முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Court Room Drama Movies Recommendation

Court Room Drama Movies Recommendation Amistad -1996 Stephen Spielberg' Movie  கொத்தடிமைகளை கப்பலில் கொண்டு வரும்போது போராட்டம் வெடிக்கிறது. தங்களை சிறை பிடித்தவர்களை போட்டு தள்ளிவிட்டு அமெரிக்காவில் கரை ஒதுக்குகிறார்கள்.  IMDb 7.3 🟢 | RT 78% 🟢 அங்கு நடக்கும் சட்டம் போராட்டத்தில் விடுதலை ஆனார்களா என்பதை சொல்லும் படம்.  Full Review Lincoln Lawyer - 2011 பக்கி எப்படி கோர்த்து விட்ருக்கு பார்த்தியா என்பது மாதிரியான கதைக்களம்.  IMDb 7.3 🟢 | RT 83%   ஹீரோவான வக்கீலை எசகுபிசகாக மட்டிவிடும் அவனது க்ளைய்ன்ட் வில்லன்‌. இதிலிருந்து ஹீரோ எப்படி மீண்டான் என்பதை சொல்லும் படம்.  Full Review Dark Waters - 2019 உடலுக்கு ரொம்பவே கேடு விளைவிக்கும் ஒரு கெமிக்கல் கம்பெனியை எதிர்த்து போராடும் கார்ப்பரேட் வக்கீலின் கதை.  IMDb 7.6 🟢 | RT 89% 🟢🟢 Full Review Primal Fear - 1996 சர்ச்ல பெரிய பொறுப்பில் இருக்கும் ஃபாதர் ஒருவரை அங்கு வேலை பார்க்கும் ஒரு சிறுவன் கொன்று விட்டான் என்று கைது செய்யப்படுகிறார்.  IMDb 7.7 🟢 | RT 77 🟢 அவனுக்கு ஆதரவாக களமிறங்கும் வக்கீல் சிறுவனை வெளியே கொண்டு வந்தாரா என்பதை சொல

The Wonder - 2022

The Wonder review  Quick Review:  The Wonder - 2022 in #Netflix -1860 களில் நடக்கும் கதை - 4 மாசமா சாப்பிடாமல் இருக்கும் சிறுமி - நம்பிக்கை Vs அறிவியல் - உண்மையை கண்டுபிடிக்க வரும் நர்ஸ் Movie Very Slow 🟡 Florence Pugh - நடிப்பு 🔥 Visuals 🟢 climax 👍 IMDb 6.7 🟢 | RT 87% 🟢🟢 I liked it . Not for all Full Review  1860 களில் அயர்லாந்து கிராமத்தில் நடக்கும் கதை. ஒரு சிறுமி நாலு மாசமா சாப்பிடாமல் நலமாக இருக்கிறாள்.  அந்த ஊர் பெருசுகள் எல்லாம் சேர்ந்து இது எப்படி என ஆராய்ச்சி பண்ண ஒரு குழுவை அமைக்கிறார்கள்.  இந்த குழு ஒரு வெளியூர் நர்சை வேலைக்கு வைக்கிறது.‌ நர்ஸ் வேலை என்னவென்றால் ஏமாற்று வேலை எதுவும் நடக்குதா என்பதை கண்காணிப்பது மற்றும் அந்த சிறுமியின் உடல்நிலையில் ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா என்பதை கண்காணித்து அறிக்கை கொடுப்பது.  இப்ப அந்த பொண்ணு உண்மையிலேயே சாப்பிடாமல் இருக்கா ? இல்லை ஏமாந்து வேலையா ? இதனை நர்ஸ் கண்டுபிடித்தாரா என்பதை சொல்கிறது படம். அறிவியல் மற்றும் கண்மூடித்தனமான நம்பிக்கை என்ற இரண்டுக்கும் நடுவில் நடப்பதை சொல்லும் படம்.  செட்டிங்ஸ், லொக்கேஷன்கள மற்றும் ஆங்காங்கே வ

1899 - Netflix Series

1899 - Netflix Series Review In Tamil பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்த சீரிஸ் இது. முடிந்த வரை ஸ்பாய்லர் இல்லாமல் ரிவ்யூ கொடுக்க முயற்சி பண்றேன்.  In Short: Worth Watching 👍. Not for everyone. ரிவ்யூக்கு முன்னாடி இதுவரைக்கும் எக்கச்சக்க கேள்விகள்‌ வந்தது. முதலில் அதற்கு பதில்களை சொல்லிட்டு ரிவ்யூ போகலாம்.  ஏன் இந்த சீரிஸ்க்கு இவ்வளவு பில்டப்?  Dark னு ஒரு சீரிஸ் இருக்கு. இதுவரை வெளிவந்த Sci-Fi சீரிஸகளில் ரொம்பவே தனித்துவமானது மற்றும் பார்ப்பவர்களை ரொம்பவே யோசிக்க வைக்கும்.   Dark சீரிஸ் பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவம். அந்த சீரிஸை உருவாக்கியவர்களின் அடுத்த படைப்பு என்பதால் ரசிகர்களிடம் ரொம்பவே எதிர்ப்பார்ப்பு அதிகம். Bermuda Triangle பற்றிய கதையா ?  இல்லை. அது பற்றி எதுவும் இல்லை. எந்த மொழி சீரிஸ்? இந்த சீரிஸ்க்கு தமிழ் டப் இருக்கா ?  ஜெர்மன் மொழியில் வந்து உள்ளது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி டப் ஆடியோ உள்ளது.  தமிழ் டப் இல்லை. இப்போதைக்கு தமிழ் டப் வர்ற மாதிரி தெரியல.  Dark சீரிஸ்க்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா ? அதை பார்த்தால் தான் இது புரியுமா ?  எந்த சம்பந்தமும் இல்லை. நேர

Anya Taylor-Joy - Movies

Anya Taylor-Joy - Movies 1. Last Night in Soho கிராமத்தில் வளரந்த பெண் நகரத்திற்கு படிக்க போகிறார். அங்கு தங்கும் ஒரு ரூமில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்கள் தான் படம்.  IMDb 7.1 🟢 | RT 76% 🟢 படம் 1960 & இப்ப‌ நடக்கும் சம்பவங்கள் என மாறி மாறி வரும். 1960 ல Anya வருவார். செம் ரோல் இந்த படத்துல. Full Review 2. Split ஒரு சைக்கோ 3 பெண்களை கடத்தி வந்து ரூம்ல அடிச்சு வைச்சு இருப்பான். எப்ப பார்த்தாலும் பீஸ்ட் வர போறான்டானு சொல்லிட்டே இருப்பேன். இந்த பெண்களில் ஒருத்தியாக Anya வருவார்.  IMDb 7.3 🟢| RT 78% 🟢 Full Review 3. The Queen's Gambit , Mini Series   சிறுவயதில் பெற்றோர்களை இழந்த ஒரு சிறுமி. தனக்குள் இருக்கும் செஸ் விளையாடும் திறமையை வைத்து வாழ்க்கையில் முன்னேறுவதை பற்றிய படம்.  IMDb 8.6 🟢🟢 | RT 96% 🟢🟢🟢 Anya கேரியரில் சிறப்பான சீரிஸ் இது‌  Full Review :  4. The VVitch: A New - England Folktale நல்லா இருந்த குடும்பம் பில்லி , சூனியம் காரணமாக நாசமா‌ போனதை சொல்றது தான்‌ இந்த படம். IMDb 6.9 🟢 | RT 90% 🟢🟢 Full Review 5. The Menu  இப்ப வெளிவந்து தியேட்டரில் ஓடிக்கிட்டு இருக்கும்

Der Pass - Pagan Peak - 2018 - Season 1

Der Pass - Pagan Peak  - Season 1 Review  ஜெர்மன் - ஆஸ்திரியா பார்டரில் பனியில் கொடூரமாக கொல்லப்பட்டு வித்தியாசமாக உக்கார வைக்கப்பட நிலையில் பிணம் கிடைக்கிறது. 1 Season, 8 Episodes  IMDb 8.0 🟢🟢 Tamil dub ❌ பல கொலைகள் இது போல் தொடர சீரியல் கில்லரை கண்டுபிடிப்பது தான் தொடர்.  Quick Review: Go for it   Dark சீரிஸ் உருவாக்கத்தில் பங்காற்றியவர்களிடம் இருந்து  வந்த ஒரு investigation Thriller.   பிணத்தின் ஒரு பகுதி ஜெர்மனியிலும் இன்னொரு பகுதி ஆஸ்திரியாவிலும் இருப்பதால் இரண்டு நாட்டு போலீஸும் இணைந்து பணியாற்றுகிறார்கள்.  ஜெர்மன் பக்கம் இருந்து பெண் போலீஸ் எல்லி மற்றும் ஆஸ்திரியா பக்கம் இருந்து எப்போதும் குடிபோதையில் ஒரு டைப்பாக சுத்தும் போலீஸ் வின்ட்டர் என இருவர் தலைமையில் விசாரணை ஆரம்பிக்கிறது.  கொலையாளி மிகவும் திறமைசாலியாக இருப்பதால் எந்த தடயமும் கிடைக்காமல் போராடுகிறார்கள். இன்னொரு பக்கம் கொலைகள் விழுந்து கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்துக்கு அப்புறம் கொலைகளை தாண்டி பெரிய லெவல்ல தாக்குதலை ஆரம்பிக்கிறான். எப்படி இவனை கண்டுபிடித்தார்கள் என்பதை சுவாரஸ்யமாக சொல்கிறது தொடர்.  முதலில் லொக்கேஷன்

All Of Us Are Dead - 2022

All Of Us Are Dead Review ஒரு பள்ளிக்கூடத்தில் வைரஸ் காரணமாக Zombie ஆக மாறும் மாணவர்கள் & ஆசிரியரகள்.இந்த தாக்குதலில் இருந்து தப்பித்தவர்களின் சர்வைவல் தான் இந்த தொடர்.  1 Season, 13 Episodes Tamil dub ❌ IMDb 7.1 Available in #Netflix பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவரின் சோதனை தவறாக போகிறது. ஒரு மாணவி வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகிறாள்  என்ன ஏது என்று தெரியும் முன்பே ஸ்கூல், ஹாஸ்பிடல் என ஆரம்பித்து ஊரே ரணகளம் ஆகிறது.  பள்ளியில் ஆங்காங்கே தப்பித்தவர்கள் கிடைத்த அறையில் தஞ்சம் அடைகிறார்கள்.  வெளியில் இருந்து உதவி வர தாமதாமாக ஜாம்பி தாக்குதலை சமாளிக்க பல வழிகளை கையாள்கிறார்கள்.  . சீரிஸ்ஸில் புதுசாக என்று பார்த்தால் எதுவும் இல்லை. ஆனா பொழுதுபோக்குக்கு பஞ்சம் இல்லாமல் விறு விறு என போகும் ‌  காதல் , மோதல் , சென்ட்டிமென்ட் என அனைத்தும் உண்டு.  பிற்பகுதியில் ரெண்டு மூணு எபிசோட்களில் பேசிட்டு இருந்தாங்க.. அது எல்லாம் ஸ்கிப் பண்ணி தான் பார்த்தேன் ‌  நல்ல டைம் பாஸ் சீரிஸ் கண்டிப்பாக பார்க்கலாம். 

