Blood Work Tamil Review
IMDb 6.4
Tamil dub ❌
OTT ❌
ரிட்டயர்ட் ஆன போலீஸ் மற்றும இதயமாற்று அறுவை சிகிச்சை செஞ்ச ஹீரோ சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு கொலை கேஸை விசாரிக்க வருகிறார். கொலையாளியை கண்டுபிடித்தாரா என்பதை படத்தில் பாருங்கள்.
சுருக்கமாக சொல்லனும் என்றால் தாராளமாக படத்தை பார்க்கலாம்.
Clint Eastwood (Unforgiven, Richard Jewell) எனக்கு மிகவும் பிடித்த ஒரு இயக்குனர் + நடிகர். மனுசனுக்கு 90+ வயசு ஆகுது.. இந்த படம் வந்தப்ப கண்டிப்பாக 70+ இருந்து இருக்கும். தானே இயக்கி அந்த படத்துல நடிகராக நடிச்சு ரெக்கார்ட் எதுவும் வச்சு இருப்பார்னு நினைக்கிறேன். மனுஷன் தன் வயசுக்கு ஏத்த மாதிரி கரெக்டான ரோல் பிடிச்சுருவாரு.
படத்தோட ஆரம்பத்துல ரிட்டயர்டான நிலையில் இருக்கும் போலீசான Mccaleb குற்றவாளியை துரத்துகிறார். அவனை பிடிக்கும் சமயத்தில் ஹார்ட் அட்டாக் வந்து கீழே சரிகிறார்.
2 வருடத்துக்கு அப்புறம் படம் நகர்கிறது.ரிட்டயர்டான ஹீரோ இதயமாற்று அறுவை சிகிச்சை முடிந்து நார்மல் வாழ்க்கைக்கு திரும்புகிறார்.
அப்ப ஒரு பெண் வந்து தன் சகோதரி கொல்லப்பட்டார் என்றும் போலீஸ் திணறுவதாகவும் நீங்கள் தான் யார் கொலையாளி என கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார்.
முதலில் மறுத்தாலும் அந்த பெண் சொல்லும் சில விஷயங்களால் மனம் மாறி உதவுவதாக ஒத்துக் கொள்கிறார்.
அதற்கு பின்னர் இவர் விசாரணையில் பல திடிக்கிடும் உண்மைகள் வெளிவருகிறது. அவர் செய்யும் விசாரணைகள் அருமை.
.
சில விஷயங்களை நாம் யூகித்து விடலாம். கடைசியில் கொஞ்சம் ஸ்லோவான மாதிரி இருந்தது .
ரொம்ப பெரிய பெரிய ஆக்சன் சீக்குவென்ஸ், பரபரவென பல திருப்பங்கள் கொண்ட படங்கள் இல்ல இது. கொஞ்சம் மனிதாபிமானம், லைட்டா காதல் , இனவெஸ்ட்டிகேஷன் என போகும்.
ஆனால் நல்லா எங்கேஜிங்கா இருக்கும். கண்டிப்பாக பார்க்கலாம் 👍
கருத்துகள்
கருத்துரையிடுக