Prehistoric Planet Tamil Review - 2022 66 மில்லியன் வருஷத்துக்கு முன்னாடி டைனோசர்கள் மற்றும் அதோடு வாழ்ந்த விலங்குகளின் உலகிற்கு நம்மை கூட்டிச் செல்லும் Documentary Series இது. IMDb 8.5 Episodes 5 Tamil Subs ✅ கடல், பாலைவனம், நல்ல தண்ணீர்,ஐஸ் மற்றும் காடுகளில் இவற்றின் வாழ்கையை சொல்லும் தொடர். Apple Tv + தயாரிப்பில் பிரபலமான David Attenborough குரலில் வெளிவந்ததுள்ளது . இருக்குற எல்லா டெக்னாலஜி, கற்காலத்தை பற்றிய ஆராய்ச்சிகள், கற்பனைத்திறன் என எல்லாவற்றையும் கலந்து ஒரு பக்காவானா தொடரை கொடுத்து இருக்கிறார்கள். ஜிராஸிக்பார்க் படங்கள் மற்றும் இன்ன பல படங்களில் காட்டப்பட்ட டைனோசர்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்து இருக்கும் என்பதை டெக்னாலஜி உதவியுடன் கொடுத்து இருக்கிறார்கள். இன்னொரு முக்கியமான விஷயம் Hans Zimmer ன் இசை. பிண்ணனி இசை செமயாக உள்ளது. நல்ல சவுண்ட் சிஸ்டம் உடன் பார்ப்பது சிறப்பு. David Attenborough அவர்களின் குரல் இன்னொரு பெரிய ப்ளஸ். கண்டிப்பாக குழந்தைகளுடன் பாருங்கள் 👍 Highly Recommended 🔥🔥🔥🔥🔥 Don't miss it.
ஹாலிவுட் மற்றும் கொரியன் திரைப்பட விமர்சனங்கள் - Hollywood and Korean Movie Reviews in Tamil