Ponniyin Selvan Review - பொன்னியின் செல்வன் படம் விமர்சனம்
நாவலை படித்து பல வருடங்கள் ஆகிடுச்சு. அதனால் நிறைய மறந்து போச்சு. அதுபோக இவ்வளவு பெரிய கதையை திரையில் கொண்டு வருவது லேசுபட்ட காரியம் இல்ல.எனவே எதிர்பார்ப்பு இல்லாமல் போனேன்.
படம் அருமையாக இருந்தது. எனக்கு ரொம்பவே பிடித்து இருந்தது.கண்டிப்பாக பார்க்கலாம் 👍
வந்தியத்தேவன் கதாபாத்திரம் கிடைத்த கார்த்தி ரொம்பவே லக்கி. கிட்டத்தட்ட நாவலில் மட்டுமே படித்த அந்த ஜாலியான கதாபாத்திரத்தை படத்தில் நம்மால் பார்த்து கனெக்ட் பண்ண முடிகிறது.
வந்தியத்தேவன் - குந்தவை, வந்தியத்தேவன்- நந்தினி உரையாடல்கள் ரொம்பவே அருமை. அதுவும் வந்தியத் தேவன்+நம்பி (ஜெயராம்) காம்பினேஷன் சூப்பராக அமைந்து உள்ளது.
ஆதித்த கரிகாலனாக விக்ரம் சிறப்பாக நடித்து இருக்கிறார். நந்தினி ரோலில் ஐஸ்வர்யா ராய் அழகு + வில்லத்தனம் கலந்த ஒரு ரோல்.
க்ளைமாக்ஸ் காட்சியில் தண்ணீருக்குள் ஊமை ராணி முகத்தை பார்த்தவுடன் GOT Cercei &Jaime கதாபாத்திரங்கள் ஏனோ ஞாபகம் வந்தது. புக் படித்தவர்கள் ஏன் என்று கண்டுபிடித்து விடலாம்.
குந்தவை & நந்தினி சந்திக்கும் காட்சிகள் சிறப்பான முறையில் இருந்தது. ஆனால் படத்தில் குந்தவை (த்ரிஷா) outshines நந்தினி.
பிரபு, பார்த்திபன், சரத்குமார் , கிஷோர் என அனைவரும் சரியான தேர்வு.
வானதி கேரக்டர் அவ்வளவாக இந்த பகுதியில் முக்கியத்துவம் இல்லை.
இளம் வயது நந்தினியாக சின்ன ரோலில் தெய்வத்திருமகள் படத்தில் நடித்த சாரா..
இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் பூங்குழலி. ஐஸ்வர்யா லக்ஷ்மி கச்சிதமான தேர்வு.. என்க்கு என்னமோ அவர் காஸ்ட்யூம் பார்த்தாலே நிலா அது வானத்து மேல பாட்டு தான் ஞாபகம் வந்தது.
அருண்மொழி மற்றும் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி.👍👍
மணிரத்னம் நாவலின் இயல்பு மாறாமல் தேவையான காட்சிகளை வைத்து சிறப்பான ஒரு படத்தை கொடுத்து இருக்கிறார். இசை , ஒளிப்பதிவு என எல்லாமே தரமாக இருக்கிறது.
ஏஆர் ரஹ்மான் வழக்கம் போல் 🔥
பொன்னியின் செல்வனின் கரு என்று பார்த்தால் பழிவாங்குதல் மற்றும் அரசியல் என்பதை சுற்றியே நகரும். அதற்கு ஏற்றார் போல தேவையில்லாத போர்காட்சிகள் வைக்காமல் சுருக்கமாக முடித்து உள்ளார் இயக்குனர்.
கொஞ்சம் நெகடிவ்கள் இல்லாமல் இல்லை. ஆனால் அதை சொல்லப் போவது இல்லை 😁
எல்லாரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
என் கூட 4 வது படிக்கும் என்னுடைய பையனும் வந்து இருந்தான். காலை 7.30 காட்சி என்பதால் தூங்கி விடுவான் என்று நினைத்தேன். ஆனால் முழு படத்தையும் உக்கார்ந்து பார்த்தான். கதை புரியதா என்றால் ஏதோ கொஞ்சம் புரியுது என்கிறான். சாயந்திரம் கதை சொல்ல சொல்லி இருக்கிறேன் 🤣.
கருத்துகள்
கருத்துரையிடுக