[Greek] Dogtooth Tamil Review
என்னையா படம் எடுத்து வைச்சு இருக்கீங்க.இது மாதிரி Weird ஆன ஒரு படத்தை இது வரைக்கும் பார்த்ததே இல்லை.எப்படி தான் இப்படி எல்லாம் படம் எடுக்குறானுகளோ
Next என்ன மாதிரியான லூசுத்தனம் பண்ணுவாங்கனு எதிர்பார்ப்பில் படம் நகர்கிறது
ஒரு குடும்பம் அப்பா, அம்மா, 2 டீன் ஏஜ் மகள்கள் மற்றும் மகன். அனைவரும் ஒரு மிகப்பெரிய வீட்டில் வசிக்கிறார்கள். ஆனால் தந்தை மட்டுமே வெளியே போய் வருவார். மற்ற அனைவரும் கிட்டத்தட்ட சிறைக்கைதிகள் போல உள்ளனர். வெளி உலகத்துடன் தொடர்பு சுத்தமாக கிடையாது.
பூனை தான் மனிதர்களை கொல்லும் கொடூரமான விலங்கு என நம்ப வைக்கப்படுகிறார்கள்.
Dogtooth எனப்படும் பல் விழுந்தால் தான் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் எனவும் நம்ப வைக்கப்படுகிறார்கள்.
மகனின் உடல் தேவைகளை தீர்க்க வாரம் ஒருமுறை ஒரு பெண்ணை கூட்டி வருகிறார் அப்பா 🤦
அந்த பெண் மூலமாக மூத்த மகள் சிலவற்றை தெரிந்து கொண்டு வெளியே செல்ல முயற்சி செய்கிறார்.
கடைசியில் என்ன ஆனது என படத்தில் பாருங்கள்.
படம் செம ஸ்லோ. டிஸ்டர்பிங் காட்சிகள் உள்ளன.
குடும்பத்துடன் பார்க்கலாமா என நினைக்க கூட வேண்டாம்.
Strictly 18+ . ஆபாசக்காட்சிகள் நிறைய உள்ளன
.ஆனா IMDb la rating 7.2 , அவார்டு எல்லாம் வாங்கிருக்கு போல.
இந்த படத்தை எந்த Genre ல சேர்ப்பது என்றே தெரியவில்லை.
OTT - ல் இல்லை. Subtitle sync ஆகல. Video Player -ல delay போட்டு தான் சரி பண்ணணும்
#dogtooth #greek #disturbing #family
கருத்துகள்
கருத்துரையிடுக