The Endless Tamil Review
ஒரு Cult ல் இருந்து ஓடி வந்த சகோதரர்கள் 10 வருஷத்துக்கு அப்புறம் Cult க்கு ஒரு நாள் போகிறார்கள். அங்க விசித்திரமான சம்பவங்கள் நடக்குது. அங்கிருந்து சகோதரர்கள் தப்பித்தார்களா என்பதை படத்தில் பாருங்கள்.
IMDb 6.5
Tamil dub ❌
OTT ❌
பெற்றோரை இழந்த சகோதரர்கள் Cult ஒன்றில் வாழ்கிறார்கள். அங்க ஏதோ தப்பாக பட அண்ணன் தம்பியை கூட்டிட்டு ஓடி வந்து விடுகிறான்.
10 வருஷத்துக்கு அப்புறம் ஒரு வீடியோ டேப் தம்பிக்கு போஸ்ட்ல வருது. தம்பிக்கு அங்கு இருந்த நாட்கள் மகிழ்ச்சியாக இருந்தது என்று சொல்லி ஒரு தடவ அங்க போய் தங்கிட்டு வரலாம் என அண்ணனை நச்சரித்து கூட்டிட்டு போறான்.
ஆனா அங்க பல விசித்திரமான சம்பவங்கள் நடக்குது. உதாரணமாக 2 நிலா தெரியுது. அங்க உள்ளவங்க 10 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தாங்களோ அதே மாதிரி தான் இப்பவும் இருக்காங்க.
அங்க தங்கும் சமயத்தில் மேலும் பல சம்பவங்கள் நடக்க இருவரும் அங்க இருந்து தப்பிக்க முயற்சி பண்ணுகிறார்கள். தப்பித்தார்களா இல்லையா என்பதை படத்தில் பாருங்கள்.
முதலில் இது நேர்த்தியாக எடுக்கப்பட்ட Low Budget படம். இயக்குனர்கள் இருவருமே சகோதரர்களாக நடித்தும் உள்ளனர்.
முதலில் கொஞ்சம் மெதுவாக போனாலும் அந்த Cult ல் நடக்கும் சம்பவங்கள் ஆர்வத்தை தூண்டி படம் பார்க்க வைத்து விடுகிறது.
படம் ஹாரர் மாதிரி ஆரம்பித்து Sci Fi கதையாக முடிகிறது.
வித்தியாசமான ஹாரர்+சயின்ஸ் ஃபிக்சன் படம்.
நிறைய காட்சிகள் சரியா புரியல...
கண்டிப்பாக ஒரு தடவை பார்க்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக