My Favourite Trip- parambikulam, Thunakkadavu Tree House & Tree Top Stay
சில சுற்றுலா பயணங்கள் மறக்க முடியாதபடி அமையும் . அது மட்டுமல்லாமல் மீண்டும் போக வேண்டும் என்ற ஒரு ஆவலைத் தூண்டும். 2017 மார்ச் மாதத்தில் திடீரென ப்ளான் பண்ணி போன ஒரு அருமையான ட்ரிப் பத்தி பாக்கலாம்.
கொரானா முன்னாடி மறுபடியும் போக ஃப்ளான் பண்ணிட்டு இருந்தேன் ஆனால் கேன்சல் ஆகிடுச்சு. இன்னும் போக முடியல..
இடம்: பரம்பிக்குளம், துணக்கடவு ஏரி & வால்பாறை (1 இரவு , 2 பகல்)
பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு டூர் ஆப்பரேட்டர் மூலமாக ஏற்பாடு செய்தேன்.
பழனியிலிருந்து பிக்கப் செய்து கொண்டு மாசாணியம்மன் கோவில் , மங்கி பால்ஸ் , டாப் ஸ்லிப் வழியாக பரம்பிக்குளம் மற்றும் துணக்கடவு செல்ல பிளான்.
துணக்கடவு ஏரியில் ஒரு மரத்தில் கட்டப்பட்டிருக்கும் வீட்டில் தங்குவதாக திட்டம். என் மனைவிக்கு நடுக்காட்டில் மரவீட்டில் தங்குவதில் சுத்தமாக உடன்பாடு இல்லை. ஆனால் என் பையனுக்கு செம ஜாலி.
இந்த மரவீட்டில் தங்க கட்டணம் அப்போது 6000 ரூபாய். 2 வேளை உணவு, துணக்கடவு ஏரியில் மூங்கில் படகில் ஒரு மணிநேர பயணம் மற்றும் 3 மணிநேரம் காட்டில் சவாரி இந்த 6000 ரூபாயில் அடக்கம்.
இரண்டு நாள் ஏஸி கார் + ட்ரைவர் நம்ம கூடவே இருப்பார். இதற்கு எல்லாம் சேர்த்து மொத்தம் 12K கொடுத்த ஞாபகம்.
முதல் நாள் பழனியில் பிக் அப் செய்தார் ட்ரைவர். ட்ரைவர் அந்த ஏரியாவை சேர்ந்தவர் என்பதை கொஞ்ச நேரத்தில் தெரிந்து கொண்டேன். நான் மங்கி பால்ஸ்ல் குளிக்க வேண்டும் என்று சொன்னேன் அவர் அங்கு தண்ணி விழவில்லை அதனால் குளிக்க முடியாது சார் என்றார்.
ஆமாம் நான் ப்ளான் பண்ணியது மார்ச் மாத கடைசியில். என் மூஞ்சி போன போக்கை பார்த்துவிட்டு ஆற்றில் குளிக்கிறீங்களா என்றார். நானும் சரி என்றேன். மெயின் ரோட்டில் போய்க்கொண்டு இருந்தவர் திடீரென ஒரு ரைட் எடுத்து சின்ன ரோட்டில் 5 நிமிஷம் சென்று நிறுத்தினார்.
அழகான ஒரு கோவில் அதன் கரையில் ஆறு ஒடுது . சுருக்கமா சொல்லப் போனால் அருமையான சூட்டிங் ஸ்பாட். ரம்யமான சூழ்நிலை , சுத்தமான தண்ணீர் மற்றும் அவ்வளவு போர்ஸ்ஸாக ஓடுது அதுவும் மார்ச் மாதத்தில்... அனைவரும் ஹாப்பி ஒரு ஒரு மணிநேரம் செம ஆட்டம் அங்க. ஒரு சில உள்ளூர் ஆட்களை தவிர அங்க டூரிஸ்ட் என்று ஒரு ஆள் கிடையாது. அப்படி ஒரு பிரைவஸி.
அங்கிருந்து மாசாணியம்மன் கோவில் சென்று தரிசனம் முடித்துவிட்டு கிளம்பினோம்.
