உண்மையை சொல்ல போன சாப்ட்வேர் நம்ம வாழ்க்கையில கலந்து விட்டது.
உதாரணமாக UPI உபயோகித்து வண்டிக்கடைக்காருக்கு பணம் கொடுக்கறதுக்கு பின்னாடி கூட சாஃப்ட்வேர் இருக்கு.
நீங்க ஸ்கேன் பண்ணுறதுல இருந்து உங்க அக்கௌன்ட்ல பணத்த எடுத்து அவரோட அக்கௌன்ட்ல பணம் போய் சேர வைக்க வேண்டியது சாஃட்வேரின் பொறுப்பு.
இதில் பல சிக்கல்கள் வரலாம். உதாரணமாக உங்க அக்கௌன்ட்ல பிரச்சினை வரலாம், பேலன்ஸ் இல்லாமல் இருக்கலாம், திடீர்னு இன்டெட்நெட் வேலை செய்யாமல் போகலாம் இப்படி பல சிக்கலான சூழ்நிலைகளை கையாளும் விதமாக சாப்ட்வேர் இருக்க வேண்டும்.
இப்ப சாஃப்ட்வேர் கம்பெனிகளில் என்ன பண்ணுவாங்கனு பார்ப்போம்
இந்த அளவு சிக்கலான ஒரு சாஃப்வேரை உருவாக்க ஒரு ப்ளு பிரின்ட் வேணும்ல அதுக்கு உருவாக்க ஒரு ஆர்க்கிடெக்ட் இருப்பார், ப்ளு பிரின்டை சாப்ட்வேரா மாத்தனும்
அதாவது நம்ம மெபைல்ல Pay னு ஒரு பட்டன அமுக்குன உடனே பின்னாடி என்ன என்ன நடக்கனும்னு கம்யூட்டருக்கே புரியும் படி சொல்லனும்ல அதுக்கு தான் இந்த Java ,Python etc.. எல்லாம் இருக்கு.
இத யூஸ் பண்ணி Developer கள் சாப்ட்வேர் எழுதுவார்கள்.
இந்த சாப்ட்வேர் நம்ம எதிர்பார்த்த மாதிரி வேலை செய்யுதானு சரிபார்க்க Tester (QA) இருப்பாங்க.
இந்த டெவலப்பர்கள், Architect, QA னு இந்த கூட்டத்தை எல்லாம் Supervise பண்றவர் தான் ப்ராஜெக்ட் மேனேஜர்.
இவருக்கு அஸிஸ்ட்டன்டா டெவலப்பர்களில் ஒருத்தனை புடுச்சு Team Lead ஆ வைச்சுக்குவாங்க.
ஆக மொத்தம் அந்த புராஜெக்ட் நல்லா போனாலும் நாசமா போனாலும் மேனேஜர் தலை தான் உருளும்.
இது போக இந்த சாப்ட்வேர் ஓட பெரிய பெரிய கம்ப்யூட்டர்கள் வேணும் அத சர்வர்னு சொல்லுவாங்க அந்த சர்வர மெயின்டெய்ன் பண்ண தனியா ஒரு குரூப் இருக்கும்.
இந்த சாப்ட்வேரை பிரபல படுத்த மார்க்கெட்டிங் டீம் இருக்கும்.
இந்த சாப்ட்வேர் சரியா ஓடுதா பிரச்சினை வருதானு பார்த்து சரி பண்ண Support Team னு தனியா ஒன்னு இருக்கும்.
நான் ரொம்ப மேலோட்டமாக தான் சொல்லி இருக்கேன்.
நிறைய கம்பெனிகள் வெளி நாட்டுக்கு சாப்ட்வேர்கள் செய்து தருகிறார்கள். டாலரில் பண்த்தை வாங்கிக்கொண்டு ரூபாயில் சம்பளம் தருகிறார்கள்.
அதுனால அந்த அந்த புராஜெக்ட்டின் முக்கியத்துவம் மற்றும் ஒருவர் அந்த புராஜெக்ட்டில் செய்யும் வேலையை பொறுத்து லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க வாய்ப்புகள் உண்டு.
ஆனால் எல்லாருமே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவார்கள் என்பது இந்த சினிமா கெளப்பி விட்ட புரளி.
UPI பற்றி பார்த்தோம் இப்ப வேற எங்க எல்லாம் சாப்ட்வேர் இருக்கு பார்க்கலாம் .
பஸ், ரயில், ஃப்ளைட் , கார், ஆட்டோ புக்கிங் ,சாப்பாடு ஆர்டர், பேங்க் பண பரிமாற்றம், அரசுக்கு வரி கட்டுற சிஸ்டம், மேப், Facebook, Twitter என சாப்ட்வேர் எங்கும் நிறைந்து உள்ளது.
இதில் பல சிக்கலான சாப்ட்வேர்கள் உள்ளது உதாரணமாக ராணுவத்தில் உபயோகப்படுத்தும் சாப்ட்வேர்கள், ஒரு விமானித்தின் செயல்பாட்டை கண்காணித்து சொல்லும் சாப்ட்வேர், பங்கு சந்தையில் உபயோகப்படுத்தும் சாப்ட்வேர்கள் போன்றவற்றை சொல்லலாம்.
இதில் ஏதாவது சிறு பிழை ஏற்ப்பட்டால் கூட சேதாரம் படு பயங்கரமாக இருக்கும்.
மொத்தத்தில் சொல்ல போனால் வாழ்கையில் ரொம்பவே அத்தியாவசியமான ஒன்று ஆகிவிட்டது இந்த சாப்ட்வேர்.
இந்த விளக்கம் போதும் என்று நினைக்கிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக