T-Bills என்றால் என்ன?
இன்னிக்கு நம்ம பார்க்கப்போகிற ஒரு Financial Instrument T-Bill. இது Short Term investment வகையை சேர்ந்தது.
T-Bills என்றால் Treasury Bills.
இத யாரு கொடுக்குறா மற்றும் எதற்காக கொடுக்கிறார்கள் என்று பார்க்கலாம்..
இப்ப அரசுக்கு குறுகிய காலத்துக்கு (ஒரு வருஷத்துக்கு உள்ள ) பணம் வேணும்னா அதுக்கு கடன் வாங்க உபயோகிக்கும் ஒரு Financial instrument தான் T Bills.
நீண்ட காலத் தேவை என்றால் அதுக்கு உபயோகிக்கும் Financial instrument தான் Bonds.
நம் அரசு 4 வகையான T-Bills களை வெளியிடுகிறது.
14 நாள்
91 நாள்
182 நாள்
364 நாள்
இதுல ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதற்க்கு வட்டி கிடையாது.
உடனே நமக்கு எழும் கேள்வி வட்டி இல்லனா இத வாங்கி நமக்கு என்ன ப்ரயோஜனம் ?
இந்த T Bills எல்லாம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும்.
இப்ப 14 நாளுக்கான 100 ரூபாய் T Bill வெளியிடப்படுகிறது என வைத்துக் கொள்ளுங்கள். இதனை வெளியிடும் போது 95 ரூபாய்க்கு வெளியிடுவார்கள்.
நீங்கள் 95 ரூபாய் கொடுத்து அதை வாங்கினால 14 வது நாள் முடிவில் உங்களுக்கு 100 ரூபாய் திரும்ப கொடுக்கப்படும். 14 நாள் முடிவில் உங்களுக்கு கிடைக்கும் ரிட்டர்ன்ஸ் 100-95=5 ரூபாய்
மேலே சொன்னது ஒரு சின்ன உதாரணம் . இதனை வைத்து எத்தனை சதவீதம் உங்களுக்கு லாபம் என்பதை கணக்கிட்டு கொள்ளலாம்.
மேலும் சில குறிப்பிடத்தக்க விஷயங்களை பார்க்கலாம்.
- இதில் மினிமம் இன்வெஸ்ட்மென்ட் 25,000
- கடைசியில் கிடைக்க கூடிய அமௌன்ட் நிலையானது.
- RBI இதனை இந்திய அரசின் சார்பில் வெளியிடுவதால் ரொம்பவே பாதுகாப்பானது.
இதில் Disadvantage என்னவென்றால் நம்முடைய ரிட்டர்ன்ஸ் எப்பவுமே அதிகரிக்காது(Fixed ).
இதனால் நமக்கு கிடைக்கும் ரிட்டர்ன்ஸ்க்கு Short Term Capital Gain Tax உண்டு.
யாரு இதுல இன்வெஸ்ட் பண்ணலாம்?
வேறு ஏதோ காரணங்களுக்காக பணம் வைச்சு இருக்கீங்க. அந்த Gap ல எதுல யாவது இன்வெஸ்ட் பண்ணணும் என நினைத்தால் இதில் பண்ணலாம்.
FD, Liquid Funds என நிறைய ஆஃப்ஷன் கள் இருக்கு.. இதுவும் ஒரு நல்ல ஆப்ஷன் தான்.
எப்படி இன்வெஸ்ட் பண்றது ?
Zerodha Coin App ல T - Bills வாங்குற ஆப்ஷன் இருக்கு.
RBI ல இருந்து நேரடியாகவும் வாங்கலாம் .
Mutual Funds பற்றி படிக்க:
கருத்துகள்
கருத்துரையிடுக