இது மாதிரி நெறயா ஆர்ட்டிக்கிள் பார்த்து இருப்பீர்கள். ஆனா என்னோட பயணம் இந்த சர்ட்டிபிகேஷன் முடிச்சே ஆகணும் மற்றும் நேரம் குறைவு என்பதால் பரபரப்பாக படித்தது. அதுனால ரொம்பவே ப்ராக்டிகலா இருக்கும். எல்லாருக்கும் ஒர்க் ஆகுமானு தெரியாதுங்க. அதனால இத அப்படியே எல்லாம் ஃபாலோ பண்ணாதீங்க. இது நான் உபயோகித்த வழிமுறைகள் மட்டுமே. Just want to share my experience
இந்த செப்டம்பர்க்குள்ள ஏதாவது ஒரு சர்ட்டிபிகேஷன் முடிக்க வேண்டும் என கம்பெனியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.
நான் படிச்சுட்டு இருந்தது GCP Exam க்கு.ஆனா திடிரென Azure & GCP எதுனாலும் படிக்கலாம் என்று சொல்லிட்டு நிறைய கட கடவென AZ 900 எழுதி பாஸ் ஆகிவிட்டார்கள்.
நான் எழுதுனா GCP தான் எழுதுவேன் என்று உக்காந்து இருந்தேன். ஆனா எனக்கு தெரிந்த கம்பெனி வட்டத்தில் யாரும் GCP எழுதவில்லை . அதனால் நம்பிக்கை கொஞ்சம் கம்மியாகவே இருந்தது.
இதற்கு நடுவில் ஒரு ஜீனியர் பையன் நான் AZ 900 முடிச்சுட்டேன் என்று கால் பண்ணான். எப்படிடா என்றதும் 2 லிங்கை வாட்ஸ்ஆப்பில் அனுப்பினான். இத மட்டும் படிச்சு தான் நான் பாஸ் ஆனேன் என்றான்.
இதற்கு நடுவில் எங்க மேனேஜர் எப்ப முடிக்க போற தேதி சொல்லுன்னு ஒரே டார்ச்சர். .
செப்டம்பர் மாத ஆரம்பத்தில் நடந்தது இந்த உரையாடல். நானும் இதை பற்றி யோசிச்சு சரி நம்மளும் இத படிச்சு சர்ட்டிபிகேஷன் எழுதலாம்னு முடிவு பண்ணினேன்
சரின்னு அவன் அனுப்புன லிங்கல படிக்க ஆரம்பித்தேன்.
இது தான் அந்த லிங்க் :
https://royseto.medium.com/microsoft-azure-az-900-practice-questions-part-1-of-10-a1ff6d7595e8 (Free )
மொத்தம் 200+ கேள்விகள் மற்றும் பதில்கள். பதிலை எப்படி கண்டுபிடிப்பது என்பதற்கான விரிவான விளக்கம் கொண்ட லிங்குகள் அதில் கொடுக்கப்பட்டு இருந்தது.
இதில் உள்ள எல்லா கேள்விகளையும் படிங்க . இதில் சரியான பதில் என்பதை மட்டும் கண்டு பிடித்தால் போதாது . தப்பான பதில்களை எப்படி கண்டுபிடிக்கிறோம் என்பது ரொம்ப முக்கியம்.
தேவைப்படால் அந்த Product மற்றும் கான்செப்ட் பற்றி நன்றாக படிங்க.
அடுத்து Cloud Guru - இது Paid Service . ஆனா எங்க ஆபீஸ்ல இலவசமா கொடுத்தாங்க .
https://acloudguru.com/ (Not Free )
இதுல ப்ராக்டிஸ் எக்ஸ்ஸாம் எழுதுறது ரொம்ப உபயோகமா இருந்தது. ப்ராக்டிஸ் எக்ஸாம் முடிந்ததும் கேள்விளுக்கான பதில்கள் விரிவாக பார்க்கலாம். ரிவ்யூ செய்வது ரொம்பவே முக்கியமான ஒன்று.
அடுத்து Microsoft ESI (Enterprises Skills Initiative)
https://esi.microsoft.com/ (Not Free)
இது கம்பெனிகளின் எம்ப்ளாயீஸ்க்காக கொடுக்கபடும் சர்வீஸ். இதிலும் ப்ராக்டிஸ் எக்சாம்ஸ் ரொம்பவே உபயோகமாக இருந்தது.
கான்செப்ட்களை படிக்க (Free) : https://learn.microsoft.com/en-us/training/browse/?products=azure%2Csql-server%2Cwindows-server
கடைசியாக இந்த யூடியூப் சேனல். (Free )
இதுல உள்ள ஆள் பேசுற இங்கிலீஷ் பார்த்துட்டு இத வைச்சு படிக்கனுமானு எல்லாம் யோசிச்சேன். ஆனா நெறைய கேள்விகள் இதில் இருந்து வந்தது.
எனக்கு ரொம்பவே தலைவலியா இருந்த டாபிக்குகள் Active directory, Networking, SLA topics
1000 மார்க்குக்கு எக்ஸாம் 700 எடுத்தா பாஸ்.
எனக்கு 32 கேள்விகள் வந்தது, 45 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. 880 எடுத்தேன்.
இன்னொரு முக்கியமான விஷயம் Microsoft ல இருந்து Free Training கொடுக்குறாங்க. நீங்க அந்த டிரைனிங் attend பண்ணுனா இந்த AZ 900 எக்ஸாம் இலவசமா எழுதலாம். இல்லைனா 3600 ரூபாய் கட்டணும்.
கீழ உள்ள லிங்க் கிளிக் பண்ணி ரெஜிஸ்டர் பண்ணி ட்ரைனிங் அட்டன்ட் பண்ணுங்க .
https://info.microsoft.com/AU-HCSAzureHybridInfra-CATALOG-FY21-07Jul-07-MicrosoftAzureVirtualTrainingDayFundamentals-SRDEM33006_CatalogDisplayPage.html
In my opinion கான்செப்ட்டை நன்றாக படித்துவிட்டு அந்த Medium லிங்க் & YouTube லிங்க் பார்த்தால் கிளியர் பண்ணிடலாம்.
2 Weeks daily 1-2 Hours prepare பண்ணுனேன்.
Hope it helps.
All The best 👍
கருத்துகள்
கருத்துரையிடுக