My Favourite Trip- parambikulam, Thunakkadavu Tree House & Tree Top Stay சில சுற்றுலா பயணங்கள் மறக்க முடியாதபடி அமையும் . அது மட்டுமல்லாமல் மீண்டும் போக வேண்டும் என்ற ஒரு ஆவலைத் தூண்டும். 2017 மார்ச் மாதத்தில் திடீரென ப்ளான் பண்ணி போன ஒரு அருமையான ட்ரிப் பத்தி பாக்கலாம். கொரானா முன்னாடி மறுபடியும் போக ஃப்ளான் பண்ணிட்டு இருந்தேன் ஆனால் கேன்சல் ஆகிடுச்சு. இன்னும் போக முடியல.. இடம்: பரம்பிக்குளம், துணக்கடவு ஏரி & வால்பாறை (1 இரவு , 2 பகல்) பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு டூர் ஆப்பரேட்டர் மூலமாக ஏற்பாடு செய்தேன். பழனியிலிருந்து பிக்கப் செய்து கொண்டு மாசாணியம்மன் கோவில் , மங்கி பால்ஸ் , டாப் ஸ்லிப் வழியாக பரம்பிக்குளம் மற்றும் துணக்கடவு செல்ல பிளான். துணக்கடவு ஏரியில் ஒரு மரத்தில் கட்டப்பட்டிருக்கும் வீட்டில் தங்குவதாக திட்டம். என் மனைவிக்கு நடுக்காட்டில் மரவீட்டில் தங்குவதில் சுத்தமாக உடன்பாடு இல்லை. ஆனால் என் பையனுக்கு செம ஜாலி. இந்த மரவீட்டில் தங்க கட்டணம் அப்போது 6000 ரூபாய். 2 வேளை உணவு, துணக்கடவு ஏரியில் மூங்கில் படகில் ஒரு மணிநேர பயணம் மற்றும் 3 மணிநேரம் காட்டில் சவாரி இந்த 600