Lost Series Review In Tamil
ஒரு ஃப்ளைட் திடீரென தடம் மாறி ஒரு அமானுஷ்யம் நிறைந்த தீவுக்குள் போய்விடும்.
அவர்களால் வெளி உலகை தொடர்பு கொள்ள முடியாது.
6 Seasons, 119 Episodes
Tami dub ❌
OTT ❌
அதே மாதிரி வெளி உலகில் இருப்பவர்களுக்கு இப்படி ஒரு தீவு இருப்பதும் தெரியாது.
தொடர் செம சஸ்பென்ஸ்ஸா இருக்கும்.
என்ன நடக்கிறது என்பதை யூகிக்கவே முடியாது. கடைசியில் கொஞ்சம் சொதப்பி இருப்பார்கள் . ஆனால் வொர்த்தான தொடர். கண்டிப்பாக பார்க்கலாம்.
நல்ல Adventure + Survival பற்றிய தொடர் இது
இந்த குழுவில் சில பேருக்கு கேரக்டர் டெவலப்மென்ட் செய்வார்கள். அவர்களுடைய கடந்த கால வாழ்க்கை மற்றும் தற்போது தீவில் நடக்கும் நிகழ்வுகள் என மாறி மாறி பயணிக்கும் தொடர்.
பல விசித்திரமான சம்பவங்கள் நடக்கும். திடீரென கருப்பு கலர் புகை மாதிரி ஒரு வித்தியாசமான சவுண்ட் ஓட ஒன்னு அப்ப அப்ப வந்து போகும்.
என்ன நடக்குதுனு தெரியாம அந்த சஸ்பென்ஸ்லயே பல சீசன்கள் போகும். அதுக்கு அப்புறம் தான் அது என்ன மாதிரியான தீவு அங்க என்ன நடக்குது என கொஞ்சம் கொஞ்சமாக காட்டுவார்கள்.
நன்றாக போகும் தொடர் கடைசியில் கொஞ்சம் ஸ்லோவா போகும். க்ளைமாக்ஸ் அவ்வளவாக நல்லா இருக்காது.
ஆனா சீரிஸ் செம் என்கேஜிங்கா போகும்.
J J Abrams உருவாக்கிய தொடர் இது.
கடைசியில் யார் எல்லாம் தீவில் இருந்து தப்பித்தார்கள் என்பதை தொடரில் பாருங்கள்.
கண்டிப்பாக பார்க்கலாம் 👍
கருத்துகள்
கருத்துரையிடுக