ஹீரோ மற்றும் அவரின் காதலியை கொன்றவர்களை ஹீரோ மறுபடியும் உயிர் பிழைத்து வந்து பழிவாங்கும் Fantasy கதை தான் இந்த படம்.
IMDb 7.5
Tamil dub ❌
OTT ❌
IMDb user and critics rating ல எதுக்கு இவ்வளவு சில்லறைய சிதற விட்ருக்கானுகனு தெரியல.
புதுசா ஒன்னும் இல்ல ஆனா டைம் பாஸ் படம். அந்த டைம்ல இது புதுசா இருந்ததோ என்னமோ..
ஹீரோவோட கல்யாணத்துக்கு முதல் நாள் ஒரு குரூப் அவரையும் அவரோட காதலியையும் கொன்றுவிடுகிறது.
கரெக்டா ஒரு வருஷம் கழிச்சு கல்லறையில் இருந்து ஹீரோ எந்திரிச்சு வரார். அவர் ஏன் வர்றாரு என்பதற்கு காக்கா வச்சு ஒரு கதை சொல்றாங்க. அதுனால ஹீரோ படம் முழுவதும் காக்காவை கூட கூட்டிட்டு சுத்துறார்.
தங்களது கொலைக்கு காரணமானவர்களை ஒவ்வொருத்தரா கொன்று அவர்களுடைய பாஸ் ஒருத்தனையும் கொல்கிறார்.
இந்த படத்தோட ஹீரோ Brandon Lee இந்த படத்தோட கடைசி கட்ட படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் இறந்து விட்டார் போல.
ஒரு தடவ பாக்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக