Delhi Crime Season 2 Tamil Review
முதல் சீசனின் மிகப்பெரிய வெற்றி காரணமாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வந்துள்ளது சீசன் 2. முதல் சீசன் மாதிரியே இதுவும் க்ரைம் இன்வெஸ்ட்டிகேஷன் த்ரில்லர்.
IMDb 8.5
5 Episodes (~3 hours total)
Tamil dub ✅
Available @Netflix
முதல் சீசன் நிர்பயா வழக்கை வைத்து எடுத்து இருப்பார்கள்.அதில் மிகப்பெரிய ப்ளஸ் Details மற்றும் ரொம்பவே ரியல்லா இருக்கும். சும்மா இன்வெஸ்டிகேஷன் மற்றும் இல்லாமல் போலீசாரின் குடும்பம் மற்றும் அதனை சுற்றி நடக்கும் சம்பவங்களையும் மிகைப்படுத்தாமல் காட்டி இருப்பார்கள்.
இந்த முறையும் உண்மையாக நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அதில் நிறைய கற்பனையை கலந்து எடுத்து இருக்காங்க. இந்த சீசன் கதையை பார்க்கலாம்.
டெல்லியில் திடீரென ஒரு நாள் வயசான 4 தாத்தா பாட்டிகள் ரொம்பவே கொடூரமான முறையில் அவர்கள் வீட்டில் கொல்லப்படுகிறார்கள். தொடரின் ஹீரோயின் வர்த்திகா தலைமையில் விசாரணை தொடங்குகிறது.
ஆரம்ப விசாரணையில் 1990 களில் இதே மாதிரி கொடூரமான கொலைகளை செய்த கச்சா பனியன் கேங் என தெரிகிறது. கிட்டத்தட்ட தீரன் படத்தில் சொல்லப்படும் பிண்ணனி கதை மாதிரி இவர்களுக்கு ஒரு வரலாறு இருக்கிறது .
இதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணையை ஆரம்பிக்கறது போலீஸ் ஆனால் எந்த தடயமும் இல்லாமல் அடுத்தடுத்து முதியோர்களை டார்கெட் பண்ணி கொடூரமான முறையில் கொல்கிறது இந்த கும்பல். இவர்களை எப்படி பிடித்தார்கள் எனபதை தொடரில் பாருங்கள்
முதல் இரண்டு எபிசோட்கள் மெதுவாக டென்ஷனை பில்டப் பண்ணுகிறது. அதற்கு அடுத்த எபிசோட்கள் முழுவதும் இன்வெஸ்டிகேஷன் மற்றும் இந்த குரூப்பை பிடிப்பது என செல்கிறது.
அதோடு மட்டுமல்லாமல் சமூகத்தில் ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் மீது எவ்வளவு எளிதாக போலீஸ் அடக்கமே முறையை காட்டுகிறது என்பதையும் சொல்கிறது தொடர்.
முதல் சீசனில் வந்த வர்த்திகாவின் டீம் இதிலும் அப்படியே தொடர்கிறது .
பரபரவென போய்ட்டு பொசுக்குனு முடிஞ்சது. முதல் சீசனுடன் கம்பேர் பண்ணாம பாருங்க . நல்லா சீரிஸ் இது கண்டிப்பா பாக்கலாம் .
போலீஸ்காரர்களின் பர்சனல் வாழ்க்கை தவிர வேறு எந்த தொடர்பும் முதல் சீசனுடன் கிடையாது. அதனால் நேரடியாக இரண்டாவது சீசன் பாக்கலாம். ஆனால் சீரிஸ் உடன் நல்ல கனெக்ட் வேண்டும் என்றால் முதல் சீசன் பார்த்துவிட்டு பாருங்கள் 👍.
Worth Watching 🔥
கருத்துகள்
கருத்துரையிடுக