அங்க இருந்து கிளம்பி டாப் ஸ்லிப் தாண்டி பரம்பிக்குளம் சென்றடைந்தோம். பரம்பிக்குளம் கேரள மாநிலத்தின் வசம் உள்ளது. அருமையாக பராமரித்து இருக்கிறார்கள்.
எனக்கு ட்ரிப் அரேன்ஜ் பண்ணிய டூர் ஆப்பரேட்டருக்கும் இங்கு உள்ள ஆபீஸுருக்கும் நல்ல டேர்ம்ஸ் இருந்தது போல அதனால் ஒன்னும் பெரிய சோதனைகள் இல்லாமல் உள்ளே விட்டார்கள்.
உள்ளே போனவுடன் அங்கு நமக்கு என்று ஒரு தனி செக்யூரிட்டி வந்தார். இவர்கள் அந்த ஏரியாவில் வசிக்கும் பழங்குடி மக்கள். இவர்கள் துணை இல்லாமல் மர வீட்டை விட்டு வெளியே வர அனுமதி கிடையாது.
இவர்களும் அங்க பணிபுரியும் நபர்கள் தங்க வீடுகள் மரவீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருக்கும்.
மரவீடு என்றவுடன் ஏதோ பழைய மாடல் வீடு என நினைத்தேன். ஆனால் உள்ளே டபுள் பெட், வாஷ்பேஷின், ஹாட் வாட்டர் என அனைத்தும் உண்டு.
மூன்று பக்கமும் பால்கனி போன்ற அமைப்பு உள்ளது. இரண்டு புறமும் ஏரி , ஒரு புறம் வேலை செய்பவர்கள் வீடுகள்.
பின்னாடி பால்கனி வெளியே இரண்டு யானைகள் நின்றது. அவ்வளவு அழகு.
கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்து விட்டு மூங்கில் படகில் போட்டிங் கூட்டி போனார்கள். 4 பேர் துடுப்பு போட அருமையான ஒரு அனுபவம். நடுவில் சிறு தீவில் இறக்கிவிட்டார்கள் . அங்கே பல வித பறவைகள் தரையில் முட்டையிட்டு கூடு கட்டி இருந்தது. அங்கே ஒரு அரைமணி நேரம் கழித்த பின்பு மீண்டும் ஏற்றி கரையில் இறக்கி விட்டார்கள். நல்ல ஒரு புதுமையான அனுபவம் இது.
மெதுவாக இருட்ட ஆரம்பிக்க கூட வந்தவர் ரூமில் விட்டு விட்டு வெளியே எந்த காரணமும் கொண்டும் வராதீர்கள் என்று எச்சரித்து விட்டு சென்றார். இரவு உணவு ரூமிற்குள் வந்தது. சிக்கன் குருமா , சப்பாத்தி என நன்றாக இருந்தது.
என் மனைவிக்கு உள்ளூர் கொஞ்சம் பயம். நம்மளும் என்ன தான் தைரியமாக காட்டிக் கொண்டாலும் உள்ளூர கொஞ்சம் பயம் தான்.
ஏனென்றால் காட்டுக்குள் இரவு ரொம்பவே பயமாக இருந்தது. விலங்குகள், பறவைகள் என்று பல விதமான சத்தங்கள். திகில் படத்தில் வருவது போன்ற ஒரு சூழ்நிலை தான்.
அடுத்த நாள் காலை 6 மணிக்கு ட்ரைவர் வந்து எழும்பி விட்டார். வேறு எந்த டூரிஸ்ட்டும் இல்லாததால் காட்டுக்குள் செல்லும் சவாரி ரத்து செய்யப்பட்டது என்றார். எனக்கு ஒரே ஏமாற்றம்.
கவலைப்படாதீர்கள் சார் நான் பேசிட்டேன் நம்ம கார்லயே போகலாம் என்று சொல்லி கிளம்பிவிட்டார். இவ்வளவு காலையில் சென்றால நிறைய மிருகங்கள் பார்க்கலாம் என்றதோடு மட்டும் இல்லாமல் அதிர்ஷ்டம் இருந்தால் புலியை கூட பார்க்கலாம் என்று ஆசையை தூண்டி விட்டார். .