Apocalypse Based Netflix Series

Apocalypse Based Netflix Series Kingdom IMDb 8.3 🟢🟢 | 2 Seasons , 13 Episodes | Netflix  ஜாம்பியாக மாறிவிட்ட ராஜா. அவரை சுற்றி இருப்பவர்களின்பதவிக்கான அரசியல்..‌ மின்னல் வேகத்தில் நாடு முழுவதும் பரவும் ஜாம்பி தாக்குதல். இதற்கு நடுவே நாட்டை காப்பாற்ற போராடும் பட்டத்து இளவரசன். சூப்பரான சீரிஸ் இது. கண்டிப்பாக பாருங்க.  Full Review   Sweet Tooth   IMDb 7.8 🟢 | 1 Season, 8 Episodes | Netflix  உலகம் அழியும் சமயத்தில் பாதி மனிதனும் பாதி மானும் கலந்து பிறந்த சிறுவன் Gus .  தன் தந்தையால் காட்டில் தனிமையில் வளர்க்கப் படுகிறான். 10 வயதில் தந்தை இறந்து விட தனது தாயை தேடி கிளம்புகிறான் Gus . ஆபத்தான பயணத்தில் அவன் செய்யும் சாகசங்கள் தான் தொடரின் கதை.  Full Review   Sweet Home IMDb 7.3 🟢| 1 Season, 12 Episodes | Netflix  ஒரு வைரஸ் தாக்குதலில் அப்பார்ட்மெண்ட்டில் சிக்க கொண்ட குரூப். இந்த வைரஸ் தாக்கினால் மனிதர்கள் ராட்சச மிருகமாக மாறி மற்றவர்களை எப்போது தாக்குவார்கள் என்று தெரியாது.  இதில் ஒருவன் தான் ஸ்பெஷல் ஆற்றல் கொண்ட ஹீரோவான சிறுவன்.   Full Review

Monica, O My Darling - 2022

Monica, O My Darling Review  கம்பெனில மூணு பேரை என் வயிற்றில் வளரும் குழந்தை உன்னோடது என சொல்லி அதே கம்பெனியில் வேலை பார்க்கும் மோனிகா ப்ளாக் மெயில் பண்றா. மூணு பேரும் சேர்ந்து அவளை கொல்ல ப்ளான் பண்றானுக. அதனால் வரும் கலவரங்கள் தான் படம்.  Available in Netflix Tamil dub ✅ இருக்குபா  படம் ப்ளாக் காமெடி வகையை சேர்ந்தது. படம் முழுவதும் Retro Style music மற்றும் பாடல்கள் உபயோகப்படுத்தி இருக்காங்க. அது நல்லாவே செட் ஆகி இருக்கு. யாரு கொலை பண்ணி இருப்பாங்க என்ற சஸ்பென்ஸ் நல்லா மெயின்ட்டைன் பண்ணி இருக்காங்க.  Monica கதாபாத்திரத்தில் Hina Qureshi அருமை.  Radhika Apte ரோல் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை .  நல்ல டைம் பாஸ் படம். கண்டிப்பாக பார்க்கலாம் 👍

Apocalypse Based Movies

Apocalypse Based Movies - Part  3  Bird Box - 2018 ஏதோ மர்மமான ஒன்று அதை கண்ணால் பார்த்தால் தற்கொலை செய்து கொள்வார்கள். இந்த சூழ்நிலையில் பாதுகாப்பான இடத்தை தேடும் அம்மா மற்றும் இரண்டு குழந்தைகள் பற்றிய படம்.  Zombieland - 2009 Zombie கள் நிறைந்த அமெரிக்காவில் ஒரு இளைஞன், இரண்டு சகோதரிகள் மற்றும் ஒருவருடன் செய்யும் பயணம் தான் படம். Full Review   Train to Busan - 2016 ஓடும் ட்ரெயினில் நடக்கும் Zombie தாக்குதல்.  இந்த படத்தை பெரும்பாலும் அனைவரும் கேள்விபட்டு இருப்பீர்கள். இன்னும் பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாக Highly Recommended.  Full Review   The Darkest Hour - 2011 ஏலியன் தாக்குதலில் ரஷ்யாவில்  மாட்டிக்கொண்ட இளைஞர்கள் மற்றும் ஏலியன்களை எதிர்த்து போராடுவது பற்றிய படம்.  ரேட்டிங் ரொம்ப கம்மி.. ஆனா எனக்கு இந்த படம் பிடிக்கும்.  #Alive - 2020 ஒரே ஜாம்பி தாக்குதலில் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறது‌ .அதில் இருந்து தப்பித்த இரண்டு பேரின் சர்வைவல்    Full Review  

Wendell & Wild-2022

Wendell & Wild-2022 Tamil Review  இது ஒரு அனிமேஷன் படம்.  ஒரு ஆதரவற்ற சிறுமியை ஏமாற்றி தங்களை பாதாள உலகத்தில் இருந்து பூமிக்கு கூப்பிட வைக்க பிளான் போடுது 2 பூதங்கள்.  ஏன்? எதற்கு? இதனால் வரும் பிரச்சினைகள் தான் படம்.  IMDb 6.5 Available Netflix Tamil dub ❌ இந்த படத்தை பார்க்க முக்கிய காரணம் Jordan Peele( Getout ,  Nope ) . ஒரு பூதத்திற்கு வாய்ஸ் கொடுத்தது மட்டும் இல்லாமல் திரைக்கதையை இணைந்து எழுதி இருக்கிறார்.  இதில் கொஞ்சம் கார்ப்பரேட் சதிகளும் உள்ள வருது.  படம் நல்லா இருக்கு.‌ஆனால் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க முயல்கிறது படம். அதுனால கொஞ்சம் நீளமா இருக்குற மாதிரி ஃபீலிங்.  குழந்தைகளுக்கு பிடிப்பது டவுட் தான்.  கண்டிப்பாக ஒரு தடவை பார்க்கலாம். 

Spring - 2014

Spring Movie Review  Horror, SciFi & Romance கலந்த ஒரு வித்தியாசமான படம் பாக்கனும்னா இந்த படம் பாருங்க.  அமெரிக்காவிருந்து இத்தாலிக்கு செல்லும் இளைஞனுக்கும் அங்கு வசிக்கும் மர்மமான ஒரு பெண்ணுக்கும் இடையே வரும் காதல் பற்றிய படம். ஹீரோ ஒரு பாரில் சமையல்காரர் ஒரு பிரச்சினை காரணமாக நாட்டை விட்டு ஓடி இத்தாலி போகிறார்.  அங்கு ஒரு அழகான மற்றும் மர்மமான பெண்ணை சந்திக்கிறான். அவளுடைய நடவடிக்கைகள் வித்தியாசமான முறையில் இருக்கிறது.  ஒரு நாள் அவள் உண்மையில் யார் என்பது தெரியவர அதிர்ச்சியில் உறைகிறான்.  அதற்கு அப்புறம் அவன் என்ன முடிவு எடுக்கிறான் என்பதை படத்தில் பாருங்கள்.  படம் ரொம்பவே மெதுவாக தான் போகும். நிறைய பேசுவார்கள். ரொம்ப பயமுறுத்தும் திகில் காட்சிகள் இல்லை. இதில் காட்டப்படும் ஹாரர் ஒரு மாதிரி வித்தியாசமா இருந்தது.  கடைசியில் அந்த ஹீரோவை பார்த்தால் என் மனதில் தோன்றியது "இருந்தாலும் உனக்கு ரொம்ப தைரியம்பா "  சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கலாம் 👍 மற்றவர்கள் உங்களது தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்து பாருங்கள்.  கண்டிப்பாக 18+ 

