் 1.30 மணி நேரத்தை தாண்டிட்டா பின்னாடி படம் பரவாயில்லை.  சினிமா ரசிகர்களுக்கு பிடிக்க வாய்ப்பு இருக்கு. எனக்கு அவ்வளவு பிடிக்கல.  Mystery + Investigation Thriller னு நெனச்சு தான் படத்த பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் எனக்கு என்னமோ லவ் ஸ்டோரி மாதிரி தான் தெரிஞ்சது.  கடைசில கடல் பக்கத்துல வர்ற க்ளைமாக்ஸ். எப்படி எல்லாம் சாகலாம்/சாகடிக்கலாம்னு இந்த கொரியன்காரனுக ரூம் போட்டு யோசிப்பானுக போல.  ஒரு‌ டைம் டிரை பண்ணி பாக்கலாம்‌ 👍  

Holy Spider - 2022

Holy Spider Tamil Review  ஈரானில் உள்ள ஒரு ஊரில் வசிக்கும் ஒருவன். நான் ஊரை சுத்தம் பண்றேன் என்று விபசாரம்  செய்யும் பெண்களை கொல்கிறான். இதை கண்டுபிடிக்க வரும்  பெண் நிருபர் சந்திக்கும் சவால்கள்.  IMDb 7.3 🟢  Tamil dub ❌ Content wise பார்த்தா Disturbing movie. Watch it on your own.  ஒரு கன்ஸ்டரக்சனில் வேலை பார்க்கும் குடும்பஸ்தன் தான் சீரியல் கில்லர். அழகான மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பவன் சான்ஸ் கெடைக்கும் போது எல்லாம் விபச்சாரிகளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து கொல்றான்.  விபச்சாரிகள் என்பதால் போலீஸ் அவ்வளவாக கண்டுக்காமல் இருப்பதானால் ஒரு பெண் நிருபர் இதனை விசாரிக்க வருகிறார்.  இவர் களத்தில் இறங்கி இந்த கொலைகாரனை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதை சொல்கிறது படம்.  கொலை செய்யும காட்சிகள் ரத்தம் சொட்ட சொட்ட எதுவும் இல்லை என்றாலும் ரொம்பவே disturbing.  படம் முடியும் போது அந்த பெண் ரிப்போர்ட்டர் ஒரு வீடியோ பார்ப்பார். அது ரொம்பவே ஒரு ஸ்ட்ராங்கான மெஸேஜ்.  கண்டிப்பாக பார்க்கலாம். Serial killer movie fans and cinema lovers must watch 👍

Space Related Movies

Space Related Movies விண்வெளி சம்மந்தப்பட்ட படங்கள் எப்பவுமே ஆர்வத்தை தூண்டக்கூடியது. விண்கலத்தின் டிசைன் , விண்வெளியின் தோற்றம் என கலக்கி இருப்பார்கள்.  Interstellar, Martian, Gravity போன்ற பிரபல படங்களை வேண்டும் என்றே தான் இதில் சேர்க்கவில்லை.  Life - 2017 Space Station ல சின்னதா ஒரு உயிரினத்தை கண்டுபிடிப்பார்கள் விஞ்ஞானிகள் . ஆரம்பத்தில் அமைதியாக இருக்கும் அந்த உயிர் பின்னாடி இவர்களை வச்சு செய்யும். அதிலிருந்து தப்பினார்களா என்பதே படம்.  Space Cowboys - 2000 திறமையான Clint Eastwood (Richard Jewell, Unforgiven) - ன் நடிப்பு & இயக்கfத்தில் வெளிவந்த சூப்பரான Adventure படம் இது. பழுதாகி போன சாட்டிலைடை பூமிக்குள் வராமல் தடுக்கும் மிஷன்னுக்காக விண்வெளிக்கு போகும் 4 சீனியர் சிட்டிசன்களின் அட்வென்சர் தான் படம். Full Review Ad Astra - 2019 Brad Pitt & Tommy Lee Jones நடிப்பில் வெளிவந்த ஒரு Space Adventure படம் இது. The Lost City Of Z எடுத்த டைரக்டரின் இன்னொரு படம்.  காணாமல் போன விண்கலத்தில் இருந்து 30 வருடங்களுக்கு பின் சிக்னல் வருகிறது. அதை ஆராய்ச்சி செய்ய‌ போகும் இன்னொரு விண்கலத்தி

Khakee The Bihar Chapter

Khakee The Bihar Chapter Tamil Review  புதுசா வேலைக்கு சேர்ந்த போலீஸ் அதை டைம்ல ரௌடியா வாழ்க்கையை ஆரம்பிக்கும் வில்லன். ஹீரோ வில்லனை பிடிக்க நடத்தும் வேட்டையை ஜாதி, அரசியல் கலந்து 7 எபிசோட்களில் பரபரவென போகிறது.  7 Episodes @Netflix Tamil Dub ✅ படத்தின் இரு முக்கிய கேரக்டர்களும் அவர்களுடைய கேரியரில் மள மளவென வளர்கிறார்கள்.  உண்மையில் நடந்த சம்பவத்தை வைத்து எழுதப்பட்ட புத்தகத்தை தழுவி தேவையான அளவு மசாலா சேர்த்து எடுக்கப்பட்ட தொடர்.  அதனால வழக்கமான போலீஸ் & வில்லன் காட்சிகள் நிறைய உண்டு. ஆனால் இதோட பெரிய ப்ளஸ் பாயிண்ட் பரபரவென நகரும் திரைக்கதை.  அதனால லாஜிக் எல்லாம் பாக்காம என்ஜாய் பண்ணலாம். நல்ல டைம் பாஸ் மெட்டீரியல்.  வில்லன் மிரட்டி இருக்கிறார். ஹீரோக்கு டிபிகல் போலீஸ் ரோல்.  பீகார் என்றால் காஞ்சு பஞ்சத்துல இருக்கும் ஊர் என்று நினைத்து இருந்தேன். இதுல பசுமையான இடமா பார்த்து எடுத்து இருப்பாங்க போல.  ரொம்ப கொடூரமான காட்சிகள் இல்ல. ஆபாச காட்சிகளும் இல்ல.  கண்டிப்பாக பார்க்கலாம் 👍