வழக்கம் போல் புலி காலடி தடம் மட்டும் தான் இருந்தது. மற்றபடி காட்டெருமை, மான் , உடும்பு என வழக்கமாக பார்க்கும் விலங்குகள் இருந்தன.
ஆனால் புத்தம் புது காலை என்று கேள்விப்பட்டு இருப்போம் ஆனால் அதை அங்கு தான் அனுபவித்தேன் அந்த ட்ரிப்பின் கடைசியில் ஒரு மிகப்பெரிய தேக்கு மரம் ஒன்று இருந்தது.
திரும்ப ரூமுக்கு வந்தால் அந்த கரையின் ஓரத்தில் நைட்டு விரித்து வைத்து விட்டு வந்த வலையை ஒரு சின்ன படகில் வைத்து எடுத்துட்டு வந்தார் ஒருத்தர். வலையில் பார்த்தால் 2 பெரிய கட்லா மீன்கள் இருந்தது.
காலை உணவுக்கு சமைத்து தாருங்கள் அதற்கு பணத்தை தந்து விடுகிறேன் என்ற சொல்ல சந்தோஷத்துடன் தலையை ஆட்டினார்.
மீன் ஃப்ரை பண்ணிருந்தார் நல்ல சுவையாக இருந்தது. அவ்வளவு என்றேன் நீங்க கொடுங்க சார் என்றார் சமையல்காரர். 500 ரூபாய் கொடுத்தேன் சந்தோஷமாக வாங்கிக் கொண்டார்.
அங்கிருந்து வால்பாறை செல்லும் வழியில் மதிய சாப்பாடு நேரம்.
ட்ரைவரிடம் அண்ணே பெரிய ஹோட்டல் எல்லாம் வேணாம் உள்ளூரில் எங்கயாவது நல்ல சின்ன நான் வெஜ் கடைல நிறுத்துங்க என்றேன்.
பெண்களா சேர்ந்து ஒரு ஹோட்டல் நடத்துறாங்க ஆனால் மீன் சாப்பாடு மட்டும் தான் அங்க போலாமா என்றார் வண்டிய அங்கேயே விடுங்க என்றேன்.
சாப்பாடு நன்றாகவே இருந்தது. மீன் குழம்பு அவ்வளவு டேஸ்டாக இல்லை ஆனால் மீன் ரோஸ்ட் நல்லா இருந்தது..
அங்கிருந்து கிளம்பி வால்பாறை சுத்திச் பார்த்து விட்டு இரவு மறுபடியும் பழனியில் இறக்கி விட்டார் ட்ரைவர்.
யாராவது இந்த ட்ரிப் ப்ளான் பண்ணுனா வார நாட்களில் ஃப்ளான் பண்ணுங்க. வார இறுதி நாட்களில் ரொம்ப கூட்டமா இருக்கும்.
நான் போனது 2017 ல் .. இப்ப எவ்வளவு மாறி இருக்கும் என்று தெரியவில்லை. அதனால் ரொம்ப எதிர்பார்ப்பு இல்லாமல் போங்க.
எனக்கு டூர் அரேஞ்ச் பணண ஆப்பரேட்டர் இன்னும் இருக்காங்க. ஆனால் நான் சில நண்பர்களுக்கு பரிந்துரை செய்தேன். ஆனால் ரெஸ்பான்ஸ் வேகமாக இல்ல என்று கேள்விப்பட்டேன். ஆப்பரேட்டர் மூலமாக போவது சிறந்தது என்பது எனது தனிப்பட்ட கருத்து.
இது தவிர இங்கு நிறைய வித்தியாசமான தங்கும் வசதிகள் உண்டு. உதாரணமாக படகில் சென்று தீவுக்குள் தஙகுவது. மேலும் விவரங்களுக்கு இந்த வெப்சைட்டை பாருங்கள்.
புலிகள் சரணாலயம் என்பதால் கட்டுப்பாடுகள் அதிகம் குறிப்பாக சரக்கு அனுமதி கிடையாது.
நீங்களே சர்ச் பண்ணி பாருங்க அவசியம் என்றால் DM பண்ணுங்க நான் உபயோகித்த ஆப்பரேட்டர் தகவல்களை தருகிறேன்.
பொறுமையா படித்தற்கு நன்றி.
உங்களுடைய வித்தியாசமான சுற்றுலா அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக