பிரபலமான Jurassic Park படங்களின் வரிசையில் கடைசி மற்றும் 4 வந்து பாகமாக வந்துள்ள படம்.
நான் ஜிராஸிக் பார்க் படங்களின் பெரிய ஃபேன் படம் எனக்கு பிடிச்சு இருந்தது 😊
IMDb 5.7
Tamil dub ✅
Available @primevideo
போன பார்ட்ல வந்த ஹீரோ ஹீரோயின் ஒரு குழந்தையை சில காரணங்களுக்காக ரகசியமாக வளர்க்கிறார்கள்.
இந்த பெண்ணை கைப்பற்ற வில்லன் கோஷ்டி முயற்சி பண்ணுது அதில் வெற்றியும் அடைகிறார்கள்.
இன்னொரு பக்கம் டைனோசர்கள் எல்லாம் உலகம் முழுவதும் பரவி மனுசங்க கூட இருக்குது.
இந்த நிலையில் ஒரு வகையான ராட்சத வெட்டுக்கிளி பயிர்களை எல்லாம் அழிக்கிறது. ஆனால் ஒரு கம்பெனி விதையில் வளர்ந்த செடிகளை மட்டும் ஒன்னும் செய்யாமல் விடுகிறது.
இதனை ஆராய்ச்சி செய்ய வருகிறார்கள் Alan Grant & Ellie (முதல் ஜிராஸிக் பார்க் படத்தில் நடித்தவர்கள்) .
இந்த பிரச்சினைகள் அனைத்தும் ஒரு கம்பெனியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள தீவிற்கு கதையை நகர்த்துகிறது.
2 குரூப்பும் அந்த தீவுக்கு போகுது. குழந்தையை மீட்டார்களா ? வெட்டுக்கிளி பிரச்சினை எவ்வாறு தீர்ந்தது என்பதை படத்தில் பாருங்கள்.
கிராபிக்ஸ் பக்காவா இருந்தது.
ஜேம்ஸ் பாண்ட் பட ஸ்டைலில் நடக்கும் சேஸிங், தண்ணிக்குள்ள வர்ற டைனசர், க்ளைமாக்ஸ் என நல்ல பரபரப்பான காட்சிகள் இருந்தது.
சில புதுவகையான டைனோசர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
முதல் பார்ட்டில் நடித்தவர்கள் மற்றும் அதே போன்ற காட்சிகள் நல்லா இருந்தது.
பட நீளம் ரொம்பவே அதிகம். சிம்பிளா டைனோசர் வச்சு கதையை சொல்லாமா ரொம்ப குழப்பி விட்ருக்கானுக.
நெகடிவ் விமர்சனங்கள் எல்லாம் பாக்காம கண்டிப்பாக குழந்தைகளுடன் பார்க்கலாம் 👍
கருத்துகள்
கருத்துரையிடுக