Post Apocalyptic Movies - Part 2

Post Apocalyptic Movies - Part 2  1. The Road உலகம் அழிஞ்ச பின்பு அப்பாவும் மகனும் கடற்கரையில் ஏதாவது வாழ வழி கிடைக்குமா என அதை நோக்கி செல்லும் பயணம் தான் படம்.  Full Review 2. What Happened to Monday  எதிர்காலத்தில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள அனுமதி இல்லை.‌ஆனால் ஒரே மாதிரி இருக்கும் 7 சகோதரிகளின் சர்வைவல். Full Review 3. Love and Monsters உலகம் அழிந்து போன பின்பு கொடூரமான மிருகங்கள் சூழ்ந்து உள்ள நிலையில் தனது முன்னாள் காதலியை தேடி பயணம் செய்யும் இளைஞனின் கதை.  Full Review 4. Cargo ஜாம்பி கடி வாங்கிய தந்தை தான் ஜாம்பியாக மாறும் முன் தன் குழந்தையை பத்திரமாக யாரிடமாவது ஒப்படைக்க போராடும் தந்தையின் போராட்டம்.  Full Review 5. I am mother உலகம் அழிந்து பின்னர் ஒரு குழந்தையை வளர்க்கும் ரோபோட் அம்மாவிற்கும் மகளுக்கும் வெளியில் இருந்து வரும் பெண் ஒருத்தியால் ஏற்படும் பிரச்சினை தான் படம். Full Review

The Woman King - 2022

The Woman King - 2022 ஆப்பிரிக்காவில் 1800 களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஆக்சன் படம்.  படம் நல்லா இருக்கு ✅ கண்டிப்பாக பார்க்கலாம் 👍 IMDb 6.7 🟢| RT 94% 🟢 Tamil dub ❌ OTT ❌ ஒரு பெரிய சாம்ராஜ்யத்தில் இரண்டு குரூப்புகள் உள்ளன‌ . அதில் ஒரு அரசரிடம் மிகவும் திறமை வாய்ந்த பெண்கள் படை உள்ளது. அந்த படையின் தலைவி தான் ஹீரோயின்.  இவளின் தலைமையில் எதிரிப் படைகளை எப்படி வெற்றி பெற்று ராணியாக ஆனார் என்பது தான் படம்.  ஹீரோயினாகViola Davis சிறப்பான தேர்வு. அந்த இளம் வீராங்கனையாக வருபவரும் அருமை. கொத்தடிமை முறையின் கொடுமைகளையும் தொட்டு செல்கிறது படம்.  சண்டை , சென்ட்டிமென்ட் என கலந்த பேக்கேஜ்ஜாக உள்ளது.  கண்டிப்பாக பாருங்க. 

Post Apocalyptic Series- Part -1

Post Apocalyptic Series- Part -1 1. The Walking Dead போலீஸ்காரர் ஒருவர் ஆஸ்பத்திரியில் நினைவு தெளிந்து எந்திரிச்சு ஊரே. அழிஞ்சு போய் ஜாம்பி கூட்டமா இருக்கும். குடும்பத்தை கண்டுபிடிச்சு,  தப்பித்த மக்களை காப்பாற்றி சர்வைவ் பண்றது தான் கதை.  11 Seasons , 177 Episodes #Netflix Tamil dub ❌ 2.The 100 பூமில வாழ முடியாமல் போனதால் விண்வெளியில் வசிக்க போகுது ஒரு குரூப். அங்கயும் இடம் பத்தாமல் பூமிக்கு திரும்பலாமானு 100 பேரை அனுப்பி செக் பண்ணுது. அவங்க பண்ற சர்வவவல் தான் கதை.  7 Seasons, 100 Episodes  in #Netflix  Tamil dub ❌ 3. The Handmaid's Tale உலகத்தில் பெரும்பாலான பெண்களுக்கு கருவுறும் திறன் போய்விடுகிறது. கருவை சுமக்கும் திறன் உள்ள பெண்களை வலுக்கட்டாயமாக கூட்டி வந்து பெரிய பெரிய அதிகாரிகளுக்கு வாரிசு பெத்து கொடுக்க அனுப்புது அரசாங்கம்.  இதில் சிக்கிக்கொண்ட ஒரு பெண்ணின் கதை. 5 Season, 57 Episodes in Primevideo  Tamil dub ❌ 4. The Last ship ஒரு வைரஸ் தாக்குதலில் உலகம் அழிந்து விட அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பொறுப்பு ஒரு கப்பல் கேப்டனிடம் கொடுக்கப் படுகிறது. ஒரு விஞ்ஞானி  உடன் போர் கப

