Dark Series Tamil Review
முதல் சீசனில் 10 Episodes கொண்ட ஜெர்மன் Sci Fi சீரிஸ். ஒரு சின்ன ஊருக்குள்ள இருக்குற 4 குடும்பத்துக்குள்ள நடக்குற கதையை 3 டைம் லைன்ல(1953, 1986, 2019) ஒரே நேரத்துல சொல்ற ஒரு தொடர்.
IMDb 8.7
Tamil dub ❌
Available @Netflix
Sci Fi மற்றும் வித்தியாசமான தொடர்களை பார்ப்பதற்கு ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.
ஜெர்மனியில் உள்ள ஒரு சின்ன ஊர் Winden. அணுஉலையை மையமாக கொண்டு வளர்ந்த ஊர். அங்கு ஒரு சிறுவன் திடீரென தொலைந்து போகிறான். அவனை தொடர்ந்து இன்னோரு சிறுவனும் காணாமல் போகிறான்.
ஊருக்குள் திடீரென பறவைகள் செத்து வானத்தில் இருந்து விழுகிறது, ஆடுகள் செத்து மடிகின்றன , கரண்ட் பிரச்சினைகள் வருகிறது.
அனைவரும் இது ஏதோ அணு உலை காரணமாக வரும் பிரச்சினைகள் என நினைக்கிறார்கள்.
ஆனா இதற்கு எல்லாம் காரணம் ஊருக்கு வெளியே உள்ள ஒரு குகை. அந்த குகை டைம் டிராவல் செய்யும் ஒரு வாசலை கொண்டு உள்ளது.
இந்த கதையில் வரும் 4 குடும்பமும் செய்யும்/செய்த ஒவ்வொரு செயலும் எவ்வாறு அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தே ஏற்படுத்துகிறது என்பதை சொல்கிறது தொடர்.
அவ்வளவு ஈஸியாக இந்த தொடரை பார்த்து விட முடியாது. நிறைய கேரக்டர்கள் ஒவ்வொருவருக்கும மற்ற இரண்டு டைம் லைனில் வேறு ஒருத்தர் இருப்பார்கள்.
படத்தின் முதல் மூணு எபிசோட்கள் ரொம்ப ரொம்ப பொறுமையா நகரும். ஆனால் அதற்கு அப்புறம் நல்லா போனது.
கண்டிப்பாக பார்க்கலாம். ஆனால் பொறுமை மற்றும் கூர்ந்து பாக்கணும். ஒரு 20 செகண்ட்ஸ் ஸ்கிப் பண்ணிணால் கூட புரியாமல் போக வாய்ப்பு இருக்கு.
எனக்கும் இன்னும் சில குழப்பங்கள் இருக்கு 😁😁
கருத்துகள்
கருத்துரையிடுக