Jungle Movie Tamil Review
IMDb 6.7
Tamil dub ❌
OTT ❌
Yossi ஒரு அட்வென்ட்சர் விரும்பி.. தென் அமெரிக்காவின் அமேசான் காடுகளுக்குள் ட்ரக்கிங் செய்ய வருகிறான்.
அங்கு பொலிவியாவில் இவனை போன்ற அட்வென்சர் ட்ரிப்பில் ஆர்வம் உள்ள இருவரை சந்தித்து நட்பாக பழகுகிறார்கள்.
அங்கு Karl என்னும் ஒருத்தன் வந்து அமேசான் காட்டுக்குள் ஒரு பழங்குடி இனம் வாழ்கிறார்கள் .இதுவரை அங்கு யாருமே போனது இல்லை. ஆனால் எனக்கு வழி தெரியும் நான் கூட்டிட்டு போறேன் என்று சொல்லி உசுப்பேற்றி விடுகிறான்.
Yossi மற்ற இரண்டு நண்பர்களையும் சரி கட்டி இந்த பயணத்தை ஆரம்பிக்கிறார்கள்.
ஆரம்பத்தில் ஜாலியாக போகும் பயணம் தட்பவெப்பநிலை மற்றும் சூழ்நிலை காரணமாக மிகவும் கடுமையான ஒன்றாக மாறுகிறது.
ஒரு கட்டத்தில் 4 பேரும் இரண்டு குழுக்களாக பிரிய நேரிடுகிறது.
இதில் எத்தனை பேர் தப்பி வந்தார்கள் என்பதை படத்தில் பாருங்கள்.
காடு, மலை , அருவி என வளைத்து வளைத்து படம் எடுத்து இருக்கிறார்கள். லொக்கேஷன்கள் எல்லாம் செமயா இருக்கு.
நல்ல படம் கண்டிப்பாக பார்க்கலாம் 👍
கருத்துகள்
கருத்துரையிடுக