Post Apocalyptic Movies - part 1

Post Apocalyptic Movies - Part 1 உலகம் அழிந்து போன பின்பு நடப்பது போன்ற படங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். லொக்கேஷன்கள், ஆயுதங்கள் , வாழ முயற்சிக்க சந்திக்கும் சவால்கள் என வித்தியாசமாக இருக்கும். பிடித்த படங்களில் Random picks . 1. Children of Men - 2006 பெண்கள் கர்ப்பமாகும் திறனை இழந்து நிலையில்..ஒரு கர்ப்பமான பெண்ணை காப்பாற்ற நடக்கும் போராட்டம்.  Read Full Review 2. I am legend - 2007 Zombie தாக்குதலில் உலகம் அழிந்து விட தனி ஆளாக தொற்றை தடுக்க தனியாக மருந்து தயாரிக்கும் விஞ்ஞானி பற்றிய கதை‌  3. Mad Max Fury Road - 2015 இந்த படத்தை பற்றி சொல்ல தேவையில்லை.. கண்டிப்பாக பாருங்கள்  4. Snow Piercer - 2013 உலகம் உறைபனியாகி உறைந்து விடுகிறது. ஒரே ஒரு ரயில் மட்டும் இதனை‌ தாக்கு பிடித்து ஓடுகிறது. அதில் நடக்கும் சம்பவங்கள் தான் படம்.  5. 10 Cloverfield Lane - 2016 ஒரு பொண்ணு  கண்ணு முழிக்கிறப்ப ஒரு Bunker ல இருக்கா . உலகம் அழிஞ்சு போச்சுனு சொல்றான் அங்க இருப்பவன். அங்க இருந்து அந்த பெண் தப்பித்தாளா ?  Read Full Review 6. A Quiet Place 1 & 2  சவுண்ட் கேட்டா வந்து கொல்லும் ஏலியன்ஸ்ட இருந்து

மகனதிகாரம் - maganadhigaram -2

மகனதிகாரம் - maganadhigaram -2 மகனதிகாரம் - 1  தீபாவளிக்கு ஊர்ல இருந்து வர்றப்ப  எங்க அம்மா அவங்க செஞ்ச ரவா லட்டு மற்றும் முறுக்கு ரெண்டையும் நெறய பார்சல் பண்ணி கொடுத்து விட்டாங்க.  நானும் ரவா லட்ட ஃப்ரிட்ஜில் வைத்து அப்பப்ப எடுத்து சாப்பிட்டு கொண்டு இருந்தேன். நேத்து சாயந்தரம் ரூம்ல ஒர்க் பண்ணிட்டே ஒரு லட்ட எடுத்துட்டு வந்து ரசிச்சு ரசிச்சு  சாப்டுட்டு இருந்தேன்.  பக்கத்துல உக்கார்ந்து ஹோம் ஒர்க் எழுதிட்டு இருந்த பையன். என்னப்பா ரவா லட்டு உங்களுக்கு பிடிக்குமா ? என்று கேட்டான்.  நானும் ஆமாடா தம்பி ரவா லட்டு அப்பாக்கு ரொம்ப பிடிக்கும்.  அதுவும் உங்க பாட்டி மாதிரி யாராலும் இவ்வளவு டேஸ்ட்டா ரவா லட்டு செய்யவே முடியாதுனு சொல்லிட்டு சாப்பிடுவதை  தொடர்ந்தேன்.  நைட்டு எல்லாரும் உக்கார்ந்து சாப்டுட்டு இருந்தோம்.  என் பையன் மெதுவா அம்மா நீங்க செய்யுற ரவா லட்டும் நல்லா தானமா இருக்கு என்றான் ?  என் மனைவி ஏன்டா அப்படி சொல்றனு கேட்டா..  என் பையன் ரூமுக்குள் நடந்த உரையாடலை அப்படியே வார்த்தை மாறாமல் ஒப்பித்தான். உங்கப்பாவுக்கு அவங்க அம்மா செஞ்சா மட்டும் தான் பிடிக்கும் என ஆரம்பித்து 4 வருஷத்துக்கு மு