ஒரு இங்கிலீஷ் பாக்சர் தாய்லாந்துல கடும் கட்டுப்பாடுகள் கொண்ட சிறையில் மாட்டிக் கொள்கிறான்.
IMDb 6.8
Tamil dub ❌
Available Netflix
அவனுடைய பாக்ஸிங் திறமையை வைத்து அங்க இருந்து எப்படி வெளில வர்றான் என்பது தான் படம்.
உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.
பாக்ஸரான Billy போதை பழக்கத்துக்கு அடிமையானவன். ஒரு நாள் போதைப் பொருள்களுடன் போலீஸில் சிக்கிக்கொள்ள சிறைக்கு அனுப்பப்படுகிறான்.
இவனுக்கு தாய்லாந்து பாஷை தெரியாமல் இருப்பதால் யாரும் இவனுடன் ஒட்டுவது இல்லை. அது போக எல்லாரும் இவனை எதிரி போல நடத்துக்கிறார்கள்
ஒரு கட்டத்தில் தன்னை உணர்ந்து பாக்ஸிங் தான் தனக்கு கை கொடுக்கும் என்பதை உணர்ந்து ஜெயிலில் உள்ள பாக்ஸிங் டீமில் இணைகிறான்.
இதன் மூலமாக எவ்வாறு விடுதலை பெற்றான் என்பதை படத்தில் பாருங்கள்.
படம் ரொம்ப ராவாக இருக்கும் நிறைய வன்முறை, போதைப்பொருள் மற்றும் நிர்வாண காட்சிகள் என நிறைய 18+ .
படமும் மெதுவா தான் போகும். எல்லாருக்குமான படம் இல்லை இது.
பாதி படத்துக்கு மேல் தாய்லாந்து பாஷை தான் நிறைய இடத்துல சப்டைட்டில் கூட போட மாட்டேங்கிறானுக.
கருத்துகள்
கருத்துரையிடுக