Black Bird -Apple Tv Mini Series Tamil Review
Apple Tv ல வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் Crime, Investigation Thriller வகையை சேர்ந்த ஒரு மினி சீரிஸ்.
IMDb 8.4⭐
1 Season, 6 Episodes (1 Episode 5th Aug Release )
Tamil dub ❌
உண்மையாக நடந்த சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட சீரியல் கில்லர் பற்றிய தொடர்.
கண்டிப்பாக பார்க்கலாம் 👍
1990 களில் நிறைய பெண்கள் காணமல் போய் விடுகிறார்கள் . ஒரு டிடெக்டிவ் துப்பறிந்து ஒருத்தனை கைது பண்ணி விசாரிக்கும் போது அவன் தன்னை அறியாமல் உண்மையை ஒத்துக் கொள்கிறான். ஆனால் ஒவ்வொரு விசாரணையின் போதும் வேற வேற கதையை சொல்கிறான்.
கொடுத்த ஸ்டேட்மெண்ட் வச்சு அந்த கொலைகாரனை ஜெயில்ல அடைத்து விடுகிறார்கள். ஆனால் ஆதாரம் எதுவும் இல்லாமல் அவன் வெளியே எளிதாக வந்துவிடுவான்.
போலீஸில் ஒரு குரூப் இவன் சும்மா Attention Seeking னு சொல்றாங்க.
இன்னொரு லேடி டிடெக்டிவ் போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் வைத்து இருந்த கேஸ்ல 10 வருஷ தண்டனை பெற்று ஜெயில்ல இருக்கும் ஹீரோவை இந்த கொலைகாரன் இருக்கும் ஜெயிலுக்கு அனுப்பி அவன் கூட நட்பாகி பிணங்களை புதைந்த இடங்களை கேட்டு சொன்னா உனக்கு விடுதலை என்று சொல்கிறார்.
ஹீரோவும் டீல்க்கு ஓகே சொல்லி அந்த கொலைகாரன் இருக்கும் ஜெயிலுக்கு செல்கிறார். உண்மையை கண்டுபிடித்தாரா என்பது தான் மிச்ச தொடர்.
செம ரைட்டிங்.. ஆனால் ஸ்லோ பர்னிங் + கேரக்டரை வைத்து நகரும் டிராமா. அதனால் பரபரனு எதிர்பார்க்காமல் பாருங்கள்.
Dennis Lehane உருவாக்கத்தில் தான் இந்த தொடர் வந்து உள்ளது. The Outsider - Mini Series , Mystic River, Gone Baby Gone போன்ற படங்களின் ரைட்டர் இவர்.
நல்ல gripping ஆன சீரிஸ்.
Highly Recommended 🔥
Watch Trailer:
கருத்துகள்
கருத்துரையிடுக