House Of The Dragon - Season 1 - Tamil Review
இதை பார்க்கும் முன்பு GOT பார்த்து இருந்தால் நல்லது. ஆனா கண்டிப்பாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
IMDb 8.6
Tamil dub ❌
Available @DisneyHotstar
தொடரின் கதை என்னவென்று பார்க்கலாம். GOT மாதிரியே அரசர் பதவிக்கு அடித்துக் கொள்ளும் பல குடும்பங்களின் கதை தான் இது.
கற்பனையில் அமைந்த ஒரு மிகப்பெரிய சார்ராஜ்யத்தை ஆளும் மன்னன்.
அவனுக்கு ஒரு தம்பி மற்றும் மகள் உள்ளனர்.
ராணி கர்ப்பமாக உள்ளார் & நாடே அரசரின் ஆண் வாரிசை எதிர்பார்க்கிறது. . ஆனா குழந்தை பெறும் போது ஏற்பட்ட சிக்கலில் ஆண் குழந்தை & ராணி இரண்டு பேரும் இறந்து விடுகிறார்கள்.
அரசரின் தம்பி கொஞ்சம் கோபக்காரனாக நிலையானவனாக இல்லாததால் தனது மகளை வாரிசாக அறிவித்து தனக்கு பின் அவள் தான் நாட்டை ஆள வேண்டும் என்று தீர்மானம் போட்டு சிற்றரசர்களிடம் ஒப்புதல் வாங்கி விடுகிறார்.
அரசர் பிற்பாடு வேறு பெண்ணை திருமணம் செய்து ஆண் குழந்தை பெறுகிறார்.
இப்போது அரசரின் தம்பி, மகள் , தற்போதைய மனைவி , மாமனார் மற்றும் இன்னபிற குடும்பங்கள் அரியணையை அடைய செய்யும் சித்து வேலைகள் மற்றும் அரசியல் தான் இந்த தொடர்.
தொடர் ஒரு Political Drama அதனால் வேகமாக நகரும் என எதிர்பார்க்க வேண்டாம். கிட்டத்தட்ட 6 எபிசோட்கள் Plot செட் செய்ய, கேரக்டர்கள் அறிமுகம் என்று நகர்கிறது.
GOT அதனுடைய Production value விற்காக பெரிதும் பேசப்பட்ட ஒன்று. இந்த தொடர் அதையும் மிஞ்சும் விதத்தில் உள்ளது. குறிப்பாக டிராகன்களின் டிசைன் மற்றும் கிராபிக்ஸ் செம குவாலிட்டி.
இன்னொரு முக்கியமான விஷயம் பிண்ணனி இசை. Ramin Djawadi கலக்கி இருக்கிறார்.
நடிப்பை பொறுத்தவரை கதாபாத்திரங்கள் தேர்வு சிறப்பு.
7-10 எபிசோட்கள் செம் ஸ்பீட் எடுக்கிறது. எதிர்பார்ப்பை எகிற வைத்து பொசுக்கென்று முடித்து விடுகிறார்கள்.அடுத்த சீசன் வருவதற்கு 2024 வரை காத்திருக்க வேண்டும்.
கண்டிப்பாக பார்க்கலாம் 👍
கருத்துகள்
கருத்துரையிடுக