Der Pass - Pagan Peak - Season 1 Review
ஜெர்மன் - ஆஸ்திரியா பார்டரில் பனியில் கொடூரமாக கொல்லப்பட்டு வித்தியாசமாக உக்கார வைக்கப்பட நிலையில் பிணம் கிடைக்கிறது.
1 Season, 8 Episodes
IMDb 8.0 🟢🟢
Tamil dub ❌
பல கொலைகள் இது போல் தொடர சீரியல் கில்லரை கண்டுபிடிப்பது தான் தொடர்.
Quick Review: Go for it
Dark சீரிஸ் உருவாக்கத்தில் பங்காற்றியவர்களிடம் இருந்து வந்த ஒரு investigation Thriller.
பிணத்தின் ஒரு பகுதி ஜெர்மனியிலும் இன்னொரு பகுதி ஆஸ்திரியாவிலும் இருப்பதால் இரண்டு நாட்டு போலீஸும் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
ஜெர்மன் பக்கம் இருந்து பெண் போலீஸ் எல்லி மற்றும் ஆஸ்திரியா பக்கம் இருந்து எப்போதும் குடிபோதையில் ஒரு டைப்பாக சுத்தும் போலீஸ் வின்ட்டர் என இருவர் தலைமையில் விசாரணை ஆரம்பிக்கிறது.
கொலையாளி மிகவும் திறமைசாலியாக இருப்பதால் எந்த தடயமும் கிடைக்காமல் போராடுகிறார்கள். இன்னொரு பக்கம் கொலைகள் விழுந்து கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்துக்கு அப்புறம் கொலைகளை தாண்டி பெரிய லெவல்ல தாக்குதலை ஆரம்பிக்கிறான்.
எப்படி இவனை கண்டுபிடித்தார்கள் என்பதை சுவாரஸ்யமாக சொல்கிறது தொடர்.
முதலில் லொக்கேஷன்கள் செம சூப்பர்.அதுவும் இந்த மாதிரி கதைக்கு தேவையான அந்த Dark Atmosphere ஐ கொடுக்கிறது.
பிண்ணனி இசையும் செமயாக இருக்கிறது. ஒளிப்பதிவு, நடிப்பு என அனைத்தும் அருமை.
வில்லன் மிரட்டி இருக்கிறான்.
ரொம்பவே சூப்மரான ஒரு சீரியல் கில்லர் வேட்டையை பற்றிய தொடர். இவ்வளவு நாள் எப்படி மிஸ் பண்ணேன் என தெரியவில்லை.
Must Watch 🔥
கருத்துகள்
கருத்துரையிடுக