All Quiet On The Western Front Tamil Review
WW1 ஐ வைத்து எடுக்கப்பட்ட War படம்.நிறைய படங்கள் போர்களை வைத்து வந்து இருந்தாலும். இந்த படத்தில் போரின் கொடுமைகளை நமக்கு எளிதாக கடத்துகிறார்கள். Very intense..
IMDb 8
Available #Netflix
Tamil dub ❌
Language: German
Subs: English
லொக்கேஷன்கள், செட்டிங்குகள், கேமரா ஒர்க், இசை எல்லாம் தரம் 🔥
படத்தோட ஒரு பிரச்சினை நீளம். கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் ஓடும் படம்.
படத்தின் ஆரம்ப காட்சி மற்றும் போர்வீரர்களின் உடைகளை recycle பண்ணும் காட்சிகள் என சிறப்பாக ஆரம்பிக்கிறது.
4 பேர் காலேஜ்ல இருந்து ஒரு ஆர்வத்துல ராணுவத்தில் சேருகிறார்கள். இவர்கள் போர்க்களத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் தான் படம். தப்பி பிழைத்து வந்தார்களா என்பதை படத்தில் பாருங்கள்.
அதுக்கு அப்புறம் 1 மணி நேரம் ரொம்பவே மெதுவாக நிறைய உரையாடல்களுடன் நகர்கிறது.
கடைசி ஒரு மணிநேரம் மறுபடியும் வேகமாக போகிறது.
ஒரு சின்ன இடத்தை கைப்பற்ற பல வருடங்களாக சண்டையிட்டு 30 லட்சம் வீரர்களை இழந்து சில மீட்டர்கள் மட்டுமே முன்னேறி இருக்கிறார்கள் 🚶
War பட பிரியர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக