முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

The Lord Of The Rings: The Rings Of Power -2022

The Lord Of The Rings: The Rings Of Power Tamil Review  Lord of the rings, The Hobbit படங்களோட கான்செப்ட்டை வைச்சு எடுக்கப்பட்ட ஒரு தொடர் தான் இது. இந்த படங்களுக்கு முன்னாடி நடப்பது போன்ற கதை.  1 Season, 8 Episodes IMDb 6.9 Tamil dub ✅ நெறைய பேசுறாங்க, குறைந்த ஆக்சன் . LOTR படம் பிடிக்கும் என்றால் பார்க்கலாம்.  ஒரு பெரிய வில்லனை கொன்று விட்டோம் என உலகத்தில் உள்ள பல இனத்தை சேர்ந்த மக்கள் நினைக்கிறார்கள். Elves, Dwarfs, Hobbit மற்றும் மனிதர்கள் என பலதரப்பட்ட இனங்கள் உள்ளன.  ஆனால் அந்த வில்லன் லாங் டெர்ம் ஃப்ளான் ஒன்றை போட்டு எஸ்கேப்/ செத்து விடுகிறான்.  அந்த லாங் டெர்ம் பிளானை செயல்படுத்த ஆரம்பிக்கிறது வில்லன் குருப். இந்த பல்வேறு இனங்களுக்கும் ஒரு Back Story மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்கள் உள்ளன.  இவர்கள் எல்லாம் சேர்ந்து வில்லனை எதிர்ப்பதாக கதை போகிறது. அந்த பெரிய வில்லன் அறிமுகம் இந்த சீசனில் இல்லை.  6வது எபிசோட் மட்டும் நல்லா ஆக்சனோட இருந்தது. மத்த எபிசோட்கள் எல்லாம் ஓகே ரகம் தான்.  Fantasy, LOTR படங்கள் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பாருங்கள்.  மற்றவர்கள் பார்க்க கொஞ்சம் பொறுமை வே

All Quiet On The Western Front - 2022

All Quiet On The Western Front Tamil Review WW1 ஐ வைத்து எடுக்கப்பட்ட War படம்.‌நிறைய படங்கள் போர்களை வைத்து வந்து இருந்தாலும். இந்த படத்தில் போரின் கொடுமைகளை நமக்கு எளிதாக கடத்துகிறார்கள்‌.  Very intense..  IMDb 8 Available #Netflix  Tamil dub ❌ Language: German Subs: English  லொக்கேஷன்கள், செட்டிங்குகள், கேமரா ஒர்க், இசை எல்லாம் தரம் 🔥 படத்தோட ஒரு பிரச்சினை நீளம். கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் ஓடும் படம்.  படத்தின் ஆரம்ப காட்சி மற்றும் போர்வீரர்களின் உடைகளை recycle பண்ணும் காட்சிகள் என சிறப்பாக ஆரம்பிக்கிறது.  4 பேர் காலேஜ்ல இருந்து ஒரு ஆர்வத்துல ராணுவத்தில் சேருகிறார்கள். இவர்கள் போர்க்களத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் தான் படம். தப்பி பிழைத்து வந்தார்களா என்பதை படத்தில் பாருங்கள்.  அதுக்கு அப்புறம் 1 மணி நேரம் ரொம்பவே மெதுவாக நிறைய உரையாடல்களுடன் நகர்கிறது.  கடைசி ஒரு மணிநேரம் மறுபடியும் வேகமாக போகிறது.  ஒரு சின்ன இடத்தை கைப்பற்ற பல வருடங்களாக சண்டையிட்டு 30 லட்சம் வீரர்களை இழந்து சில மீட்டர்கள் மட்டுமே முன்னேறி இருக்கிறார்கள் 🚶 War பட பிரியர்கள் கண்டிப்பாக பார்க்கலாம். 

House Of The Dragon - Season 1 - 2022

House Of The Dragon - Season 1 - Tamil Review  பிரபல Game Of Thrones(GOT) சீரிஸ்ஸின் Prequel ஆக வந்துள்ள தொடர் தான் இது.  இதை பார்க்கும் முன்பு GOT பார்த்து இருந்தால் நல்லது. ஆனா கண்டிப்பாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.  IMDb 8.6 Tamil dub ❌ Available @DisneyHotstar தொடரின் கதை என்னவென்று பார்க்கலாம். GOT மாதிரியே அரசர் பதவிக்கு அடித்துக் கொள்ளும் பல குடும்பங்களின் கதை தான் இது.  கற்பனையில் அமைந்த ஒரு மிகப்பெரிய சார்ராஜ்யத்தை ஆளும் மன்னன்.  அவனுக்கு ஒரு தம்பி மற்றும் மகள் உள்ளனர்.  ராணி கர்ப்பமாக உள்ளார் & நாடே அரசரின் ஆண் வாரிசை எதிர்பார்க்கிறது. . ஆனா குழந்தை பெறும் போது ஏற்பட்ட சிக்கலில் ஆண் குழந்தை & ராணி இரண்டு பேரும் இறந்து விடுகிறார்கள். அரசரின் தம்பி கொஞ்சம் கோபக்காரனாக நிலையானவனாக இல்லாததால் தனது மகளை வாரிசாக அறிவித்து தனக்கு பின் அவள் தான் நாட்டை ஆள வேண்டும் என்று தீர்மானம் போட்டு சிற்றரசர்களிடம் ஒப்புதல் வாங்கி விடுகிறார்.  அரசர் பிற்பாடு வேறு பெண்ணை திருமணம் செய்து ஆண் குழந்தை பெறுகிறார்.  இப்போது அரசரின் தம்பி, மகள் , தற்போதைய மனைவி , மாமனார் மற்றும் இன்னபிற கு

Pearl - 2022

 ஏப்ரலில் X என்ற Sex+Slasher படம் வெளிவந்து நல்லா ஓடியது. அதில் வரும் கொலைகார பாட்டியின் Origin கதை தான் இந்த ஹாரரர் படம்.‌ அந்த பாட்டி யாரு ? ஏன் இப்படி கொடூரமா கொலை பண்ணுது? சிம்பிளா சைக்கோ உருவானது எப்படி என்று சொல்லும் படம்.  IMDb 7.4 Tamil dub ❌ OTT ❌ X படம் நடப்பது 1980 வருடத்தில். இந்த படம் பின்னோக்கி 1918 க்கு போகிறது. அதாவது Pearl ன்  இளமைக்காலம்.  ஒரு பண்ணையில் அம்மா மற்றும் நடைபிணமாக இருக்கும் அப்பாவுடன் வசிக்கும் இளம்பெண் Pearl.  அந்த பண்ணையில் இருந்து வெளியே போக வேண்டும், டான்சர் ஆக வேண்டும் என்பது அவளின் கனவு.   பெரிய கனவுகளுடன் வெளியே சென்று விடலாம் என  திருமணம் செய்கிறாள். ஆனால் இராணுவ வீரனான கணவன் அவளை அங்கேயே விட்டுவிட்டு போருக்கு சென்று விடுகிறான்.  மிக மிக ஸ்ட்ரிக்டான அம்மா, உடல் தேவைகள், இயல்பிலேயே சிறு சிறு விலங்குகளை கொல்லும் சைக்கோத்தனம் கொண்ட Pearl ன் மனதில் இந்த சூழ்நிலை பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.  இவற்றை எல்லாம் விட ஒரு பெரிய ஏமாற்றம் வர வெறி கொண்டு கிளம்ப பிணமாக விழுகிறது.  அது என்ன ஏமாற்றம், யார் எல்லாம் இதற்கு பழியானார்கள் என்பதை படத்தில் பாருங்கள

Jurassic Park Dominion - 2022

பிரபலமான Jurassic Park படங்களின் வரிசையில் கடைசி மற்றும் 4 வந்து பாகமாக வந்துள்ள படம்.  நான் ஜிராஸிக் பார்க் படங்களின் பெரிய ஃபேன் படம் எனக்கு பிடிச்சு இருந்தது 😊 IMDb 5.7 Tamil dub ✅ Available @primevideo போன பார்ட்ல வந்த ஹீரோ ஹீரோயின் ஒரு குழந்தையை சில காரணங்களுக்காக ரகசியமாக வளர்க்கிறார்கள்.  இந்த பெண்ணை கைப்பற்ற வில்லன் கோஷ்டி முயற்சி பண்ணுது‌ அதில் வெற்றியும் அடைகிறார்கள். இன்னொரு பக்கம் டைனோசர்கள் எல்லாம் உலகம் முழுவதும் பரவி மனுசங்க கூட இருக்குது.  இந்த நிலையில் ஒரு வகையான ராட்சத வெட்டுக்கிளி பயிர்களை எல்லாம் அழிக்கிறது. ஆனால் ஒரு கம்பெனி விதையில் வளர்ந்த செடிகளை மட்டும் ஒன்னும் செய்யாமல் விடுகிறது.  இதனை ஆராய்ச்சி செய்ய வருகிறார்கள் Alan Grant & Ellie (முதல் ஜிராஸிக் பார்க் படத்தில் நடித்தவர்கள்) .  இந்த பிரச்சினைகள் அனைத்தும் ஒரு கம்பெனியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள தீவிற்கு கதையை நகர்த்துகிறது.  2 குரூப்பும் அந்த தீவுக்கு போகுது. குழந்தையை மீட்டார்களா ? வெட்டுக்கிளி பிரச்சினை எவ்வாறு தீர்ந்தது என்பதை படத்தில் பாருங்கள்.  கிராபிக்ஸ் பக்காவா இருந்தது. ஜேம்ஸ் பாண்ட் பட ஸ்

Karthikeya-2014

Karthikeya Telugu Movie Review  இது ஒரு தெலுகு mystery thriller.  சுப்ரமணியபுரம் என்ற ஊரில் உள்ள முருகன் கோவிலில் நடந்த மரணங்களால் மூடப்படுகிறது. இதனை பற்றி பேசுபவர்கள் பாம்பு கொத்தி இறந்து விடுகிறார்கள்.  Tamil ❌ Telugu ✅ Available @Primevideo ஹுரோ இதற்கு பின்னால் இருக்கும் மர்மத்தை எப்படி கண்டுபிடித்தார் என்பதை படத்தில் பாருங்கள்.  டாக்டர் படிக்கும் ஹீரோ வழக்கமான தெலுங்கு படத்தில் வரும்  பாசமான குடும்பத்தை சேர்ந்தவர். ஒரு மெடிக்கல் கேம்ப்புக்காக சுப்ரமணியபுரம் ஊருக்கு செல்கிறார்கள்.  எதையுமே ஆராயும் குணம் கொண்ட ஹீரோ அங்கு நடக்கும் சில சம்பவங்கள் காரணமாக அந்த கோவிலை பற்றிய ஆராய்ச்சியில் இறங்குகிறார்.  இந்த கோவிலின் மர்மம் என்ன என்பதை ஹீரோ கண்டுபிடித்தாரா என்பதை படத்தில் பாருங்கள்.  ஹீரோவாக நிகில், ஹீரோயினாக ஸ்வாதி. வழக்கமான பாணியில் லவ் போர்ஷன், காமெடி மற்றும் குடும்ப காட்சிகள்.  கோயிலின் மர்மம் மற்றும் அதனை சுற்றியுள்ள ட்விஸ்ட்டுகள் நன்றாக இருந்தது.  லவ் , ஃபேமிலி, பாட்டு போர்ஷனை குறைத்து விட்டு கோவில் பற்றிய போர்ஷனை அதிகரித்து இருந்தால் இன்னும் நல்லா இருந்து இருக்கும்.  கண்டிப்பாக ஒ

PalmShore Medavakkam - Arbian restaurant review

PalmShore, Medavakkam, Chennai Review  இன்னிக்கு PalmShore, Medavakkam க்கு இன்னொரு விசிட்.  போன தடவை ஆபிஸோட போனதால் ஃபோட்டோ எடுக்க முடியல.  எல்லா ஐட்டங்களும் நல்லா இருந்தது.  நான் வெஜ் பிரியர்கள் மற்றும் அரேபியன் உணவு பிரியர்கள் கண்டிப்பாக போகலாம் .  ஆட்டுக்கால் சூப், 4 in 1 BBQ Chicken, Hummas Mandi Rice என எல்லாமே நல்லா இருந்தது.  இவர்களின் Desserts ரொம்பவே நல்லா இருக்கும். இவர்களுடைய Signature Dish Kunafa 30 mts ஆகும்னு சொனனதால சாப்பிடல.  Coconut Pudding செம சூப்பரா இருந்தது. Loved it 2 Adult+1 Kid - Desserts ஓட சேத்து 2000 ரூபாய் பில் வந்தது. 

Piggy -2022

Piggy Tamil Review  Spanish ஹாரர் திரில்லர் படம் .  உடல் பருமனான ஒரு பெண்ணை  3 பெண்கள் சேர்ந்து கிண்டல் பண்ணுகிறார்கள்.  அதன் பிறகு அந்த 3 பெண்களும் காணாமல் போகிறார்கள்.  அந்த மூன்று பெண்களுடைய கதி என்ன ஆனது எனப்தை பற்றி சொல்கிறது படம்.  IMDb 6.5 Tamil dub ❌ OTT ❌ காலேஜ் படிக்கும் ரொம்பவே உடல் பருமனான  பெண் சாரா . ஒரு நாள் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது 3 பெண்களால் கிண்டல் கேலிக்கு ஆளாகிறாள். இவளுடைய உடைகளையும் எடுத்துக் கொண்டு போய்விடுகிறார்கள்.  நீச்சலுடையுடன் அழுதுகொண்டே வீட்டிற்கு வரும் போது கிண்டல் செய்த ஒரு பெண் கடத்தப் படுவதை பார்க்கிறாள் . கடத்தியவன் இவளுக்கு துண்டு எல்லாம் கொடுத்து உதவி செய்கிறான்.  கிண்டல் செய்தவர்களின் மேல் இருந்த கோபத்தில் இந்த சம்பவங்களை மறைத்து விடுகிறாள்.  இதனால் ஏற்படும் பின்விளைவுகள் தான் படம்.  படம் டைட்டில்லில் கறி கடையில் மாமிசம் வெட்டுவது குளோஸ் அப்பில் காட்டப்படுகிறது. அப்பவே ரைட்டு படம் இப்படி தான் இருக்கும் போல என்று தோன்றுகிறது.  ஆனால் படம் நன்றாக ஆரம்பித்து இடையில் கொஞ்சம் இழுத்து கடைசியில் ரத்தக்களரியாக முடிகிறது.  சில சில இடங்களில் காமெடி

Boat Rockerz 330 ANC Bluetooth Neckband -Review

Boat Rockerz 330 ANC Bluetooth Neckband Tamil Review இரண்டு நாள் யூஸ் பண்ணேன். எனக்கு அவ்வளவா திருப்தி இல்லை அதுனால ரிட்டர்ன் பண்ண போறேன். இந்த மாடல் வாங்கனும்னு ஐடியா இருக்குறவங்க ஏன்னு தெரிஞ்சுக்க படிங்க.  Look :  Look wise நல்லா தான் இருந்தது. ஆனா Ear phones இருக்கும் பகுதி கொஞ்சம் பெருசா இருந்தது. அதுல கொடுத்து இருக்குற Ear piece சரியா ஃபிட் ஆகல.. சின்ன சைஸ் போட்டா கரெக்டா இருக்கும் என நினைக்கிறேன். Music Sound Quality:  Sound நல்லா இருந்தது. Bass Effect ரொம்பவே நல்லா இருந்தது.  ஆனா Bass எனக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்த மாதிரி ஃபீலிங்.  Active Noise Cancellation (ANC) வெளிப்புற சத்தங்கள் கொஞ்சம் குறையுது. ஆனால் நார்மல் மோடுக்கும் இதற்கும் ரொம்ப பெரிய வித்தியாசம் இருப்பது போல் தெரியவில்லை.  ஆனால் ANC mode ON பண்ணதும் கொய்ய்ய்ங்னு ஒரு Feedback sound வருது. எல்லா ANC யும் இப்படி தான் இருக்குமானு தெரியல .  Ambient Mode ON பண்ணா வெளிய உள்ள சவுண்ட்ட பூஸ்ட் பண்ணி கொடுக்குது‌.  Call Quality:  மீட்டிங்ல எதிர்பக்கம் இருக்கும் நபர்களுக்கு நம்முடைய வாய்ஸ் கிளாரிட்டியில் ரொம்ப பெரிய மாற்றம் இல்ல

Grimcutty - 2022

Grimcutty Tamil Review  ஒரு சர்ப்ரைஸ்க்காக ரிவ்யூ எதுவும் பாக்காம சில படங்களை பார்ப்பது உண்டு. இன்னிக்கு Hulu ல வெளியாகி உள்ள ஹாரர் படம் இது.  இன்டெர்நெட்ல வரும் ஒரு கொலைகார கேரக்டர் உயிரோட வந்து கொலை பண்ணுது.  ஹீரோயின் & குடும்பம் எப்படி தப்பிச்சது என்பது தான் படம்.  High School படிக்கும் ஹீரோயின். ஊருக்குள் இன்டெர்நெட் ஆன்லைன் சேலஞ்ச் மற்றும் ஏனென்று தெரியாத காரணத்தால் சிறுவர்கள் தற்கொலை செய்கின்றனர் அல்லது மற்றவர்களை கொல்கிறார்கள்.  இதனை தடுக்க ஹீரோயினிடம் இருந்து மொபைலை பிடுங்கி விடுகிறார்கள் இவளது பெற்றோர்கள்.  ஆனாலும் அந்த பேய் ஹீரோயினை கொல்ல வருகிறது. அந்த பேய் எங்க இருந்து வருது ? ஹீரோயின் அதை எப்படி தடுத்து தன்னை காப்பாற்றிக் கொண்டு குடும்பத்தையும் காப்பாற்றினாள் என்பது தான் படம்.  ரொம்பவே ஆவரேஜான படம். அந்த பேய் கேரக்டர் இன்னும் கொஞ்சம் பயப்படும் படி பண்ணிருக்கலாம். பேய் படங்கள் அதிகமாக பார்க்காத எனக்கே பயம் வரல.  பாஸிடிவ் என்று பார்த்தால் குழந்தைகளை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற மெஸேஜ் சொல்கிறது.  அது போக இந்த பேய் எப்படி டார்கெட் பண்ணுது என்ற சஸ்பென்ஸ் பரவாயி

Dark - Season 2

Dark Series Review  சீசன் 1 முடிஞ்சது 2052 ல ஆனா 2வது சீசன் ஆரம்பிக்கிறது 1921.  இத பார்த்த உடனே தெரிஞ்சது இந்த சீசன்ல ரொம்பவே கவனமா பாக்கணும் என்று.  மொத்தம் 8 எபிசோட்கள் இந்த சீசனில்.  இந்த சீசன் போன சீசன் அளவுக்கு ரொம்ப குழப்பம் இல்லை. முதல் சீசனில் அங்கும் இங்குமாக நடக்கும் டைம் டிராவல் இந்த சீசனில் ரொம்பவே அதிகம்.  துண்டு துண்டாக அங்கும் இங்கும் நடக்கும் கதையை தெளிவாக ஆக்கியது இந்த சீசன். இதில் அந்த குகையின் origin story, எதுக்கு இப்படி டைம் டிராவல் பண்றாங்க, இதுக்கு எல்லாம் காரணமாணவங்க யாரு, ஏன் இப்படி நடக்குது என பல மர்மங்கள் தெளிவாகிறது.  ரொம்ப நல்லா புரியாவிட்டாலும் ஓரளவு புரிந்தது 😂 பல Intersting ஆன காட்சிகள் உள்ளது. உதாரணமாக ஒரே கேரக்டரின் கடந்த காலம் மற்றும் நிகழ்கால சந்திப்புகள். குறிப்பாக Adam & Jonas இடையேயான சந்திப்பு.  என்ன ஒரு சிக்கலான கான்செப்ட் மற்றும் கேரக்டர்கள். எல்லாத்தையும் திறம்பட கையாண்டு கலக்கி இருக்கிறார்கள் ‌‌ . இதில் டைம் டிராவல் ரொம்பவே அதிகமாக இருக்கும். கதாபாத்திரங்கள் பொசுக்கென்று ஒரு பொட்டியையும் ஒரு ஸ்கூல் பேக்கையும் மாட்டிக்கொண்டு குகைக்கு கெ

Super Dark Times - 2017

Super Dark Times Tamil Review  High School ல் படிக்கும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். இருவருக்கும் ஒரே பெண் மீது கண். எதிர்பாராத ஒரு  சம்பவம் இவர்களின் வாழ்க்கையை மாற்றுகிறது. IMDb 6.6 Tamil dub ❌ OTT ❌ அது என்ன? அதை எப்படி சமாளித்தார்கள் என்பதை கொஞ்சம் ஹாரர் கலந்து சொல்லும் படம்.  கண்டிப்பாக பார்க்கலாம் 👍 படம் நடப்பது 1990 களில் .. இரண்டு சிறுவயது நண்பர்கள் ஜாலியாக சுற்றுகிறார்கள்.‌ ஒரு நாள் இரண்டு சின்ன பசங்க கூட சேர்ந்து விளையாடுகிறார்கள். அப்போது நடக்கும் ஒரு விபத்தில் சின்ன பையன் இறந்து விடுகிறான்.  அதனை‌மறைத்து விட்டு அவர் அவர் வீட்டுக்கு ஓடி விடுகிறார்கள். இதற்கு பிறகு இரண்டு நண்பர்களும் இந்த சம்பவத்தின் தாக்கத்தை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை படத்தில் பாருங்கள்.  படம் மெதுவாக ஆரம்பிக்கிறது .. மெதுவாகவே நகர்கிறது.. ஆனால் கடைசி அரைமணி நேரம் நல்லா இருந்தது.  படத்தின் லொக்கேஷன்கள் , செட்டிங்குகள், கேமரா எல்லாம் அருமை. ஒரு மாதிரி டார்க்கான மூடில் செல்கிறது படம். நல்ல ஒரு க்ரைம் ஹாரர் த்ரில்லர்.. கண்டிப்பாக பார்க்கலாம் 👍

High Water- Limited Series - 2022

High Water Tamil Review  Netflix ல் வெளியாகி இருக்கும் 6 எபிசோட்கள் கொண்ட சீரிஸ்.  1997 ல் போலந்தில் ஒரு நகரில் வரப்போகும் வெள்ளத்தை எவ்வாறு அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் அணுகினார்கள் எனப்தை சொல்லும் தொடர்.  .நல்ல கான்செப்ட் ஆனா ரைட்டிங் அவ்வளவு ஆர்வமாக இல்லை.  வெள்ளம் வர போகுதுனு தெரிஞ்சு போச்சு எவ்வளவு பரபரப்பா போகணும் சீரிஸ். ஆன இது தேமேனு போகுது. ஹீரோயின் மற்றும் அவளது குடும்பம் போன்றவை வலிய திணிக்கப்பட்ட மாதிரி இருந்தது‌  ரொம்ப பரபரப்பா போகாது‌ .அதனால் பொறுமை உள்ளவர்கள் பார்க்கலாம் . சீரிஸ் ஓகே ரகம். 

