The Wonder review
Quick Review:
The Wonder - 2022 in #Netflix
-1860 களில் நடக்கும் கதை
- 4 மாசமா சாப்பிடாமல் இருக்கும் சிறுமி
- நம்பிக்கை Vs அறிவியல்
- உண்மையை கண்டுபிடிக்க வரும் நர்ஸ்
Movie Very Slow 🟡
Florence Pugh - நடிப்பு 🔥
Visuals 🟢
climax 👍
IMDb 6.7 🟢 | RT 87% 🟢🟢
I liked it . Not for all
Full Review
1860 களில் அயர்லாந்து கிராமத்தில் நடக்கும் கதை. ஒரு சிறுமி நாலு மாசமா சாப்பிடாமல் நலமாக இருக்கிறாள்.
அந்த ஊர் பெருசுகள் எல்லாம் சேர்ந்து இது எப்படி என ஆராய்ச்சி பண்ண ஒரு குழுவை அமைக்கிறார்கள்.
இந்த குழு ஒரு வெளியூர் நர்சை வேலைக்கு வைக்கிறது. நர்ஸ் வேலை என்னவென்றால் ஏமாற்று வேலை எதுவும் நடக்குதா என்பதை கண்காணிப்பது மற்றும் அந்த சிறுமியின் உடல்நிலையில் ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா என்பதை கண்காணித்து அறிக்கை கொடுப்பது.
இப்ப அந்த பொண்ணு உண்மையிலேயே சாப்பிடாமல் இருக்கா ? இல்லை ஏமாந்து வேலையா ? இதனை நர்ஸ் கண்டுபிடித்தாரா என்பதை சொல்கிறது படம்.
அறிவியல் மற்றும் கண்மூடித்தனமான நம்பிக்கை என்ற இரண்டுக்கும் நடுவில் நடப்பதை சொல்லும் படம்.
செட்டிங்ஸ், லொக்கேஷன்கள மற்றும் ஆங்காங்கே வரும் இசை போன்றவை சிறப்பு.
ஹீரோயின் நடந்து போகும் காட்சிகள் எல்லாம் அருமை.
ஹீரோயின் Florence Pugh (Midsommer ) செம் நடிப்பு. அந்த சிறுமியும் கலக்கி இருக்கிறார்.
படம் செம ஸ்லோ.அதனால் எல்லாருக்கும் இந்த படம் பிடிக்க வாய்ப்பு இல்ல.
ஆனா Worth Watching 👍
கருத்துகள்
கருத்துரையிடுக