Piggy Tamil Review
உடல் பருமனான ஒரு பெண்ணை 3 பெண்கள் சேர்ந்து கிண்டல் பண்ணுகிறார்கள். அதன் பிறகு அந்த 3 பெண்களும் காணாமல் போகிறார்கள்.
அந்த மூன்று பெண்களுடைய கதி என்ன ஆனது எனப்தை பற்றி சொல்கிறது படம்.
IMDb 6.5
Tamil dub ❌
OTT ❌
காலேஜ் படிக்கும் ரொம்பவே உடல் பருமனான பெண் சாரா . ஒரு நாள் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது 3 பெண்களால் கிண்டல் கேலிக்கு ஆளாகிறாள். இவளுடைய உடைகளையும் எடுத்துக் கொண்டு போய்விடுகிறார்கள்.
நீச்சலுடையுடன் அழுதுகொண்டே வீட்டிற்கு வரும் போது கிண்டல் செய்த ஒரு பெண் கடத்தப் படுவதை பார்க்கிறாள் . கடத்தியவன் இவளுக்கு துண்டு எல்லாம் கொடுத்து உதவி செய்கிறான்.
கிண்டல் செய்தவர்களின் மேல் இருந்த கோபத்தில் இந்த சம்பவங்களை மறைத்து விடுகிறாள். இதனால் ஏற்படும் பின்விளைவுகள் தான் படம்.
படம் டைட்டில்லில் கறி கடையில் மாமிசம் வெட்டுவது குளோஸ் அப்பில் காட்டப்படுகிறது. அப்பவே ரைட்டு படம் இப்படி தான் இருக்கும் போல என்று தோன்றுகிறது.
ஆனால் படம் நன்றாக ஆரம்பித்து இடையில் கொஞ்சம் இழுத்து கடைசியில் ரத்தக்களரியாக முடிகிறது.
சில சில இடங்களில் காமெடி இருக்கிறது. படம் நார்மல் தான் என்றாலும் ஹீரோயின் எப்ப பொங்கி எழுவாள் என்ற ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. க்ளைமாக்ஸ் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது.
ரொம்ப எதிர்பார்ப்பு இல்லாமல் ஒரு தடவ பாக்கலாம்.
இந்த படம் பார்க்கனும்
பதிலளிநீக்கு