Dark - Season-1

Dark Series Tamil Review  முதல் சீசனில் 10 Episodes கொண்ட ஜெர்மன் Sci Fi சீரிஸ். ஒரு சின்ன ஊருக்குள்ள இருக்குற 4 குடும்பத்துக்குள்ள நடக்குற கதையை 3 டைம் லைன்ல(1953, 1986, 2019) ஒரே நேரத்துல சொல்ற ஒரு தொடர்.  IMDb 8.7 Tamil dub ❌ Available @Netflix Sci Fi மற்றும் வித்தியாசமான தொடர்களை பார்ப்பதற்கு ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.  ஜெர்மனியில் உள்ள ஒரு சின்ன ஊர் Winden. அணுஉலையை மையமாக கொண்டு வளர்ந்த ஊர். அங்கு ஒரு சிறுவன் திடீரென தொலைந்து போகிறான். அவனை தொடர்ந்து இன்னோரு சிறுவனும் காணாமல் போகிறான்.  ஊருக்குள் திடீரென பறவைகள் செத்து வானத்தில் இருந்து விழுகிறது, ஆடுகள் செத்து மடிகின்றன , கரண்ட் பிரச்சினைகள் வருகிறது.  அனைவரும் இது ஏதோ அணு உலை காரணமாக வரும் பிரச்சினைகள் என நினைக்கிறார்கள்.  ஆனா இதற்கு எல்லாம் காரணம் ஊருக்கு வெளியே உள்ள ஒரு குகை. அந்த குகை டைம் டிராவல் செய்யும் ஒரு வாசலை கொண்டு உள்ளது.  இந்த கதையில் வரும் 4 குடும்பமும் செய்யும்/செய்த ஒவ்வொரு செயலும் எவ்வாறு அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தே ஏற்படுத்துகிறது என்பதை சொல்கிறது தொடர்.  அவ்வளவு ஈஸியாக இந்த தொடரை பார்த்து

Ponniyin Selvan - 2022

Ponniyin Selvan Review - பொன்னியின் செல்வன் படம் விமர்சனம்  நாவலை படித்து பல வருடங்கள் ஆகிடுச்சு. அதனால் நிறைய மறந்து போச்சு. அதுபோக இவ்வளவு பெரிய கதையை திரையில் கொண்டு வருவது லேசுபட்ட காரியம் இல்ல.எனவே எதிர்பார்ப்பு இல்லாமல் போனேன். படம் அருமையாக இருந்தது. எனக்கு ரொம்பவே பிடித்து இருந்தது.கண்டிப்பாக பார்க்கலாம் 👍 வந்தியத்தேவன் கதாபாத்திரம் கிடைத்த கார்த்தி ரொம்பவே லக்கி.  கிட்டத்தட்ட நாவலில் மட்டுமே படித்த அந்த ஜாலியான கதாபாத்திரத்தை படத்தில் நம்மால் பார்த்து கனெக்ட் பண்ண முடிகிறது.  வந்தியத்தேவன் - குந்தவை, வந்தியத்தேவன்- நந்தினி உரையாடல்கள் ரொம்பவே அருமை. அதுவும் வந்தியத் தேவன்+நம்பி (ஜெயராம்) காம்பினேஷன் சூப்பராக அமைந்து உள்ளது.‌ ஆதித்த கரிகாலனாக விக்ரம் சிறப்பாக நடித்து இருக்கிறார். நந்தினி ரோலில் ஐஸ்வர்யா ராய் அழகு + வில்லத்தனம் கலந்த ஒரு ரோல். க்ளைமாக்ஸ் காட்சியில் தண்ணீருக்குள் ஊமை ராணி முகத்தை பார்த்தவுடன் GOT Cercei &Jaime கதாபாத்திரங்கள் ஏனோ ஞாபகம் வந்தது. புக் படித்தவர்கள் ஏன் என்று கண்டுபிடித்து விடலாம். குந்தவை & நந்தினி சந்திக்கும் காட்சிகள் சிறப்பான முறையில் இர