ஒரு சர்ச் பாதிரியாரை அங்கே வேலை செய்யும் இளைஞன் ஒருவன் கொடூரமான முறையில் கொன்று விடுகிறான்.
IMDb 7.7
Tamil dub ❌
OTT ❌
போலீஸ் அவனை கைது செய்கிறது ஆனால் நான் கொல்லவில்லை என்கிறான். இவனுக்கு ஆதரவாக வக்கீலான ஹீரோ களமிறங்குகிறார்.
யார் கொலையாளி என்பதை படத்தில் பாருங்கள்.
பணம் மற்றும் புகழுக்கு ஆசைப்படும் ஹீரோவான வக்கீல் . பாதிரியார் சிறுவன் கேஸ் நல்ல புகழை பெற்றுத் தரும் என இந்த கேஸை எடுக்கிறார்.
இவருக்கு எதிராக வாதாடுவது இவரின் முன்னாள் காதலியான இன்னொரு வக்கீல்.
இதற்க்கு நடுவில் இந்த கேஸ்களுடன் சம்பந்தப்பட்ட ஒரு கேங் வேறு உள்ளது
படம் நன்றாகவே இருக்கிறது. ஆனால் படத்தில் போலீஸ் என்ன பண்ணுகிறது என்று தான் தெரியவில்லை. எல்லா விசாரணையையும் வக்கீல்கள் தான் பண்றாங்க.
நடுவுல மற்றும் கடைசில நல்ல ட்விஸ்ட் இருக்கு.
இந்த படத்துல வர்ற தீம் மியூசிக் செமயா இருந்தது. இந்த மியூசிக்யை எங்கயோ தமிழ்ல காப்பி அடித்து இருக்காங்க. எனக்கு தெரிஞ்சு குஷி படத்துல ஒரு சாங்குக்கு தேவா தூக்கிட்டாருனு நெனைக்கிறேன்.
Primal Fear Theme Music:
நல்ல ஒரு கோர்ட் ரூம் டிராமா. கண்டிப்பாக பார்க்கலாம் 👍
கருத்துகள்
கருத்துரையிடுக