சமீபத்தில் பார்த்த தொடர்களில் ரொம்பவே சிறப்பான தொடர் இது.
IMDb 8.6
8 Episodes
Available @Hotstar
மருந்து என்ற பெயரில் போதைப் பொருளை விற்பனை செய்யும் பார்மா கம்பெனியால் ஏற்படும் சமூகப் பிரச்சினைகளை சொல்லும் தொடர்.
அமெரிக்காவில் நடந்த உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தொடர்.
Purdue Pharma என்னும் ஒரு மிகப்பெரிய மருந்து கம்பெனி வலி நிவாரணி மாத்திரையை அறிமுகம் செய்கிறது. அதில் Opioid எனப்படும் போதைப் பொருள் கலந்து உள்ளதால் உடனடி நிவாரணம் கிடைக்கும். ஆனால் இந்த மருந்துக்கு அடிமையாகும் வாய்ப்புகள் மிக மிக அதிகம். ஆனால் இதை எல்லாம் திறமையாக மறைத்து , வேறு வேறு பெயர்கள் சொல்லி விற்பனை செய்கிறார்கள்.
இதனை மருந்து என வாங்கி சாப்பிட நோயாளிகள் அவர்களை அறியாமல் போதைக்கு அடிமை ஆகிறார்கள்.
இந்த மருந்துக்கு அடிமையான சுரங்கத் தொழிலாளியான இளம்பெண் Betsy. அவருக்கு அந்த மாத்திரையை தெரியாமல் பரிந்துரை செய்த அந்த ஊர் டாக்டர் என ஒரு கிளை கதை போகிறது.
இன்னொருபுறம் இந்த மருந்தின் வீரியத்தை உணர்ந்து தனி ஆளாக இதை தடை செய்ய போராடும் போதைப்பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த பெண் அதிகாரி .
மூன்றாவதாக இந்த கம்பெனியை இழுத்து மூட போராடும் மூன்று வக்கீல்கள்.
கடைசியாக அந்த மருந்துக் கம்பெனி ஓனரின் குடும்பம் செய்யும் கோல்மால் வேலைகள் என செல்கிறது தொடர்.
போதைப்பொருள்களால் எவ்வாறு தனி மனிதன், அவன் குடும்பம் மற்றும் அவனை சுற்றி உள்ள அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தெளிவாக சொல்கிறது சீரிஸ்.
அதிலும் Betsy கேரக்டர் ரொம்பவே அழுத்தமானது. கண்டிப்பாக கண் கலங்க வைக்கும். Kaitlyn Devar (Unbelievable) அருமையாக நடித்து இருக்கிறார்.
அடுத்து டாக்டர் கதாபாத்திரத்தில் வரும் Michael Keaton . இவருக்கும் Betsy க்கும் உள்ள bonding அருமை.
அந்த மூன்று வக்கீல்கள் செம் ஆக்டிங். எப்படி போனாலும் ப்ரேக் போடும் கம்பெனி, அரசியல் அதையும் மீறி சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என துடிப்புடன் வேலை செய்வார்கள்.
மருத்துக் கம்பெனி President ஆக வரும் வில்லன் கேரக்டர் அருமை. கார்ட்டூன் கேரக்டர் மாதிரி மூஞ்சி +அந்த வாய்ஸ் மாடுலேஷன் அருமை.
வியாபாரம் பாக்குறது எப்படி என்று இந்த மருந்து கம்பெனிகளிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் பிரச்சினை என்று வரும் போது அதை அந்த கம்பெனி அசால்ட்டாக எதிர்கொள்ளும் விதம் ஆச்சர்யப்பட வைக்கின்றது.
கதை நடக்கும் கால கட்டம் 1990 களில் ஆரம்பித்து 2019 வரை நீள்கிறது. கதைக்களம் வருடங்கள் மாறி மாறி பயணிப்பதால் இப்போது எந்த வருடம் நடக்கும் கதையை பார்த்து கொண்டு இருக்கிறோம் என்ற சந்தேகம் வருகிறது.
பரபரப்பான தொடரை எதிர்பார்த்து வராதீர்கள். இது சீரிஸ் + டாக்குமெண்டரி இரண்டுக்கும் நடுவில் உள்ளது. அதனால் மெதுவாக தான் போகும்.
ஆனா நல்ல எங்கேஜிங்கா இருக்கும்.
Highly Recommended 🔥
கருத்துகள்
கருத்துரையிடுக